அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, August 30, 2010

வாடா வாடா இறால் வாடா.

இறால் வாடா

தேவையானவைகள்.
இறால் [தோல் நீக்காதது]
ஆப்பமாவு புளித்தது 5 கரண்டி[கெட்டியாக]
இடியப்பகப்பி 2 கரண்டி
அரிசி வறுத்து அரைத்தது 2 ஸ்பூன்[கொரகொரப்பாக]
சோடாப்பு 1பிஞ்

இறாலை தண்ணீர்விட்டு நன்றாக அதன்உள்ளிருக்கும் அழுக்கு போகும்வரைஅலசிவிட்டு
அதனுடன் உப்புசேர்த்து வெறும்சட்டியில் [கருக்கவும்] அதாவதுவறுக்கவும்
சிவந்தகலரில்வரும்அதைஆரவிட்டவும் 
.
புளித்த ஆப்பமாவுடன் இடியப்பகப்பியையும்.
பொறியரிசிமாவு இரண்டையும்சேர்த்து
கூடவே சோடாப்பையும் சேர்த்து நன்றாகபிசைந்து 5 மணிநேரம்வைக்கவும்

                                
உள்ளடத்திற்கு தேவையானைவைகளை தயார் செய்துகொண்டு
அடுப்பில் அகன்ற சட்டி வைத்து அதில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு
அது சூடானதும்,கருவேப்பிலைபோட்டு. அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,தக்காளி வெங்காயத்தையும்போட்டு வதக்கவும்.
அது வாசம் வந்ததும் மசாலாக்களை சிறிது தண்ணீர்விட்டு உப்பும்போட்டு கரைத்து அதனுடன் ஊற்றி கிளறவும்.அது வெந்ததும் தேங்காய் துருவலை

அதனுடன் சேர்த்து
நன்றாக கிளறி இறக்கவும்.
மாவு வாடை சுடும் பதத்துக்கு வந்ததும், அதை எடுத்து ஒரு வாழையிலையோ, அல்லது இதுபோன்ற பிளாஸ்டிகவரோ அதன்மீது தண்ணீர்தடவி,
சிறு உருண்டை
 உருட்டிவைத்து இதுபோன்று தட்டவும்
பின்பு செய்திருக்கும் உள்ளடத்தில் அந்த உருண்டைக்கு தகுந்தாற்போல் அதன்மேல் வைக்கவும். பின்பு மீண்டும் சிறு உருண்டை தட்டி அதன்மேல் மூடவும்
அதன் நடுவில் இதுபோல் ஓட்டைபோடவும்.
அதன் ஓரத்தில் கருக்கிய இறாலை அழுத்தியதுபோல் வைக்கவும்
இப்போது ஒரு கடாயில் ஆயில் வடை முங்கும் அளவிற்க்கு ஊற்றி அது சூடானது அதில் மெதுவாக இந்தவடையை எடுத்துப்போடவும்.
இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்                                      
இதுதான் இரால்வாடா

இது நோன்பு ஸ்பெசல்.இது நோன்பு காலங்களில் எங்கள் ஊர்பகுதிகளில் மிக மிக பேமஸ். இதை அதிகம்பேர் விரும்பி சாப்பிடுவார்கள்.மற்ற வடை பஜ்ஜிபோல் அல்லாமல் இது மிகவும் ருசியாகவும் வித்தியாதமாகவும் இருக்கும்.
இதை செய்வது சற்று சிரமம், வேலையும் அதிகமென்பதால் குறிப்பிட்டவர்களே சுடுவார்கள் அதை வாங்க கியூவில் நிற்கனும்.

செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.

அதிலும் நோன்புக்கஞ்சிக்கூட சேர்த்து ஊரவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்..

இது தமிழ்குடும்பத்தில் சமையல் போட்டிக்காக நான் அனுப்பிய முதல் குறிப்பு. எப்படியிருக்கிறது என் ரெசிபி
உங்கள் ஆதரவை அதிலும் தாருங்கள். இங்கே கிளிக் செய்யவும்.
 
டிஸ்கியோ டிஸ்கி//
என்னது மரியாதையில்லாமல் வாடா ந்னு அப்படியெல்லாம் ரெசிபிக்கு பேர் வச்சிருக்கீங்கன்னு  கேக்கக்கூடாது ஓகே இதுக்குபேர் அப்படித்தான் உங்க ஊர் பகுதிகளில் சொல்வார்கள்.
ரொம்ப மரியாதையானவங்க நாங்கோ பாத்தேளா?  . நாங்க எப்போவும் வித்தியாசமானவங்கோ.யாராது கொம்பு கொண்டு வாரது அடிக்க, நாயில்லைங்கோ இந்த பேர்வச்சது ஆத்தாடி ஓடிடு மல்லி



அன்புடன் மலிக்கா

20 comments:

Mohamed G said...

வாடா அருமை, எங்கள் வீட்டிலும் செய்வோம்.

தமிழ் அமுதன் said...

ஆமா...! எங்க ஊர்லயும் வாடா கிடைக்கும்...!

Chitra said...

நான் இதுவரை கேள்விப்படாதது..... புதுமையாக இருக்குது.

Chitra said...

நான் இதுவரை கேள்விப்படாதது..... புதுமையாக இருக்குது.

ஜெய்லானி said...

யக்கோ..!! ஊருக்கு போய் சாப்பிட்டு வந்து செஞ்சிட்டீங்க...ஓக்கே...ஆனா எனக்கு ஊர் நினைவு வந்துடுச்சே... ..ஊரில் இருக்கும் போது தினமும் சாயந்திரம் இதானே டீ காப்பியேட டிஃபனே..


