அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 17, 2010

நொடியில் பிரட் பஜ்ஜி


தேவையானவைகள்

கடலைமாவு 1 கப்

இடியப்பமாவு 1/4 கப்

இஞ்சிபூண்டுவிழுது 1/2 ஸ்பூன்

மிளகுதூள் சிறிதளவு

கலர் அல்லது குங்குமப்பூ சிறிது

உப்பு

பிரட் 5 6

ஆயில்


பிரட்டை நீளவாக்கில் கட்செய்துகொண்டு, மாவுகளை கெட்டியாக [சற்றுதளர்ச்சி]கரைத்துக்கொண்டு


பிரட்டை உடைத்துவிடாமல் சற்றுகவனமாக மாவில் நனைத்துப்போடவும்


இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்


இது உடனடியாக செய்யக்கூடிய ரெசிபி

கிரிஷ்பியாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்

அன்புடன் மலிக்கா

13 comments:

ஜெய்லானி said...

நீங்களா சொன்னாதான் தெரியும்.பார்க்க வாழைகா பஜ்ஜி போலவே இருக்கு. தொட்டுக்க ஜாமா?? இல்லை வேர்கடலை சட்னியா???. சூப்பர்.....

'பரிவை' சே.குமார் said...

சாப்பிட ஆசை... ம்... ஊருக்குப்போனாத்தான்..!

பிரபாகர் said...

மிக எளிதாய் செய்து சாப்பிட ஒரு அருமையான ரெசிபி. இடியாப்ப மாவுக்கு பதிலாய் அரிசி மாவினை உபயோகிக்கலாமா சகோதரி? இடியாப்ப மாவு என தனியாய் கிடைக்குமா என தெரியவில்லை.

பிரபாகர்.

நாஸியா said...

enakkum pudikkum bread bajji.. :D edho sumara seiven

சாருஸ்ரீராஜ் said...

எளிதான சுவை மிகுந்த ரெசிபி , கைவசம் எல்லா பொருட்களும் இருக்கு உடனே செய்து பார்த்துவிட வேண்டியது தான்.

அன்புடன் மலிக்கா said...

அரிசிமாவும் சேர்க்கலாம் பிரபாகரண்ணா. இது கிரிஸ்பிக்காக சேர்ப்பதுதான் மற்றபடி அரிசிமாவும் இடியப்பாவும் ஏதாவது ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்..

[இடியப்பமாவும் இப்பலெல்லாம் ரெடிமேடாக கிடைக்கிறது அண்ணா]

திவ்யாஹரி said...

வாழைக்காய் பஜ்ஜி போலவே உள்ளது தோழி.. கோதுமை ரவா பரோட்டா நல்லா இருந்துச்சி தோழி.. செய்து சாப்பிட்டோம்.. நன்றி..

ஹுஸைனம்மா said...

ஸிம்பிள் & டேஸ்டி ரெஸிப்பி!!

ஹேமா said...

ம்ம்ம்....வீணாகிப் போகாமலும் திடீரெனச் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது மலிக்கா.நன்றி.

dharshini said...

nice photos and easy receipe.. thanks mallika

priyamudanprabu said...

அட போங்க அக்க பசி நேரத்துல

Jaleela Kamal said...

ஆமாம் மலிக்கா பார்க்க வாழக்காய் பஜ்ஜி போலவே இருக்கு.

பிரெட்டில் செய்வதால் நல்ல சத்தும் கூட இல்லையா?
ஈசியான மாலை நேர சிற்றுண்டி

இனியன் பாலாஜி said...

மலிக்காஜி பாத்தாலே நாவில் நீர் சுரக்கிறது
ஆனால் ஏற்கனவே குண்டாக இருப்பதால் வேண்டாம் .

இந்த படத்தை அவ்வப்போது பார்த்து ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.
என் மகள் நியுட்ரிஷன் வேறு.
எதுக்கு வம்பு
anbudan
பாலாஜி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.