மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும் அதனை ஒரு அகன்றபாத்திரத்தில் சிறு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும் அதனை
இப்படி நகத்தால் சற்று நீக்கினால் நன்றாக திறக்கும் அதனுள் இருக்கும் மட்டியை ஒவ்வொன்றாக எடுத்து
தனி தட்டில் வைத்துக்கொள்ளவும்.
அதை சமைக்க தேவையானவை.
மட்டி தேவையான அளவு
கத்தரிக்காய் சற்று சிறியதாக அரிந்தது 2
சிறிய வெங்காயம் 1 கப்
தேங்காய்பால் 1 கப்
பொரியரிசி மாவு 3,4. ஸ்பூன்.
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மஞ்சள்தூள்.1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
சீரக சோம்புதூள். 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
பச்சைமிளாய் 2.3
கருவேப்பில்லை தாளிக்க
உப்பு
எண்ணை..
5 விசில் வந்ததும் ஆவியை போக்கிவிட்டு மூடியை திறந்து.இப்படி நகத்தால் சற்று நீக்கினால் நன்றாக திறக்கும் அதனுள் இருக்கும் மட்டியை ஒவ்வொன்றாக எடுத்து
தனி தட்டில் வைத்துக்கொள்ளவும்.
அதை சமைக்க தேவையானவை.
மட்டி தேவையான அளவு
கத்தரிக்காய் சற்று சிறியதாக அரிந்தது 2
சிறிய வெங்காயம் 1 கப்
தேங்காய்பால் 1 கப்
பொரியரிசி மாவு 3,4. ஸ்பூன்.
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மஞ்சள்தூள்.1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
சீரக சோம்புதூள். 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
பச்சைமிளாய் 2.3
கருவேப்பில்லை தாளிக்க
உப்பு
எண்ணை..
குக்கர்ஃபேனில் .மட்டி நறுக்கிய கத்தரிக்காய்.வெங்காயம்.ப,மிளகாய்.இஞ்சிபூண்டு விழுதுசேர்த்து , மசாலாக்களை கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்து அதனோடுசேர்த்து
உப்பிட்டு குக்கரை முடிவைக்கவும்.உப்பு கம்மியாக சேர்த்துதான் சமைக்கனும் இதில் உப்பு இருக்கும்.
பொரியரிசிமாவைபோட்டு கிளறிவிட்டு பிரண்டதுபோல் வந்ததும்
தேங்காய்பாலை ஊற்றி சற்று கொதிவந்ததும்.
சிறிய கடாயில் ஆயில்விட்டு சூடானதும் நறுக்கிய சிறியவெங்காயம். கருவேப்பில்லை போட்டு தாளித்து
ரெடியான மட்டிகலவைவோடு தாளித்தவைகளையும் சேர்க்கவும்.
சுவையான மட்ட்சி ஸ்பெசல் ரெடி.
ரசம்வைத்து வெள்ளை சோற்றோடு சாப்பிட சூப்பராக இருக்கும். ஆப்பம் தோசைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இது ஒரு தனி சுவையில் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

இதை வேகவைத்ததும் உரித்து எடுக்கும்போதே சாப்பிடலாம் உப்பு சுவையோடு திண்ண திண்ண ருசிக்கும்.. நாங்க அப்படியே திம்போமே! என்றாள் குட்டிதேவதை ஆதிரா..மட்டியை உரித்துக்கொடுக்கும் அண்ணனின் கையை உரிஞ்சிக்கொண்டே..
18 comments:
அருமை.
மட்டி என்றால் என்ன? அதன் ஆங்கில பெயர் கூற முடியுமா
மீன் மார்கெட்டில் கிடைக்குமா
உங்கள் பதிவை பார்த்ததும் செய்து சாப்பிட ஆவலாய் உள்ளேன்
நன்றி
இப்படி ஒரு சமாசாரம் இருப்பதை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே சாப்பிட்டுப் பாக்கலாம்னு தோணுது. (சரிதாவை அசைவம் சமைக்கச் சொன்னா உதைப்பா) பேசாம மலிக்கா வீட்டுக்கு மட்டி சாப்பிட வந்துட வேண்டியதுதான்...
