அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, May 21, 2011

என்ன வந்தாலும் வரட்டும் நமக்கென்ன!

 
                                                                நன்றி கூகிள்
என்ன வந்தாலும் வரட்டும் நமக்கென்ன! யார் என்ன சொன்னால் நமக்கென்ன அப்படின்னு நினைச்சீங்கன்னா. சாமி கண்ணக் குத்துதோ இல்லையோ. நான் தேடிவந்து கண்ணை குத்துவேன் அப்படினெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க.. செல்போன் சொன்னாலும் சொல்லும்..

என்னதான் காட்டுக் கத்தலாக கத்தினாலும். தொண்டை வலிக்க சொன்னாலும் நமக்கு எடுபடுமா இந்த அறிவுரையெல்லாம். படிக்கும்போது மட்டுமே ஆ அப்படியா!... இனி கவனமாக இருக்கனும் என ஒரு மனம் சொல்லிக்கொண்டேயிருக்கும்போதே, உள்ளிருக்கும் இன்றொரு மனம் அட இவங்களுக்கு வேற வேலையேயில்லைப்பா. பின்ன எதுக்கு இதெல்லாம் கண்டுபிடிக்கிறாங்களாம் அதை புலக்கத்தில் விடுறாங்களாம். பாதிப்பு அவங்களுக்கில்லையே மத்தவாளுக்குதானேன்னு செய்வதெல்லாம் செய்திடுவாங்க. வருமானத்தையும் பெருக்கிகிடுவாங்க.இது இல்லாமல் ஒன்னுமே செய்யமுடியாது என மக்கள் வரும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு இப்படியெல்லாம் பயமுறுத்தி  நம்மை படுத்துறாங்கப்பா என சொல்லுமே..

இருந்தாலும் சொல்வது கடமை. ஏற்பதும் ஏற்காததும் அவரவரின் உரிமை. என்ன சரிதானே! நல்லவற்றை கேட்டாலும் பார்த்தாலும் உடனே மற்றவங்களுக்கு எடுத்துச்சொல்லிடனுமுன்னு நம்ம மனசு சொல்லும் அதான் நமக்கு வந்த மெயில்வழி செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன் உங்களோடு.. பிடிச்சிருந்தா ஏத்துக்கோங்க பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை படிச்சி வச்சிக்கோங்க எதுக்கும் உதவும்.....
 ---------------------------------------------------------------------------------- 

செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் என விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில்,

‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும்.ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

  செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது

.குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள்,மருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது. இதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும். எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.செல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.மூளை புற்றுநோய் தாக்கலாம் மும்பை ஐ.ஐ.டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில்

 ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது என்றார்.  என்ன பாதிப்புகள்? செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.///

என்ன படிச்சாச்சா. சரி இனி என்ன செய்யலாமுன்னு யோசிச்சிகிட்டே நடையக்கட்டுங்கோ. இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்திச்சி செயல்படுங்க...

 என்றும் உங்கள் நலம் விரும்பும்
அன்புடன் மலிக்கா..

12 comments:

எல் கே said...

சொன்னா எங்க கேக்கறாங்க

போளூர் தயாநிதி said...

உங்களின் கைபேசி (செல்போன் )பற்றிய பதிவு நல்ல பல செய்திகள் சொல்லுகிறது உளம் கனிந்த பாராட்டுகள் காலத்திற்கேற்ற தேவையான பதிவு பாராட்டுகள் நன்றி .

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல உருப்படியான, எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய, மிகவும் முக்கியமான, உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள். பகிர்வுக்கு நன்றி.

குணசேகரன்... said...

அறிவுரை சொன்னா கேட்கிறாங்களா?.
But your post is informative.

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி மலிக்கா.

நிரூபன் said...

தத்துவம் கலந்து ஒரு பந்தி, அப்புறம், கதிர்வ் வீச்சுப் பற்றிய காலத்திற்கேற்ற ஆலோசனையும் பகிர்ந்திருக்கிறீங்கள். நன்றிகள் சகோ.

suvanappiriyan said...

பயனுள்ள பதிவை தந்திருக்கிறீர்கள்.

கவி அழகன் said...

யார் சொன்னாலும் கேக்க மாட்டம் வாறது வரட்டும்

GEETHA ACHAL said...

ரொம்ப பயனுள்ள பதிவு..

வீட்டு Lanlineயில் இருந்து பேசினா ஒன்றும் பிரச்சனை வாராது இல்ல...ஏன் என்றால் தான் அதனை தான் ரொம்பவுமே use செய்கிறேன்..

Jaleela Kamal said...

படிச்ச்சாச்சு ரொம்ப பேமாக்குது,
ய்ம்மா...

சி.பி.செந்தில்குமார் said...

செல்ஃபோனை இளைய தலை முறைகளே அதிகம் யூசிங்க்.. பட் அவங்க சொன்னா கேட்கப்போறதில்லை.. ம் ம் ஆனா யூஸ் ஃபுல் போஸ்ட் தான்...


உங்க பிளாக் லே அவுட்ல இத்த்னை பழங்களை பார்க்கவே பசி எடுக்குது ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

போஸ்ட்ட்க்கு மேட்சா போட்ட படம் செம

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.