அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, June 9, 2010

ஆரோக்கியம் வேண்டுமா?

நன்றி கூகிள்
அரபகத்தின் உணவுகளில் அதிக ஆயிலோ மசாலாக்களோ கிடையாது
அவர்களின்உணவுகள் எல்லாமே நம்மைலிருந்து வித்தியாசமானவைகள்.

நெருப்பில் சுட்டெடுக்கப்பட்ட ரொட்டிகள்
பச்சைக்காய்கறிகள், பச்சை கீரைகள், பழவகைகள்
வேகவைத்த உணவுகள், கொழுப்பில்லாத பதார்த்தங்கள், இயற்கை பொருள்களின் உணவுகள் என்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறார்கள்.

சிக்கன் மட்டனைக்கூட தண்ணீரில் குங்குமப்பூ உப்பு லவங்கம் ஏலக்காய்
பிரிஞ்சி இலை என இவைகளை சேர்த்து அதில் இவைகளை வேக வைத்து முக்கால் பதம் வெந்ததும் அதில் உள்ள சிக்கனையோ மட்டனையோ எடுத்துவிட்டு அந்த தண்ணீரிலே அரிசிபோட்டு வேகவைத்து வெந்ததும் அதன்மேல் இந்த பீஸுகளை வைத்து சிறிது நேரம் தம்மிலிட்டு பின் அதைதான் சாப்பிடுவார்கள்[ அதான் கப்ஸா. மந்தி. அப்புடின்னு நிறைய பேரிருக்கு]

                                                                       நன்றி கூகிள்
அதன் சைடிஸ் என்ன தெரியுமா வெரும் பச்ச தக்காளி வெங்காயம் ப,மிளகாட் புதினா சேர்த்து கொரகொரப்பாக அரைத்த அந்த சட்னிதான்
என்னா டேஸ்டும். குங்குமப்பூ வாசமும். திகட்டாத உணவு

அதேபோல் ஆயிலில் எதையும் பொரிக்கமாட்டார்கள். எல்லாமே
நெருப்பில் சுட்ட கறிகள்தான் அதிகம் விரும்புவார்கள் அதிலும் மசாலாக்கள் கிடையாது
தயிர். மிளகுதூள். உப்பு. ஸ்பைசியாக.சில்லி சாஸ்
 கலருடன் வேண்டும் என்றால் அதில் குங்குமப்பூ
பொடிச்ச  சீரகம். ஓமம். பட்டை. பிரிஞ்சிப்பூ. சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள் அதில்
கொஞ்சம் சேர்த்து. 2 மணிநேரத்திற்கு முன்பாகவே ஊரவைத்து பின் சுடுவார்கள்.

                இது நாங்க பிக்னிக்கில் சுடும்போது எடுத்த கிளிக்.

அதன் சைடிஸ் பச்சை முள்ளங்கிகீரை கேரட் வெள்ளரிக்காய், ஹஸ் இலை. முள்ளங்கி என எல்லாமே பச்சையாக இருக்கும்
அதன்கூட கொண்டக்கடலையை வேகவைத்து அரைத்து அதில் ஆலிவ் ஆயில்ஊற்றி சாப்பிடுவார்கள்

                                                         நன்றி கூகிள்
இதனுடன் குப்பூஸ் என்னும் பலவகை நான் ரொட்டிகள் எல்லாமே
எண்ணை இல்லாதது முடிந்தவரை பழங்கள்தான் சாப்பிடுவார்கள்
மூன்றுவேளை உணவுகளில் இயன்றவரை இருவேளை ரொட்டிதான்
மட்டன் சிக்கன்கூட வேகவைதுதுதான்.
தேங்காய்பாலோ ஆயிலோ மசாலாக்களோ புளியோ கிடையாது
புளிக்கு பதிளாக புளிப்புதேவைப்பட்டால்
எழுமிச்சைபழத்தை காயவைத்து அதைத்தான் உபயோகிப்பார்கள்.

                       எப்புடியிருக்கு வாசனை வருதா

ஆரோக்கியமான இயற்கையான உணவுதானே மனிதனை ஆரோக்கியமாக
வாழவைக்க உதவுகிறது
கொஞ்சம் சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்
ஆரோக்கியமென்பது மனிதனுக்கு மிக முக்கியம் நாம் வாழ்ந்து முடியும்வரை.


