அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, June 27, 2010

பயர் வெடிகுண்டு.

.
பயர் உருண்டை
என்ன வெடிகுண்டு என பார்த்து பயந்துபோயிட்டீங்களா சும்மா அதிருதுல்ல அப்படின்னு எல்லாரும் சொல்லுறாகளே நாமளும் சொல்லுவோமேன்னுதான் ஹி ஹி 

தேவையானவை

சிவந்த பயர் கால்கிலோ
தேங்காய் துருவியது 1 கப்
சீனி தேவையான அளவு.
பயர்வகைகள் நிறைய இருக்கு அதில் இதுவும் ஒன்று எங்க ஊரில் இதை பெரும்பயர் என்பார்கள்.

பீன்ஸ் போலவேயிருக்கும். [இது பீன்ஸின் தங்கச்சிபோல]


பயரை குக்கரில் போட்டு வேகவைத்துக்கொண்டு அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு.,அப்பயரை லேசான சூட்டுடன் பிசையவும். அதோடு தேங்காய் சீனி சேர்த்துப்பிசையவும். ரொம்ப நைசாக பிசையாமல் கடிபடுவதற்கு தோதாக சிறுசிறு துகள்கள்கிடப்பதுபோல் பிசைந்து இதுபோல் வேணும் வடிவத்தில் உருண்டைகள் பிடித்து சாப்பிட்டால் மிகுந்த சுவையோடு இருக்கும்.சத்தும் நிறைந்தது. பசங்களுக்கு. பிடிப்பதுபோல் வெல்லம் வேண்டுமென்றாலும் சேர்கலாம்.


எப்படியோ உடம்புக்கு சத்து சேர்ந்தால் சரி அதோடு நாமும் 2. உருண்டை அப்படியே துண்ணுகிட்டால் நமக்கும் ரொம்ப நல்லது. வாய்வு உள்ளவங்க அடிக்கடி சாப்பிடவேண்டாம். அப்புறம் அங்க புடிக்கிது இங்க புடிக்குதுனெல்லாம் சொல்லக்கூடது. ஓகே..

டிஸ்கி// இப்பயரை வைத்து கறி. கூட்டு பயர்சோறு என நம்க்கு இஸ்டப்படதுபோல் செய்யலாம்.

14 comments:

சிநேகிதன் அக்பர் said...

சத்துணவுன்னா எல்லோருக்கும் பிடிக்கும்தானே :)

Jaleela Kamal said...

பயர் ஆட்டே பாம் ரொம்ப நல்ல இருக்கு.

இது ராஜ்மா.
இதில் சாலட் செய்து சாப்பிடுங்கள் .

இதன் மூலம் ஒரு டிப்ஸ் கிடைத்து விட்டது நன்றி மல்லி
/
அது ஒன்றும் மில்லை இப்ப முழு பாசி பயறு பிரியை ஆகிட்டேன்.அதில் போளி, இட்லி, சாண்ட்விச், குழம்பு ,சுழியம், எல்லாம் செய்தாச்சு/

ரொம்ப குழைய வேகவைத்ததை இனி இது போல் பார்ம் தான்.. ஹிஹி

Jaleela Kamal said...

கலை சாரலில் மழை சாரல் அடிக்குது சில்லுன்னு,

Riyas said...

ஏன் இந்த கொல வெறி..

ஸாதிகா said...

காராமணிபயறு,தட்டைப்பயறு என்போம்.கடுகு,உளுந்து தாளித்து சுண்டல் செய்தாலும் சுவையாக இருக்கும்.உப்பு சேர்த்து அரை அவியலாக அவித்து நன்கு வெயிலில் காய வைத்து தட்டி தோலகற்றினால் அதற்கு பெயர் தட்டைப்பயறு ஒடியல்.இது எங்கள் ஊரின் ஸ்பெஷல்.காராமணியைக்காட்டி ஆசையைத்தூண்டி விட்டு விட்டிர்களே மலிக்கா!

நாடோடி said...

நான் நினைக்கிறேன் அக்காவா இருக்குமுனு... ஏன்னா நாம‌ இதை "பெரும்"ப‌யிறு அப்ப‌டி தானே சொல்லுறோம்... அப்ப இது தானே பெருசு... எப்ப‌டி க‌ண்டு பிடிச்சேன் பாத்தீங்க‌ளா?.... ஹா..ஹா... அப்ப‌டியே ஒரு பாக்கெட் ப‌ய‌ர் பாக்ஸ் பார்ச‌ல்...

ஜெய்லானி said...

சாதாரணமா பார்க்கும் போது பலா கொட்டை மாதிரி இருக்கு . சூப்பர்..

ரெண்டு உருண்டை பார்ஸல்ல்ல்ல்ல்ல் ( நாம எந்த காலம் ஒன்னு கேட்டு இருக்கோம் )

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க...இது ராஜ்மா தானே...

Chitra said...

Looks good. Thank yuo for the sweet recipe. :-)

எம் அப்துல் காதர் said...

கலைச்சாரலில் மழைச்சாரல் அருமையா இருக்கே மேடம்! எனக்கும் ஒன்னு கொடுங்க! ஆனா மழை துளி விழ விழ அந்தக் கொடிகள் நனைந்த மாதிரியே தெரியலையே. காற்று வேறு பக்கம் அடிக்கிறதோ..விடுங்க..சாரலிலேயே துளிர்த்துவிடும்.

அப்புறம் ஜெய்லானிக்கு பார்சல் கட்டும்போது எனக்கும் நாலு சேர்த்து..ஹி ஹி, வீட்டில் நாலு பேருல இருக்கோம்!

தூயவனின் அடிமை said...

பார்சலுக்கு பயந்து, வாய்வு என்று கூறி தப்பித்து விட்டிர்கள்.

சாருஸ்ரீராஜ் said...

பயர் ஆட்டோ பாம்னு சொன்னதுனால சிஸடம் பயந்து போய் காலை இருந்து ஒபன் ஆகலை ஒரு வழியா இப்ப தான் ஒப்பன் ஆச்சு , ஜலிலா அக்கா சொன்ன மாதிரி பயிறு குழைந்த்து போனால் இது போல் செய்திட வேண்டியது தான்.

சாருஸ்ரீராஜ் said...

முகப்பு மழை சாரல் சூப்பர்....

ஹுஸைனம்மா said...

இந்த ராஜ்மாவில புலாவ் மட்டும்தான் செய்வேன். இதுவும் நல்லா ஈஸியா இருக்கு!!

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.