அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, February 7, 2010

இரால்கோலா கறி. பொரியல்

தேவையான பொருட்கள்


இரால் 1/4 கிலோ

தேங்காய் 1

சிறியவெங்காயம் 10

பல்லாரி 3

தக்காளி பழுத்தது 3

பச்சைமிளகாய் 2,3,

கறுவேப்பில்லை

தனியா 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 ஸ்பூன்

மிளகாய்தூள் காரத்திற்கேற்ப

புளிப்புக்கேற்ற புளி கொஞ்சம்
வெந்தயம்
உப்பு
ஆயில்
முழுசீரகம் சோம்பு கொஞ்சம்

மீதமுள்ள இராலையும் அதனுடன் முழு சீரகம்சோம்பு கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து
தண்ணிருக்கு பதிலாக முட்டையை ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும் கடைசிஅரையலின்போது
சிறியவெங்காயமும் ப, மி. உப்பும் சேர்த்து அரைக்கவும்


இதேபோல்[கொஞ்சம் கொரகொரப்பாக]
ஒரு சட்டியில் வெந்தயத்தை வருத்துவிட்டு அதில் ஆயில்விட்டு நருக்கிய பல்லாரி தாக்காளி போட்டு வதக்கவும்

அது நன்றாக வதங்கியதும் அதில் மசாலாக்களை தேவையான அளவு


தண்ணீவிட்டு புளியைகரைத்து அதனுடன் இந்த இராலையும்


நன்றாக நொருங்கபிசைந்து வதங்கியதில் ஊற்றவும்

அரைத்து வைத்துள்ள இந்த கோலாவை ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் போடவும்




பின்பு ஒரு 2 நிமிடம் தீயை மிதமாகவைய்க்கவும் பின் திறந்து தேங்காய்பால் ஊற்றி


தளித்த்தவைகளைபோட்டு பரிமாருவதற்குமுன் கொத்தமல்லி தூவவும்


ஒரு பிரேஃபானில் 2 ஸ்பூன் ஆயில்விட்டு இதேபோல்சிறிய சிறிய வடையாகவும் போட்டு


இருபுறமும் சிவக்கவிட்டு சுட்டு எடுக்கலாம்


இது மிகுந்தசுவையுடன் கூடிய ஒரு ரெசிபி


இது மிக மிக அருமையான ஒருடிஸ் சுவையாகவும் அதேசமயம் செய்யம்போதே
வாசனை பலமாகி சாப்பிட தூண்டும்
சாதம் இடியப்பம் மற்றும் எல்லாவற்றிற்கும் ஏற்ற ரெசிபி

10 comments:

நாஸியா said...

மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்.. கலக்குறீங்க..


ஹலோ லாத்தா.. நான் பேசாம ஒரு நாள் உங்க வீட்டுக்கும் இன்னொரு நாள் ஜலீலாக்கா வீட்டுக்கும் வர போறேன் ஆமா... இதெல்லாம் நாங்க செஞ்சா பக்குவம் வராதுல்ல.. அதனால தான்.. அப்பா பார்க்கும்போதே வாய் ஊறுது.. இங்க வந்து இறால் சாப்பிடவேயில்லை தெரியுமா (உரிச்சு கழுவ சோம்பல், வேறென்ன)

அன்புடன் மலிக்கா said...

நாஸியாப்பொன்னு, இங்கே [துபையில்] மீன்மார்கெட்டிலேயே உரிச்சும் தாராங்கப்பா காசுகொடுத்தா.
அதனால கழுவி விட்டு சமைச்சாபோதும் ஓகே..

தாராளமா வாங்கப்பா என்ன என்ன வேணுமோ செய்துதாரேன்..

பித்தனின் வாக்கு said...

// ஹலோ லாத்தா.. நான் பேசாம ஒரு நாள் உங்க வீட்டுக்கும் இன்னொரு நாள் ஜலீலாக்கா வீட்டுக்கும் வர போறேன் ஆமா... இதெல்லாம் நாங்க செஞ்சா பக்குவம் வராதுல்ல.. அதனால தான்.. அப்பா பார்க்கும்போதே வாய் ஊறுது.. இங்க வந்து இறால் சாப்பிடவேயில்லை தெரியுமா (உரிச்சு கழுவ சோம்பல், வேறென்ன) //
ஹலோ நாஸியாம்மா போகும்போது என்னையும் கூட்டிப் போங்க(பிளைட் டிக்கெட் மிச்சம்). கொஞ்சம் ருசியா சாப்பிட்டு வரலாம். மலிக்கா வீட்டில் நாலு நாளும்,ஜலில்லா வீட்டில் ஒரு வாரம் தங்கி ஒரு நாலு கிலோ வெயிட் ஏத்தி வரலாம்(ஒரு வாரம் செலவு மிச்சம்).என்ன சொல்றிங்க. நல்ல பதிவு. (சாப்பிடாவிட்டாலும் )

தேவன் மாயம் said...

அசத்துங்க!! நான் சாப்பிடப்போறேன்!!

அண்ணாமலையான் said...

அட்டகாசமா செய்யறீங்க...

நாஸியா said...

அட மீன் மார்கெட் வீட்டு பக்கத்துல தானே இருக்கு.. நாங்களும் போகனும், போகனும்னு ஒரு நாளும் போனதே இல்ல.. இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்..

உங்க மெயிலுக்கு அனுப்பினா பதில் வர மாட்டிருக்கே... மெயில் பண்ணுங்க அக்கா.. என் ஐடி இருக்கு தானே..

___

சுதாகர் அண்ணே ஆமா நல்ல ஐடியாத்தான்..

Unknown said...

இது ரொம்ப புதுவையாக இருக்கு.. பார்த்தவுடனே சுவைக்கனும் போல இருக்கு

வேலன். said...

தங்கள் மகனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி...
பதிவு அருமை.சாப்பிடும் ஆவலை தூண்டுகின்றது.
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸாதிகா said...

சமையலும்,படங்களும்,பின்னூட்டங்கலும் அருமை.

ஹுஸைனம்மா said...

இறால் வடை செய்வதுண்டு. இது என்ன் பேரே புதுசா இருக்கு - கோலா?

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.