அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, March 6, 2010

அன்புள்ள அம்மாக்களுக்கு


இதோ தேர்வு நெருங்கிவிட்டது தங்களின் அன்புச்செல்வங்களுக்கு[ இங்கு [துபையில்]இன்றிலிருந்து என் மகனுக்கு எக்ஸாம் ஆரம்பம்.]
இந்தியாவில், மார்ச் ஏப்ரலில்]

கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டிய நேரம், தந்தைகளைவிட,
தாய்களுக்கு
பொறுப்புணர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் இருக்கவேண்டும்.

இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலும் தேவையான ஆகாரமும் கண்டிப்பாக தேவை
நல்ல ஊட்டமுள்ள சத்தான ஞாபகசக்திக்கு உகந்த உணவு கொடுக்கவேண்டும்
ஜூஸ்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கிய வல்லாரை போன்ற ஞாபகசக்தியை தூண்டும் வகையில் உள்ள ஆகாரம் கொடுக்க வேண்டும்

அடுத்து எந்த நேரமும் படி படி எனசொல்லாமல் நேரம் ஒதுக்கி படிக்கச்சொல்லுங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகம் கண்விழிக்கவிடவேண்டாம் அதை தவிர்த்து நேரத்தோடு உறங்கவைத்துவிட்டு அதிகாலையில் எழுப்பி படிக்கச்சொல்லுங்கள்

இரண்டொருநாள் சிரமமாக இருக்கும் பின் தானே எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
அதிகாலையின் படிப்பு கட்டாயம் மனதில் பதியும்.

இதயெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு உங்களின் அன்பும் ஆதரவும் கனிவான பேச்சும்தான்

ஊக்கம்கொடுப்பதென்பது அனைத்தயும்விட நல்ல டானிக்.
நீ நன்றாக படிப்பாய், நன்றாக எழுதுவாய், நம்பிக்கைவைத்துப்படி எல்லாம் நல்லதாகவே நடக்கும்என அவர்களுக்கு அடிக்கடி தைரியமூட்டுங்கள்
சுமையை சுமப்பவர்களுக்கு  சுமையின் வலியும், வேதனையும், அதன் அளவும்புரியும்.அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்.

அதேபோல் முதல்நாள் இரவே பரிட்சைக்குண்டான அனைத்தையும் தயார் செய்து ரெடியாக வைத்துவிடுங்கள். அப்புறம் கடைசிநேரத்தில் பென்சிலை வைத்துவிட்டானே! ஸ்கேலை வைத்துபோய்விட்டானே என நீங்கள் டென்ஷனாகி அவர்களையும் டென்ஷனாக்காமல் இருக்க கவனத்துடன் தேவையானதை நீங்களே அவர்களிடம் எடுத்துவைக்கச்சொல்லி பக்கத்தில் இருங்கள்.


ஆதலால் தாய்மார்கள்தான் அதிக அளவில் அக்கரை கொள்ளவேண்டும்.ஏனென்றால் அதிகநேரம் தாய்மார்களின் அரவணைப்பில்தான் பிள்ளைகள் இருக்கிறது

[தற்போது அதெல்லாம் இல்லை தாய் தந்தை இருவருமே வேலை வேலையென சென்றுவிடுவதால் பிள்ளைகளின்பாடு சற்று திண்டாட்டம்தான் இருந்தாலும் தாயல்லவா நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்]

வெற்றி தோல்வி என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று அதனால் எதுவாக
இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவத்தை அவர்களுக்குள் உருவாக்குங்கள்
அதற்குமுன் நீங்களும் அதற்கு தயாராகுங்கள்.

நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
இறைவனின் உதவியால்..

அன்புடன் மலிக்கா

11 comments:

Jaleela said...

எல்லா அம்மாக்களுக்கும், பயனுள்ள பதிவு , என் பையனுக்கும் இன்று தான் தேர்வு ஆரம்பம்

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் பதிவை படிக்கச் சொல்லி என்மனைவியிடம் பரிந்துரைச் செய்தேன்

ஜெய்லானி said...

நல்ல டிப்ஸ்தான். கேட்கதான் ஆள் வேனும்.

ஸாதிகா said...

நல்ல டிப்ஸ் .அருமையாக கொடுத்து இருக்கின்றீர்கள் .அனைத்து மாணாக்கர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.உங்கள் மகனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.

அண்ணாமலையான் said...

நல்லா நடக்கட்டும்

சே.குமார் said...

//நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
இறைவனின் உதவியால்..//

it's true. azhagana, oru nalla pakirvu. vazhththukkal.

சே.குமார் said...

//நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
இறைவனின் உதவியால்..//

it's true. azhagana, oru nalla pakirvu. vazhththukkal.

சே.குமார் said...

//நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
இறைவனின் உதவியால்..//

it's true. azhagana, oru nalla pakirvu. vazhththukkal.

sarusriraj said...

சூப்பர் மலிக்கா அருமையான ஆலோசனை ,மரூப்பிற்கு வாழ்த்துக்கள்

பிரோஷாபானு said...

சகலகலா வள்ளியே! சமத்துடிமா நீ..

கொடுதுவைத்தபிள்ளைகள் உன்னுடையது நீ அம்மாவாக கிடைக்க..

அன்பான யோசனை அறிந்துக்கொள்ளுங்கள்.. எனக்கு இன்னும் 7 மாசமிருக்கு பிள்ளைபிறக்க
பிறந்ததும் நானும் கவனமாகைருக்கேன் பள்ளிக்கு அனுப்பும்போது சரியா.

பிரோஷபானு..

பிரோஷாபானு said...

சகலகலா வள்ளியே! சமத்துடிமா நீ..

கொடுதுவைத்தபிள்ளைகள் உன்னுடையது நீ அம்மாவாக கிடைக்க..

அன்பான யோசனை அறிந்துக்கொள்ளுங்கள்.. எனக்கு இன்னும் 7 மாசமிருக்கு பிள்ளைபிறக்க
பிறந்ததும் நானும் கவனமாகைருக்கேன் பள்ளிக்கு அனுப்பும்போது சரியா.

பிரோஷபானு..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.