அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, June 7, 2010

சாஃப்ட் கேக்.


தேவையானவை.

வறுத்த ரவை 1 கப்
இடியப்பமாவு[அரிசிமாவு] 1  கப்
முட்டை 2
பட்டர். அல்லது, பசு நெய் 1/4  கப்
ஜீனி 1 கப்
முந்திரி
சக்லேட் 1
பேக்கிங்சோடசிறிதளவு
உப்பு சிறிதளவு

முட்டையை நன்றாக அடித்துகலக்கி கொண்டு அதில் நெய்,உப்பு, சோடாப்பு, ஜீனியையும்போட்டு கலக்கி அதனுடன் ரவை, அரிசிமாவு,
போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும் பொங்கிவரும்வரை.

அதை. ஒரு ஓவன் பவுலில். அல்லது [கேக்செய்யும் ஃபானில்] சிறிது நெய் தடவி இதை அதன்மேல் சமமாக ஊற்றி. முந்திரியை நெய்யில் வறுத்தும் அதன்மேல் போடலாம் இல்லையெனில் சும்மாவும் அதன்மேல் அலங்கரிப்பதுபோல் தூவி, ஓவனில்10 நிமிடம் வைத்தால் போதும்.

சாஃப்ட் கேக் ரெடி.
வெளியில் எடுத்து இதேபோல் பிளேட்டில் வைத்து சூட்டோடு அதன்மேல் சாக்லேட் துருவிபோட்டு அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக அதே சமயம் மணத்துடனும் இருக்கும்.

ரிஸ்கி//உடனடியாக செய்ததால் ஸ்டெபென் ஸ்டெப்பாக எடுக்கமுடியவில்லை
வாயில் வைக்கப்போகும்போதுதான் நினைவுவந்தது
                                                 உடனே ஒரு கிளிக்


நேரங்கிடைக்கும் மாலைவேளையில்
இதுபோன்று செய்து
 சாப்பிடுவதும். சாப்பிடக்கொடுப்பதுமே
ஒரு கலை!

அன்புடன் மலிக்கா

25 comments:

எல் கே said...

யாரவது முட்டை இல்லாமல் கேக் செய்வது பத்தி போடுங்க

Chitra said...

mouth-watering....... I am going to try this right away. Thank you for the recipe.

அன்புடன் மலிக்கா said...

LK said...
யாரவது முட்டை இல்லாமல் கேக் செய்வது பத்தி போடுங்க.//

இதிலேயே முட்டையை தவிர்த்து நெய் அல்லது பட்டரை கூட சேர்த்து செய்து பாருங்க கார்த்திக். அருமையாக இருக்கும்.

முட்டையை பீட் செய்வதுபோல் நெய் அல்லது பட்டரை பீட்செய்து மற்றவைகளை கலக்கவேண்டும்.

Anonymous said...

Oru thundu anupi uduradhu

நாடோடி said...

இதில் குற்ற‌ம் இருக்கிற‌து... என்ன‌து!!! என்ன‌ குற்ற‌மா? பொருளில் குற்ற‌ம் இல்லை.. அதில் இருந்தாலும் சொல்லும் அள‌வு அறிவு கிடையாது.. சொல்லில் தான் குற்ற‌ம் இருக்கிற‌து... ந‌ல்லா பாருங்க‌ அந்த‌ ப‌சு நெய் 1/4 ம‌ட்டும் தான் இருக்கிற‌து.. அது க‌ப்பா? கிலோவா? சொல்ல‌வே இல்லையே.. எப்ப‌டி க‌ண்டுபிடிச்சேன் பாத்தீங்க‌ளா?....... ந‌ம்ம‌‌ சித்ரா மேட‌ம் கூட‌ இப்ப‌வே செய்ய‌ போறாங்க‌ளாம்.. அவ‌ங்க‌ளுக்கு கூட‌ இந்த‌ ட‌வுட் வ‌ர‌ல‌ பாத்தீங்க‌ளா?..

Jaleela Kamal said...

அப்ப இது த்ரி கப் கேக்கா?

Jaleela Kamal said...