பேசாம மலிக்கா வீட்டுக்கு மட்டி சாப்பிட வந்துட வேண்டியதுதான்.//
வாழை இலைபோட்டு பறிமாருவாங்க சார். நான் எத்தனைதடவை சாப்பிட்டு இருக்கேன் இல்லக்கா..
மட்டி என்றொரு சமாச்சாரத்தை சாப்பிடுவார்கள் என்று இப்பொழுதுதான் உங்கள் பிளாக் மூலம் அறிந்து கொண்டேன் மலிக்கா.:)
ஓடுறது...!
நடக்கறது...!
பறக்கறது......!
ஊர்வது..............!
நீந்துறது....!
இப்படி
இதெல்லாம் போய்....!
சிப்பிக்கு உள்ளேயும் போயாச்சா...!
சரிதான்...!
ஆமா..! ஒரு சந்தேகம்...!
துபைல இருந்த காஸ் ஸ்டவும், ப்ரஷேர் குக்கரும் அப்படியே இங்கேயும் இருக்கு...!
அவ்வ.... வவ்....வ்வ்வ்வ்....!
Rathnavel said...
அருமை.//
வாங்கய்யா மிக்க நன்றி..
Anonymous said...
மட்டி என்றால் என்ன? அதன் ஆங்கில பெயர் கூற முடியுமா
மீன் மார்கெட்டில் கிடைக்குமா
உங்கள் பதிவை பார்த்ததும் செய்து சாப்பிட ஆவலாய் உள்ளேன்
நன்றி//
மட்டியின் ஆங்கிலபெயர் செல்பிஷ்[shellfish] சாம். அதாவது அந்த செல்பிஸ் அல்ல இது ஓட்டுக்குள் இருப்பதால் அதாவது சிப்பிக்குள் இருப்பாதாலோ என்னவோ இதையும் கூகிளில்தான் தேடி எடுத்தோம்..
துபை மற்றும் வெளிநாடுகளில் மீன்மார்க்கெட்டில் கிடைக்கும் [கிடைத்தது] தமிழ்நாட்டில் தெரியவில்லை. தெருவில்லை கூறிவருவார்கள் கூடை கூடையாக அதில்வாங்கியதுதான் இது.. கிடைத்தால் செய்து சாப்பிட்டுபாருங்கள் அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.. இதில் கேல்சியம் உள்ளதாம்.. மிக்க நன்றி பெயர் சொல்லாதவங்களே!
கணேஷ் said...
இப்படி ஒரு சமாசாரம் இருப்பதை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே சாப்பிட்டுப் பாக்கலாம்னு தோணுது. (சரிதாவை அசைவம் சமைக்கச் சொன்னா உதைப்பா) பேசாம மலிக்கா வீட்டுக்கு மட்டி சாப்பிட வந்துட வேண்டியதுதான்..//
என்னண்ணா சொல்லிகிட்டு இருக்கீங்க சரிதா அண்ணியை தொல்லை பண்ணாம இப்பவே வாங்க உங்களுக்கு இல்லாததா! அண்ணாவுக்கு வயிறு நிரம்ப சாப்பாடுபோடுவது தங்கைக்கு கடமையில்லையா! இது நல்ல ருசியாக இருக்கும் கணேஷண்ணா. தங்கை கய்யால சாப்பிட்டுவிட்டு அப்பால அண்ணி கைமணத்த மறந்துடக்கூடாது ஹா ஹா..
அனுஜா said...
பேசாம மலிக்கா வீட்டுக்கு மட்டி சாப்பிட வந்துட வேண்டியதுதான்.//
வாழை இலைபோட்டு பறிமாருவாங்க சார். நான் எத்தனைதடவை சாப்பிட்டு இருக்கேன் இல்லக்கா..//
வாடிமா வா. நீயும் சொல்லிகிட்டேயிரு எப்பதான் வரப்போரியோ போ..
ஸாதிகா said...
மட்டி என்றொரு சமாச்சாரத்தை சாப்பிடுவார்கள் என்று இப்பொழுதுதான் உங்கள் பிளாக் மூலம் அறிந்து கொண்டேன் மலிக்கா.:)//
அதுசரி சாஅப்பிடுவதையே இப்பதான் அறிகிறீர்களா! காயல்பக்கம் இதெல்லாம் இல்லையாக்கா?
