நண்டு 1கிலோ
வெங்காயம் 3
தக்காளி 2
பச்சைமிளகாய் 5
கொத்தமல்லி
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
கரம் மசலா 1 ஸ்பூன்
சீரகம் சோம்புதூள் 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
தேங்காய் துருவல். 3/4 கப்
பாதாம்பருப்பு 15.20
பட்டை -லவங்கம்
உப்பு
ஆயில்
நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டாக போட்டுக்கொள்ளவும்.
தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும், பட்டை லவங்கம் போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். வதங்கியதும்,இஞ்சிப்பூண்டு பேஸ்டையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.அதுவும் வதங்கி வாசனை வந்ததும். பின்பு நண்டை அதனுடன் சேர்த்து சற்று பிரட்டி. பின்பு மசாலக்களை தண்ணீர்விட்டு கரைத்து அதனுடன் சேர்த்து கொத்தமல்லியில் பாதியை அந்த கலவையுடன் சேர்த்து உப்பிட்டு மூடவும்.
கொதித்து வாசனை வந்ததும் திறந்து,பாதாமுடன் தேங்காப்பூவையும்போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்த விழுதை அதந்த நண்டுடன் சேர்த்துகிளறி சற்று வைத்திருந்துவிட்டு மீதமுள்ள கொத்தமல்லி தூவி இறக்கவும்.
நண்டுக்கறி ரெடி
இது மிகவும் ருசியாக இருக்கும் சாதம். மற்றும் சப்பாத்தி. பரோட்டக்களுக்கு மிகவும் ஏற்றது.
நாங்களெல்லாம் 10 கிலோ தந்தாலும் அப்படியே சாப்பிடுவோமுல்ல
அதுவும் ரசித்து ருசித்து.
எப்புடியிருக்கு நானும் ஸ்ரீராமும் நண்டு சாப்பிடுவது..
போதுமா நாங்க துண்ணது? ஹா ஹா

18 comments:
நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் நேற்று இரவு நண்டு கறி சாப்பிட்டேன்...இதன் மருத்துவ குணம் என்னவென்றால்,நெஞ்சு சளியை அறுத்தெடுக்கும்...
என்னுடைய ஃபேவர்ட்ட்... நாக்கீல் நீர் ஊற வைக்குறிங்களே...:-))
என்னுடைய ஃபேவர்ட்ட்... நாக்கீல் நீர் ஊற வைக்குறிங்களே...:-))
10 கிலோவையும் நாங்களும் சாப்பிடுவோமுல...
ம்ம்..நண்டு கறி மணமணக்கின்றது.ஹ்ம்ம்ம்..நண்டை மஹ்ரூஃபை விட்டு சப்பைட வைத்து படம் எடுத்துப்போட்டதுமில்லாமல் வேஸ்டை படம் எடுத்து காட்டி வித்த்யாசம் காட்டிவிட்டீர்கள் மலிக்கா,
ம்ம்..நண்டு கறி மணமணக்கின்றது
நண்டு கறி..... அதன் ருசியே தனிதான். போட்டோஸ் பார்த்துட்டு நாவில் நீர் ஊறுது....
எனக்கும் நண்டுக் கறி ரொம்பவும் பிடிக்கும் சகோ, அதுவும் நண்டுக் கால்களில் உள்ள குழம்பை உறிஞ்சிக் குடித்து கடித்துச் சாப்பிடுவதே தனிச் சுவை..
நீங்கள் கூறுவது போல பாதாம், லவங்கம் பட்டை போட்டு நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை, உங்கள் சமையற் குறிப்பினை அம்மாவிடம் காட்டி, ஒரு முறை ட்றை பண்ணிப் பார்க்கப் போகிறேன். நன்றிகள் நன்றிகள்!
present sollitu escapeeeee
என்ன பண்றது...
நண்டு சமைப்பது எப்படின்னு வலைதளத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய காலம் இது...
ஹா...! ஹா...!
MANO நாஞ்சில் மனோ said...
நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் நேற்று இரவு நண்டு கறி சாப்பிட்டேன்...இதன் மருத்துவ குணம் என்னவென்றால்,நெஞ்சு சளியை அறுத்தெடுக்கும்...//
உண்மைதா சகோ. மிலகு சேர்த்து சூப் வைத்து குடிக்க உடனே சளி நீங்குமென சொல்வார்கள்..
நன்றி சகோ..
// சிநேகிதி said...
என்னுடைய ஃபேவர்ட்ட்... நாக்கீல் நீர் ஊற வைக்குறிங்களே...:-))
சிநேகிதி said...
என்னுடைய ஃபேவர்ட்ட்... நாக்கீல் நீர் ஊற வைக்குறிங்களே...:-))
10 கிலோவையும் நாங்களும் சாப்பிடுவோமுல...//
ஆகா நீர் ஊறிடுச்சா..ஹா ஹா
எங்க வீடில் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கிற ஐட்டம் இது. வாரத்தில் இரண்டுமுறை சாப்பிடுவோம். மிக்க நன்றி பாயிஜா..
// ஸாதிகா said...
ம்ம்..நண்டு கறி மணமணக்கின்றது.ஹ்ம்ம்ம்..நண்டை மஹ்ரூஃபை விட்டு சப்பைட வைத்து படம் எடுத்துப்போட்டதுமில்லாமல் வேஸ்டை படம் எடுத்து காட்டி வித்த்யாசம் காட்டிவிட்டீர்கள் மலிக்கா,//
எவ்வளவு சாப்பிட்டோமுன்னு தெரியவேனாமா இதையும் போடுங்க மம்மின்னு ஐடியா தந்ததே மரூஃப்தான்..
மிக்க நன்றிக்கா..
// போளூர் தயாநிதி said...
ம்ம்..நண்டு கறி மணமணக்கின்றது//
ஆகா அங்கே வரைக்கும் மணத்துவிட்டதா. அப்ப நிஜமாலுமே நல்லாதான் சமைக்கிறேனா. மல்லி தேறிட்டேடி நீ.. ஹா ஹா. மிக நன்றி தயா..
// Chitra said...
நண்டு கறி..... அதன் ருசியே தனிதான். போட்டோஸ் பார்த்துட்டு நாவில் நீர் ஊறுது....//
போட்டோவுக்கே ஊறிடுச்சா. அனுப்பிவச்சிடவா அமெரிக்காவுக்கு..
மிக்க நன்றி சித்ரா க்கா..
//நிரூபன் said...
எனக்கும் நண்டுக் கறி ரொம்பவும் பிடிக்கும் சகோ, அதுவும் நண்டுக் கால்களில் உள்ள குழம்பை உறிஞ்சிக் குடித்து கடித்துச் சாப்பிடுவதே தனிச் சுவை..
நீங்கள் கூறுவது போல பாதாம், லவங்கம் பட்டை போட்டு நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை, உங்கள் சமையற் குறிப்பினை அம்மாவிடம் காட்டி, ஒரு முறை ட்றை பண்ணிப் பார்க்கப் போகிறேன். நன்றிகள் நன்றிகள்!//
செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லனும் சரியா. எப்படியிருந்ததுன்னு..
மிகுந்த மகிழ்ச்சி நிரூபன்..
நண்டா ம்ம் வெட்டுங்க வெட்டுங்க
.. நான் இதுவரை நண்டு சமைத்ததில்லை
சாப்பிட்டதும் இல்லை..
சளிக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க
பகிர்வுக்கு நன்றி மலிக்கா..
ஊருக்கு போன மட்டுமே நண்டு சாப்பிடலாம் இங்க (கத்தாரில் ) இதெல்லாம் கிடைப்பது ரொம்ப கஷ்டம்
இப்பிடி பீல் பண்ண வாட்சிடீன்களே
படங்களை பார்க்கும்போதே ....எச்சில் நாவில்...
சுவையான..பகிர்வு மலிக்கா...
Post a Comment