நமக்கு நாமே பாரமாகவோ
நாம் பிறருக்கு பாரமாகவோ  இருக்கக்கூடாது
அதனால் முடிந்தவரை நம் ஆரோக்கியத்தை நாம்தான் காக்கவேண்டும்
ஆரோக்கியத்தின் ஒருபங்கு உணவிலும் இருக்கிறது
ஆதலால் உணவுமுறையை சரியாக பேணிக்கொள்ளுங்கள்.

வாரத்தில் 7 நாட்கள். அதில்

1 .மட்டன்
2 .காய்கறிகள்
3. கடல் உணவுவகைகள்
4 . பருப்பு வகைகள்
5 . காய்கறிகள்.

6.  சிக்கன்
7. ரசம் மோர் அப்பளம். இப்படி

வார செட்டியூல்ட் போட்டுக்கொண்டு அதிலும் ஆயில் தேங்காய்பால் புளி மசாலா இவைகளை அளவோடு சேர்த்து. [சிலவைகளை சேர்கவில்லையென்றாலும் பரவாயில்லை] சமைத்து உண்டுவந்தால். ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும்.

எட்டிப்பார்க்கும் ரியாஸும்.என்னாடா சுட்டுகிட்டேயிருக்காங்க எப்போ தருவாங்களோ! சரிவா நாமபோய் விளையாடிட்டு வருவோமுன்னு மரூஃப் பிடம் சொல்கிறானோ...

 ருஸ்கி//ஏதோ நமக்கு தெரிந்ததை அள்ளிவிட்டுட்டோம் அவுக அவுக சூழ்நிலைகளைபொருத்து ஆரோக்கியத்தை கட்டிக்காத்துக்கொள்ளுங்கள்..
..மொத்தத்தில் ஆரோக்கியம் முக்கியம்.அம்பூட்டுதான்


அன்புடன் மலிக்கா

25 comments:

சாருஸ்ரீராஜ் said...

நல்ல கருத்து மலிக்கா ,இக்கால கட்டதில் ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். மரூப் போட்டோ நல்லா இருக்கு

ஜெய்லானி said...

சுட்டாச்சு சுட்டதை ...>>>

ஜெய்லானி said...

காலங்காத்தாலேயே படத்தை போட்டுடீங்க இன்னைக்கு மதியம் எதையும் விடக்கூடாது...வரும் ரெண்டு லீவுக்கும் சேர்த்து வச்சு வெட்ட வேண்டியதுதான் ஹி..ஹி...

Chitra said...

useful post..... Thank you. :-)

ப.கந்தசாமி said...

பழக்க வழக்கங்களை மாற்றுவது கடினம்.

காஞ்சி முரளி said...

மரூப் போட்டோ நல்லா இருக்கு...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

அன்புடன் மலிக்கா said...

//sarusriraj said...
நல்ல கருத்து மலிக்கா ,இக்கால கட்டதில் ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். மரூப் போட்டோ நல்லா இருக்கு//

வாங்க சாரூக்கா. ஆமான்கா எல்லாருக்கும் ஒரே அந்த நோய் இந்த நோய் சாப்பாடில் கட்டுபாடாய் இருங்கோ என உங்குபார்த்தாலும் இதே புராணமாக இருக்கு அதான் சும்மா. ஏதோ நமக்கு தெரிந்த சொல்லியாச்சி.

மிக்க நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
காலங்காத்தாலேயே படத்தை போட்டுடீங்க இன்னைக்கு மதியம் எதையும் விடக்கூடாது...வரும் ரெண்டு லீவுக்கும் சேர்த்து வச்சு வெட்ட வேண்டியதுதான் ஹி..ஹி...
//

அதகாட்டியும் வேற என்ன வேலை வெளுத்துக்கட்டுங்க . எதுக்கும் கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோங்க. அதுக்காக அடுத்தவங்களை ஒருபார்வைபார்த்துட்டு ம்ம் பார்த்தாச்சி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..ஓகே.


/ஜெய்லானி said...
சுட்டாச்சு சுட்டதை ...>>>
//

சுட்டாச்சா சபாஷ்..

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
useful post..... Thank you. :-)

மிக்க நன்றி சிதராமேடம்..

அன்புடன் மலிக்கா said...