காஞ்சி முரளி said...
ஓடுறது...!
நடக்கறது...!
பறக்கறது......!
ஊர்வது..............!
நீந்துறது....!
இப்படி
இதெல்லாம் போய்....!
சிப்பிக்கு உள்ளேயும் போயாச்சா...!
சரிதான்...!//
அப்பதானே மத்தவாளுக்கு மத்ததுகள் மிஞ்சும் இப்படி நாங்க எல்லாத்தையும் துண்ணா.. சிப்பிக்குள் இருக்கும் முத்தை மட்டும் கழுத்து காது கைகளில் போடும்போது அதனை தாங்கும் சத்தை வயிற்றுக்குள் போடுவதில் தப்பென்ன..
//ஆமா..! ஒரு சந்தேகம்...!
துபைல இருந்த காஸ் ஸ்டவும், ப்ரஷேர் குக்கரும் அப்படியே இங்கேயும் இருக்கு...!
அவ்வ.... வவ்....வ்வ்வ்வ்....!//
அதெல்லாம் நாங்க அங்கேயே விட்டு வந்திருக்கோம் வேறுவொரு பேம்லி அதெல்லாத்தையும் யூஸ்பண்ணுறாங்கோ.
அண்ணேங்கண்ணா இதெல்லாம் இங்கே உள்ளது. அதிலும் அங்கே யூஸ்செய்த காஸ் ஸ்டவெல்லாமா எடுத்துவருவாங்க அச்சோ அச்சோ..
மட்டியை நாங்கள் முருங்கைக்கீரையுடன் தான் செய்வோம் இப்படி செய்ததில்லை ..இப்படி பொரிமா போட்டு மீனில்தான் செய்வோம் .கிடைக்கும் பொழுது செய்து பார்க்கிறேன் ..போட்டோக்கள் தெளிவாக இருக்கு..
வணக்கம் சகோ.
பெயரிலியாய் கேட்டது நான்தான். வேண்டுமென்றே செய்யவில்லை. profil connection problem.
பெயரிலியாய் கமெண்ட் உங்களுக்கு வந்திருந்தாலும் மெனக்கிட்டு கூகிளில் தேடி எனக்கு விபரம் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.
புதிய கோணங்கி ! said...
வணக்கம் சகோ.
பெயரிலியாய் கேட்டது நான்தான். வேண்டுமென்றே செய்யவில்லை. profil connection problem.
பெயரிலியாய் கமெண்ட் உங்களுக்கு வந்திருந்தாலும் மெனக்கிட்டு கூகிளில் தேடி எனக்கு விபரம் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.//
மீண்டும் வாருங்கள் சகோ. பெயரிலியாக வந்தாலும் சகோதரமோ! தோழமைகளோதானே வந்துபோவார்கள். அதனால் யாராக இருந்தாலும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தெரிந்தால் பதில்சொல்வது எனது கடமையல்லவா.
தங்களின் வருகைக்கும் அன்பான விபரத்திற்க்கும் மிகுந்த மகிழ்ச்சி சகோ மீண்டும் மீண்டும் எனது அனைத்து தளத்திற்க்கும் வருகை தாருங்கள்..
அன்புச் சகோதரிக்கு வணக்கம்! என் தளத்திற்கு வந்து கருத்துரைமைக்கு நன்றி! மட்டி அருமை! பழைய பதிவுகளில் தையலைப் பற்றியும் கூறி உள்ளீர்கள். ஒரு Email Subscription - Option வைக்கக் கூடாதம்மா? சரி அது இருக்கட்டும். என் துணைவி ஒரு மாதமாக தையல் பழக சென்று கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் வந்தவுடன் உங்கள் தளத்தை பார்க்கச் சொல்ல வேண்டும். நன்றி சகோ!
ஷெல் ஃபிஷ் பார்த்திருக்கேன் .இப்ப ரெசிப்பி கிடைச்சாச்சு .
சமைத்து தருகிறேன் என் கணவருக்கும் மகளுக்கும் .THANKS FOR THE RECIPE
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி
வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html
Post a Comment