அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 6, 2013

யாரும் யாருக்கும் எதிரியல்ல!


//வணக்கம். இலக்கியம்,கவிதைன்னு நிறைய பேசுறி(எழுதுறி)ங்க..
"விஸ்பரூபம்" பற்றி உங்களின் (மேலான) கருத்தென்ன மேடம்.
(உங்களின் பார்வையில் சொல்லவும்.பிளீஸ்..)//

//யக்கோவ் விஸ்வரூபம் வெளியாகிருச்சே தெரியாதா? அதுசரி நீங்க எதிர்ப்பு தெரிவிக்கலையா, ஒரு கவிதைகூட கிறுகலையேக்கா அச்சோஒ நான் நக்கல் பண்ணலீங்கோ.உங்க கவிதையைகளை ஒன்றுவிடாம படிக்கிறேன் முகநூலில் ஆனா கருத்துகள் போடுவதிலைங்கோக்கா, இனிமே தொடர்ந்து வருவேனுங்கக்கா..

இதாங்க காலம் சினிமாக்காரர்களின் காலம் அதபுரியாம உங்க ஆளுங்க போராடுறாங்களே அச்சோ அச்சோ, சொத்த படத்துக்கு சோக்கா கிடைக்கபோகுது கரண்சி..//

//அன்புடன் சகோதரி மலிக்கா அவர்களுக்கு, உங்கமதம் இப்படிதான் அடுத்தவங்க வயிற்றில அடிக்கச்சொல்லியிருக்கா, கமலின் பரிதாபநிலை உங்க மதக்காரங்களுக்கு புரியவில்லையா?
சினிமாவால் சில சீர்கேடுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனாலும் சினிமாவை சினிமாவாதானே பார்க்கவேண்டும் பதில் ப்ளீஸ்//


அன்பின் அன்பானவள் மேனகா, மற்றும் சகோ கிரண், மற்றும் சகோ சுதர்சன். அவர்களுக்கு,தாங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விக்கு பதில் ஒரு பதிவாகவே எழுதியுள்ளேன் இப்படியும் என்னை எழுதத்தூண்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்,உலகிலுள்ள நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! நமக்குள் வேற்றுமையை ஏற்ப்படுத்தநினைக்கும் சிலரால் நம்மை வேற்றுமைப்படுத்திவிடமுடியுமா?
மதம் என்பது மனிதனை நல்வழிப்படுதவே அனைத்து மதங்களும் அதைத்தான் போதிக்கின்றன, அவற்றைப்பின்பற்றுகிறேன் என்ற பெயரால் சில மனிதஜாதிகள் செய்யும் கேடுகெட்ட செயல்கள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது என்பது வேதனைக்குறியது,

மார்க்கம்கூறாத ஒன்றை அதே மார்க்கத்தைச்சார்ந்தவன் செய்கிறான் அதனால்  இதுதான் அவன் மார்க்கம் , இப்படிதான் செய்யசொல்கிறது என சொல்வது அபத்தமானது, மேலும் இஸ்லாம் என்பது மதமல்ல மார்க்கம்,மனிதர்களை நெறிப்படுத்த வந்த மார்க்கம்.

இலக்கணத்தில் எழுத்துப்பிழையிருந்தால் திருத்திக்கொள்ளலாம், எல்லாம் முடிந்து அச்சிலேற்றிய இலக்கியத்தில் இலக்கணமே இல்லாதிருந்தால்?
என் இலக்கணத்தில் அடிக்கடி பிழையேற்ப்படும், அடித்து திருத்திவிடுவேன், ஆனால் பிறரின் குணக்களத்தில் பிழையிருந்தால் என் செய்வேன்?

இது கவிதையல்ல, கட்டுரையல்ல,
உணர்வுகள் மனங்களின் உணர்வுகள்
இது மனசாட்சியுள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்
இவைகள் உணர்வாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்

தன்வீடு பற்றி எரியாதவரை நெருப்பு சுவாலையின் கொடூரத்தை அறியமுடியாது,அதுபோல்தான்
எந்த ஒரு பாதிப்பும் தான் அடையாதவரை அதன் சாரத்தை நாம் உணரமுடியாது,
பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் திரைப்படங்கள், பொழுதுபோக்கோடு சேர்த்து பொடுபோக்காக பிறமனங்களை புண்படுத்ததொடங்கி தொடர்ந்து வருகிறது [எல்லாத்தரப்பிலும், என்றாலும் இஸ்லாத்தையும் அதனை பின்பற்றும் இஸ்லாமியர்களை கொஞ்சமல்ல நிறையவே கேவலப்படுத்தி காயப்படுதுகிறார்கள் என்பதை தாங்களெல்லாம் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முட்டாள்களும் மூர்க்கர்களும் எல்லாயிடத்திலும் உண்டு, அப்படி சிலர் செய்யும் காரியங்களை இவைகளைத்தான் செய்யச்சொல்கிறதென திருமறையின்மேல் பழிபோடுவதும்
நேர்வழிகாட்டவந்த மார்க்கத்தின்மேல் குற்றஞ் சுமத்துவதும் சரியா?