புது வீட்டுக்கு ஷாப்ட் கேக்கோடு நுழைந்தாச்சு அருமை இதோ உடனே செய்து விட வேண்டியது தான்.

ராமலக்ஷ்மி said...

ரிஸ்கி இல்லேங்கோ. அது ‘டிஸ்கி’:))!

அரிசிமாவில் கேக் செய்யலாம் என்பதே புதுசு எனக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நல்லவேளை கடைசியிலாவது எங்களுக்காக படம் எடுக்கணுமெனத் தோன்றியதே:)! நன்றி மலிக்கா.

ஜெய்லானி said...

கேக் பாக்கவே சூப்பரா இருக்கு....அப்ப இனிமையாவும் இருக்கும் போல்....

ஜெய்லானி said...

//அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக //

இப்படியா ஒரு கொயந்தைய வெறுப்பேத்துவது.......

//நேரங்கிடைக்கும் மாலைவேளையில்
இதுபோன்று செய்து சாப்பிடுவதும். சாப்பிடக் கொடுப்பதுமே ஒரு கலை!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது கேக் & new template...

காஞ்சி முரளி said...

சூப்பராக இருக்கின்றது new template...

Vijiskitchencreations said...

நானும் கேக் சாப்பிட வந்துட்டேன் மல்லி.சூப்பரா இருக்கு. முட்டை இல்லாமல் செய்யலாம் நான் நிறய்ய தடவை செய்துள்ளேன். மில்க்மெய்ட், கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்து செய்யவும். சூப்பரா இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
mouth-watering....... I am going to try this right away. Thank you for the recipe.//

டிரைப்பண்ணிப்பாருங்க சித்ராமேடம்.
நன்றிமா..




நாஸியா said...
Oru thundu anupi uduradhu.//

ஆகா கொயந்த கேட்டுடுத்தே இன்னாசெய்வது நான் அப்பால வரயில செஞ்சி எடுத்துன்னு வாரேன் கொயந்தே. ஓகேவா.

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
இதில் குற்ற‌ம் இருக்கிற‌து... என்ன‌து!!! என்ன‌ குற்ற‌மா? பொருளில் குற்ற‌ம் இல்லை.. அதில் இருந்தாலும் சொல்லும் அள‌வு அறிவு கிடையாது.. சொல்லில் தான் குற்ற‌ம் இருக்கிற‌து... ந‌ல்லா பாருங்க‌ அந்த‌ ப‌சு நெய் 1/4 ம‌ட்டும் தான் இருக்கிற‌து.. அது க‌ப்பா? கிலோவா? சொல்ல‌வே இல்லையே.. எப்ப‌டி க‌ண்டுபிடிச்சேன் பாத்தீங்க‌ளா?....... ந‌ம்ம‌‌ சித்ரா மேட‌ம் கூட‌ இப்ப‌வே செய்ய‌ போறாங்க‌ளாம்.. அவ‌ங்க‌ளுக்கு கூட‌ இந்த‌ ட‌வுட் வ‌ர‌ல‌ பாத்தீங்க‌ளா?..//

அச்சோ என்னா கண்ணுப்பா கண்டுபிடிச்சிட்டேளே ஸ்டீபன். ரொம்ப தேங்ஸ்மா. அத அப்பவே சரிபண்ணிட்டோமுல்ல..

பாவம் சித்ராமேடத்தை ஒன்னும் சொல்லாதேள் அவுக வேகமா வந்து பாத்ததுல விட்டுப்போயிருக்கும்..

மிக்க நன்றி ஸ்டீபன்

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...
புது வீட்டுக்கு ஷாப்ட் கேக்கோடு நுழைந்தாச்சு அருமை இதோ உடனே செய்து விட வேண்டியது தான்.//

செய்து தன்னே சாப்பிட்டுவிடாம இந்த தங்கைக்கும் வையுங்கோ போன்போட்டா பறந்து வந்துடுவேன்..




Jaleela Kamal said...
அப்ப இது த்ரி கப் கேக்கா?//

ஆகா பெய்ர்கூட வச்சிட்டீங்களா திரீகப் கேக்குன்னு நல்லாதானிருக்கு..

