அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 10, 2010

பச்சைப்பயர், கொள்ளு கேக்

               
தேவையானவைகள்

கொள்ளு ¼ கப்

பச்சைப்பயர் உடைத்தது ¼ கப்

வெள்ளை உளுந்து ¼ கப்

ஜீனீ 2 கப்

முட்டை 2

பசு நெய் 3 ஸ்பூன்

வெண்ணை 3 ஸ்பூன்

ரையின்போ மில்க் 1 கப்

முந்திரி திராட்சை

சாக்லெட்
              
கொல்லு ப, பயிர் உளுந்து மூன்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். ரொம்ப நைசாகவேண்டாம்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதனுடன் நெய் வெண்ணை ஜீனீ உப்பு சேர்த்து

நன்றாக அடித்துக்கொள்ளவும்

அதனுடன் அரைத்து கலவையை சேர்த்து கொஞ்சம் கலக்கவும்
ஒவனில் கேக்செய்யும் பேசனில் கொஞ்சம் நெய்விட்டு சூடாக்கி
அதில் இந்த மாவுக்கலவையை ஊற்றவும்
ஈவனானதும் அதன்மேல் வருத்த அல்லது வருக்காத முந்திரி திராட்சையை அலங்கரித்து
ஓவனில் 20  நிமிடம் வைக்கவும்

 நல்லமனத்துடன் ரெடியாகிவிடும்
வெளியில் எடுத்து சாக்லெட்டை அதன்மேல் துருவவும்
அந்தசூட்டிலேயே சாக்லெட் மெல்ட்டானதும்
               
இதுபோல் கட்செய்து சாப்பிடவும்.
இது உடலுக்கு மிகவும் நல்லது ஊட்டச்சத்துமிக்க உணவு.

குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

அன்புடன் மலிக்கா

14 comments:

சாருஸ்ரீராஜ் said...

malikka romba nalla irukku oven illathavunga enna pannurathu

Jaleela Kamal said...

வாவ் ரொம்ப சூப்பர் கேக்.
கொள்ளு, பாசிபயறிலா?ரொம்ப‌ அருமை. நானும் இன்று பாசிப்ப‌ய‌று ரெசிபி தான் போட்டு இருக்கேன், ஆகையால் கிரீச்.....

Anonymous said...

இந்த ரெசிபி எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க‌

அன்புடன் மலிக்கா said...

sarusriraj said...
malikka romba nalla irukku oven illathavunga enna pannurathu/

ஓவன் இல்லாவிட்டால்.
இந்தகலவையை நெய்தடவிய பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பை மிதமாக வைத்து ஒரு மூடிபோன்றத மண்பரப்பி அது சூடானதும் அதன்மேல் இந்த கலவைப்பாத்திரத்தை வைத்து மூடிவிட்டு சிஒறிதுநேரம்கிழித்து திறந்து பார்த்து பின் மூடிய பாத்திரத்தின்மேல் கனமாக மண்நிறப்பிய [கீழேவைத்ததுபோல்] மேலே வைத்து கொஞ்சநேரம் கழித்து பார்த்தால் இதுபோலிருக்கும்

நான் செய்ததில்லை உங்க ஊரில் தம்ரூட் அதுபோல் செய்வார்கள் அதே மெதெடுதான் இதுவும், செய்து பாருங்க சாரூக்கா..

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
வாவ் ரொம்ப சூப்பர் கேக்.
கொள்ளு, பாசிபயறிலா?ரொம்ப‌ அருமை. நானும் இன்று பாசிப்ப‌ய‌று ரெசிபி தான் போட்டு இருக்கேன், ஆகையால் கிரீச்/

ஓகோ அப்படியா இதோ வாரேஏஏஏஏஏன்

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
இந்த ரெசிபி எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க‌/

ஹி ஹி வெட்டியா இருக்கோம் இதக்கூட கண்டுபிடிக்கலைன்னா எப்படி
நாஸியா. நாஸியா ஐடி இல்லப்பா
ப்லீஸ் கொஞ்சம் தாங்கோ

ஜெய்லானி said...

பச்சைப்பயரு கஞ்ஜி தெரியும்,ஓவன் வைத்தால்;, அது ஃப்ரை ஆகிவிடாது .(டேஸ்டில் எப்படி??)

ஹுஸைனம்மா said...

புதுசாத்தான் இருக்கு. புட்டிங் வகையோ?
1. பாசிப்பயறு பருப்புன்னா, பாசிப்பருப்பு/சிறுபருப்பு - இதத்தானே சொல்றீங்க.
2. அப்புறம் பருப்புகளை வறுக்கவோ, வேகவைக்கவோ வேண்டாமா? ஓவனில் வைப்பதிலேயே வெந்துவிடுமா?

ஓவன் இல்லாதவங்க, ஆவியில் வேகவைத்தும் செய்யலாம்னு நினைக்கிறேன், சரியா?

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
பச்சைப்பயரு கஞ்ஜி தெரியும்,ஓவன் வைத்தால்;, அது ஃப்ரை ஆகிவிடாது .(டேஸ்டில் எப்படி??)/

கேள்வி புரியவில்லை ஜெய்லானி.

பச்சைப்பயரை அப்படியே வைத்தால் ப்ரையாகிடும். ஆனால் இது பொடித்து கலவையில் வைப்பதுதானே எப்படி ப்ரையாகும்..

அப்புறம் இந்த டேஸ்ட் வித்தியாசமாக இருமையாக இருக்கும் மிகவும் ஷாஃப்ட்டாகவும் இருக்கும்..

வேலன். said...

சூப்பர் கேக்... வாழ்க வளமுடன் வேலன்.

பித்தனின் வாக்கு said...

Realy coke is super, is there any alternative for egg.

Menaga Sathia said...

சூப்பர் கேக்...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப‌ அருமை

ஸாதிகா said...

இது பசசை பயிறு வாரமா?நிறைய பிளாக்கில் பச்சைப்பயிறு மயமாக இருக்கே!வித்தியாசமாகவும் இருக்கு மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.