Dr.P.Kandaswamy said...
பழக்க வழக்கங்களை மாற்றுவது கடினம்.//

அதுவும் சரிதான் டாக்டர். இருந்தாலும்
நம்மை நாம்தானே கவனிச்சுகோனும். இடையிடையே நம் உடல்மீதும் நமக்கு அக்கரை வேணுமில்லையா. அப்படி நினைக்கும்பொது கடினத்தை சற்று தளர்த்திக்கொள்ளமுடியுமுன்னு நினைக்கிறேன்..

ரொம்ப நன்றி டாக்டர்..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
மரூப் போட்டோ நல்லா இருக்கு...!

நட்புடன்...
காஞ்சி முரளி....
//

மிக்க நன்றி முரளி..

Madumitha said...

ஆம்.
உணவை சரி பண்ணினால்
உடல் சரியாய்டும்.

GEETHA ACHAL said...

அரோப்பிய உணவுகள் எல்லாம் சூப்பராக இருக்கின்றது...மிகவும் ஆரோக்கியமாக உள்ளது...ஆரோக்கியம் சமையல் தொகுப்பு மிகவும் அருமை...

நாடோடி said...

நீங்க‌ சொல்வ‌து உண்மைதான்... ஆனா ஆயில்ல‌ ந‌ல்லா பொரித்து சாப்பிட்ட‌ ந‌ம‌க்கு அதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..

நாடோடி said...

நீங்க‌ சொல்வ‌து உண்மைதான்... ஆனா ஆயில்ல‌ ந‌ல்லா பொரித்து சாப்பிட்ட‌ ந‌ம‌க்கு அதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..

நாடோடி said...

நீங்க‌ சொல்வ‌து உண்மைதான்... ஆனா ஆயில்ல‌ ந‌ல்லா பொரித்து சாப்பிட்ட‌ ந‌ம‌க்கு அதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..

நாடோடி said...

நீங்க‌ சொல்வ‌து உண்மைதான்... ஆனா ஆயில்ல‌ ந‌ல்லா பொரித்து சாப்பிட்ட‌ ந‌ம‌க்கு அதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..

நாடோடி said...

நீங்க‌ சொல்வ‌து உண்மைதான்... ஆனா ஆயில்ல‌ ந‌ல்லா பொரித்து சாப்பிட்ட‌ ந‌ம‌க்கு அதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு....

போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..

Mrs.Mano Saminathan said...

அரேபிய உணவு பற்றியும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றியும் எழுதியுள்ள விளக்கங்கள் அருமை! புகைப்படங்களும் அழகு!!

தூயவனின் அடிமை said...

இன்று ஆரோகியமான வாழ்க்கை தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டு உள்ளார்கள். நம்ம நாக்கு இருக்கே மசாலா ருசியிலேயே வாழ்ந்து விட்டது. எந்த நாட்டிற்கு சென்றாலும் சென்னை ரெஸ்டாரென்ட் எங்கே என்று தான் கண்கள் தேடுகிறேது. முயற்சி திருவினையாக்கும் . வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

//எட்டிப்பார்க்கும் ரியாஸும்.என்னாடா சுட்டுகிட்டேயிருக்காங்க எப்போ தருவாங்களோ! சரிவா நாமபோய் விளையாடிட்டு வருவோமுன்னு மரூஃப் பிடம் சொல்கிறானோ//

அதானே நானும் காத்து கொண்டு இருக்கேன்.

சூப்பர் கிளிக்குகள்

நானும் பார்பிகியு பிச்சர்ஸ் வைத்துள்ளேன் போட தான் நேரமில்லை.

செந்தில்குமார் said...

உண்மைதான் மல்லிக்கா

சாப்பாட்டை சரி பன்னிக்கொண்டால் போதும் எல்லார் உடல் நலமும் சரியாகிடும்

அன்புடன் மலிக்கா said...

nadodigal said" போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..
"

நன்றி!!!!!!!!! இதில் ஒன்று தான் என் மகன்.......மட்ரொன்று அக்கா மகன்........

அன்புடன் மலிக்கா said...

nadodigal said" போட்டோக்க‌ள் அனைத்தும் அருமை.. குறிப்பாக‌ உங்க‌ள் ம‌க‌ன்க‌ள்..
"

நன்றி!!!!!!!!! இதில் ஒன்று தான் என் மகன்.......மட்ரொன்று அக்கா மகன்........

அன்புடன் மலிக்கா said...

நன்றி menaga,mano saminathan,jaleela akka.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.