அன்புடன் மலிக்கா said...

ராமலக்ஷ்மி said...
ரிஸ்கி இல்லேங்கோ. அது ‘டிஸ்கி’:))!//

ஆமாமேடம் அது ரிஸ்கிதான் நான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு ஒவ்வொரு முறை ஒன்னுஒன்னாபோடுறேன் ஹாஹா..

//அரிசிமாவில் கேக் செய்யலாம் என்பதே புதுசு எனக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நல்லவேளை கடைசியிலாவது எங்களுக்காக படம் எடுக்கணுமெனத் தோன்றியதே:)! நன்றி மலிக்கா.//

தோன்றியதும் கிளிக் செய்துவிட்டேன் அப்பாடா. செய்துபாருங்க மேடம் ரொம்ப டேஸ்டியா இருக்கும்.

ரொம்ப நன்றி மேடம்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக //

இப்படியா ஒரு கொயந்தைய வெறுப்பேத்துவது.......//

பாவந்தான் என்னசெய்ய. கொயந்தைக்கு மச்சிகிட்ட சொல்லி செய்து அனுப்பச்சொல்லவா. இல்லாங்காட்டி நீங்களே செய்துபாருங்களேன் கொயந்தே..

//நேரங்கிடைக்கும் மாலைவேளையில்
இதுபோன்று செய்து சாப்பிடுவதும். சாப்பிடக் கொடுப்பதுமே ஒரு கலை!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இதுவேறயா அழறேளா விடுங்க விடுங்க அடுதமொற செய்யும் போது அனுப்பிவைக்கிறேன்..




//ஜெய்லானி said...
கேக் பாக்கவே சூப்பரா இருக்கு....அப்ப இனிமையாவும் இருக்கும் போல்....//

போல் அல்ல இனிமையாக வே இருக்கும்.

ரொம்ப நன்னி அண்ணாத்தே!

June 8, 2010 3:38 AM

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது கேக் & new template//

மிக்க நன்றி. கீத்து..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
சூப்பராக இருக்கின்றது new template//

அப்பாடி நெசமாவா.. ரொம்ப சந்தோஷம் முரளி. மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

Vijiskitchen said...
நானும் கேக் சாப்பிட வந்துட்டேன் மல்லி.சூப்பரா இருக்கு. முட்டை இல்லாமல் செய்யலாம் நான் நிறய்ய தடவை செய்துள்ளேன். மில்க்மெய்ட், கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்து செய்யவும். சூப்பரா இருக்கும்..//

வாங்க வாங்க. உங்களிக்கில்லாததா.
நானும் செய்திருக்கேன் விஜி.

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

Jey said...

லேடீஸ் பதிவு பக்கம் வந்தா, வித விதமான் ஐட்டங்கள்ளோட செய்முறை போட்டோ-னு போட்டு சப்பு கொட்ட வச்சி விருப்பெத்துரீங்கலேப்பா. நல்லாருங்க.

Followers 99-னா இருந்தது, அது நமக்கு பிக்காத நம்பரன்றதால , நான் Follower-ஆகி ரவுண்டா 100 ஆக்கிட்டேன்.

சாந்தி மாரியப்பன் said...

கேக் சாப்டா இருக்குமா....

செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு மல்லிக்கா

எனக்கு சிறிய வதில் இருந்து கேக் தயாரிக்கும் பேக்கரிக்குல் சென்று பார்த்துவிடவேணடும் என்ற ஆசை உண்டு இன்றுவரை ம்ம்ம்ம்ம்முடியல..

இப்போதும் கூட தயாரித்து சாப்பிட நேரம் இல்லாமையால் தயவு செய்து யாரவது மின் அஞ்சலில் அனுப்புங்கள்

Unknown said...

அருமையான செய்முறை.. நானும் பம்கின் கேக் செய்வது எப்படி என என் வலைதளத்தில் எழுதியிருக்கிறேன்!! பாருங்கள்Pumpkin Spice cake Recipe

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.