பத்து பீஸ்... பார்ஸல் பிளிஸ் ....(( ஓன்னு ரெண்டு வேலைக்காகாது ))

Anonymous said...

வாடா வாடான்னு அழைக்கிறது...

சிந்தனைத்துளி said...

ஆகா பார்க்கும்போதே சூப்பாக்கீதே ஏம்மா இப்படி படத்தாக்கி நாகில் எச்சி ஊர வக்கிர.

சூப்பர் படங்கள் அருமையா ரெசிபி.
பொருமையாக செய்த உனக்கு பாராட்டுக்கள்..

ஹூஊஊஉம் பாத்து ஏங்கத்தான் முடியும் நமக்கு ஆரு செய்துதரபோரா வந்துடட்டும் அவுகளாவது செய்துதாராகளான்னு பாப்போம்

நாடோடி said...

போட்டோ எல்லாம் போட்டு க‌ல‌க்க‌லா இருக்கு.. ந‌ம‌க்கும் பார்ச‌ல் பிளிஸ்.

Chef.Palani Murugan, said...

இதேமாதிரி... போடா போடான்னு எதாவ‌து இருக்கா? விருந்தாளிய‌ வாடா,சாப்பிடுங்க‌ன்னு சொல்வ‌து கொஞ்ச‌ம் ச‌ங்க‌ட‌ம்தான். ந‌ல்ல‌ recepie வாழ்த்துக்க‌ள்

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு; நான் வரும்போது செஞ்சுத் தாங்க. ஆனா, இறாலைத் தோலெடுக்காமப் போடுறதுதான்.. நறுக்குன்னு கடிபடாதா?

அனு said...

அருமையான டிஸாக தெரியுதே இப்பவே அம்மாகிட்டகேட்டு அடம்பிடிக்கப்போகிறேன். எனக்கு இராலுன்னா ரொம்ப இஷ்டம்.

தேங்க்ஸ் மலிக்க்கா

'பரிவை' சே.குமார் said...

நான் இதுவரை கேள்விப்படாதது..... புதுமையாக இருக்குது.

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்கள் தந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

பார்சல் கேட்டவர்களுக்கு கேட்பதற்க்கு முன்பே கட்டிவிட்டாச்சி வந்து சேர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...
இதேமாதிரி... போடா போடான்னு எதாவ‌து இருக்கா? விருந்தாளிய‌ வாடா,சாப்பிடுங்க‌ன்னு சொல்வ‌து கொஞ்ச‌ம் ச‌ங்க‌ட‌ம்தான். ந‌ல்ல‌ recepie வாழ்த்துக்க‌ள்.//


ஆகா சமையல் க்லையே நம்ம பக்கம் வந்திருக்கே அதாவது செஃப்பே நம்ம பக்கம் வந்திருக்காங்க
விருந்தே வருக வருக!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

எல்லாம் புரியாத பேரா வக்கிறாகளே நாம எல்லாருக்கும் தெரிஞ்சபேரா வக்கலாமுன்னுதான் இந்த பேர் ஹா ஹா..

அட உங்களோட இதுக்கூட நல்ல யோசனையாக இருக்கே போடா ன்னு ஒரு ரெசிபிக்கு பெய்ர் வைக்க செயர்குழுவிடம் கேட்டு வைத்துவிடலாம் ஓகே!

மிக்க நன்றி செஃப்.பழனி முருகன்

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா இறாலை அப்படியே துண்ணக்கூடாது அதை எடுத்து தோல் உரிந்து சாப்பிடனும். அப்படியே வைப்பது எதுக்குன்னா ஒரு டெக்கெரேஷன் மற்றும் அதன் சாரூ அதனுள் இறங்குமென்பதற்காகதான்.

இப்ப சாப்பிடுங்க கடிபடலையல்லவா. குட்.

மிக்க நன்றி ஹுசைன்னம்மா..

Jaleela Kamal said...

வாடா ரொமப் நல்ல இருக்கு,, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக செய்து பார்க்கனும்.
இது வரை சாப்பிட்டதில்லை

Unknown said...

இதேமாதிரி... போடா போடான்னு எதாவ‌து இருக்கா?

haha...

sabeeca said...

சலாம் ராத்தா.எப்படி இருக்கிய.வாடாவுக்கு கப்பி போடாம செய்யலாமா.ஏன்னா சிங்ப்பூர்ல கப்பி கடைக்காது.

Anonymous said...

ஹாய் மலிக்கா மேடம்,அஸ்ஸலாமு அலைக்கும்.ஆஹா...வாடாவை பார்க்கும் போதே நா ஊறுதுங்க...
எங்க ஊரிலும் மிகவும் பிரபலம் இந்த இறால் வாடா.... ஆனால் நாங்கள் செய்வதற்க்கும் நீங்கள் செய்வதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குங்க.....
இந்த முறையும் செய்து பார்த்துடுவோமுல்ல....

அன்புடன்,அப்சரா.

Syed Fathima Shaul hameed said...

Asalamu alaikum.
My husband loves iraal vada... he is from thiruvarur... But as iam from chennai i am very much new to this recipe..
Actually he sent me your blog site to prepare for him... i have planned to try this recipe...
I dont know idiyappa kappi.. can u please guide me...
Presently i am in malaysia and i dnt know whether i ll get this idiyappa kappi... can i do this recipe without this... please reply me

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.