பிறமதக்கடவுள்களை ஏசுகிறவன் என்னையே ஏசுவதைப்போலாவான் என்கிறான் இறைவன்
இவ்வசனம் இறைவேதமான திருகுர்ஆனில் உள்ளது, அப்படி பிற மதங்களையும், பிறமத மனிதர்களையும்
இழிவுபடுத்தவேண்டாம் என்று வன்மையாக கண்டிக்கிறது இஸ்லாமிய மார்க்கம், அப்படியான மார்க்கத்தில் வந்திருக்கும் ஒருசிலர் தவறான புரிதல்களால் அறிவிலியாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்க ஒன்றே,

எங்கோ யாரோ இம்மதம் எனக்கூறி
இஸ்லாத்தின் பெயர்தாங்கி மனிதர்கள் புரியும் செயல்களுக்காக,
இம்மதம்தான் அனைதிற்க்கும் காரணகர்த்தா என்று சொல்வது எவ்வகையில் நியாயமானது?[மீண்டும் சொல்கிறேன் இது மதமல்ல மார்க்கம்]
இம்மார்க்கத்தை பின்பற்றும் அனைவரும் இதே கொள்கையோடுதான் செயல்படுவார்கள் என வீண்பழி சுமத்துவது எந்தத்தரப்பிலான நீதியானது?

அதற்காக இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் மார்க்கத்தைப் பற்றியும், இறைமறையாம் திருமறைப் பற்றியும், இறைத்தூதுவர் திரு நபிபற்றியும்,
சிறிதளவும் தெரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்துகொண்டே வேண்டுமென்று, கடைந்தெடுத்த  அப்பட்டமான பொய்களை, கலைகளென்ற பெயராலும், பொழுதுபோக்குகள் என்றபெயராலும் சித்தரிப்பது மிக மிக  கண்டிக்கதக்க ஒன்று என்பதை மனசாட்சியுள்ள மனிதநேயமுள்ள பிறமன உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனங்கள் ஒப்புக்கொள்ளாமலிருப்பது சரியாகுமா?

3 மணிநேர பொழுதுபோக்கு அம்சங்களை பொழுதுபோக்காகவே சித்தரிக்கத் தொடங்கியவர்கள் மத்தியில் வன்முறை வெறியை சின்னஞ்சிறு வயதிலிலேயே தூண்டும், காமங்களை கற்றுக்கொடுக்கும், நூதன திருட்டுக்கு வழிவகுக்கும், இன்னும் ஒருபடிமேலேபோய் எப்படியெல்லாம் நுணுக்கமாக கொலை செய்வது என்பது பற்றியும், இன்னும் கீழ்த்தரமாகபோய்
8, 10 வய்திலேயே  காதல் தொடங்கிக்கொள்வது, கள்ளத்தனம்புரிவது எப்படி என்பது பற்றியும்?பிறரின் கணவன் மனைவியை அடைவது மற்றும், பிற சொத்துக்களை சூரையாடுவது எப்படி என்பதைப் பற்றியும்?
ஆபாசங்களின் உச்சக்கட்ட நிலைகளை கண்கூடாக அறியத்தருவதெப்படி என்பதைப்பற்றியும்? இன்னும் வழக்கதில் இல்லாத எத்தனையோ வகைகளை பொழுதுபோக்கு என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கு
அளவேயில்லாமல் போய்கொண்டிருக்கிறது.

ஆபாசங்களும் அத்துமீறல்களும் அளவுக்கு மீறியவகையில் பொழுதுபோக்குகளில் கண்டு களிக்கும்
 இளம் பிஞ்சுகள் அதனை தேனாக நினைத்து தொட்டுக்கொள்கிறது போகபோக நஞ்சாக வேறுன்றி தன்னையே அழிப்பது அறியாமலே! அப்படியே அறிந்தாலும் அதனின் நின்றும் மீளமுடியாமலே!
மேலும் இப்படியான சூழலில் நின்றும் காப்பாற்ற தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் பரிதாபதிற்க்குரியவர்களே!

இதெல்லாம் சொல்லிதான் தெரியவேண்டுமா? 5 வயதிலேயே தொடங்கி முத்தங்களும் கட்டிப்பிடித்தல்களும்கூட இன்றைய இளம் சிறார்களுக்கு நன்கு விளக்கம்தரக்கூடியளவுக்கு காண்பிக்கப்படுவதும், கோடிக்களுக்காக கொள்கையுடையோரையும், கோட்பாடுகளை மதிப்போரையும் கொடும்பாவிகளாய் சித்தரிப்பதும், அந்த கொள்கையே தவறானதென வாதிடுவதும் எவ்விதத்திலாவது நியாயம் இருக்கா? மனசாட்சியோடு சொல்லுங்கள் சினிமாவை சினிமாகவாத்தான் பார்க்கமுடிகிறதென!

பொழுதுபோக்கோடு வாழ்க்கைக்குத்தேவையான வகைகளில் திரைப்படமோ அல்லது சீரியலோ எடுக்கமுடியாதா?[அட கோடிக்கள் கிடைக்காதோ]
வாழ்க்கையில் முன்னேறுவது!ஜெயிப்பது எப்படி! தனிமனித ஒழுக்கம்  சமுதாய ஒழுக்கம், சமுதாயத்தை நல்வழி படுத்துவது, குடும்பதை வழிநடத்துவது, குழந்தைகளை வளர்ப்பது,! உழைத்து சம்பாரிப்பது ,உருப்படியாய் வாழ்வது எப்படியென இப்படியான நற்சிந்தனையோடுகூடிய நகைசுவைகளோடும் நல்ல சிந்தனைகளை தூண்டகூடிய வகையிலும், ஆபாசங்களை புகுத்தாமல் அத்துமீறுதல் இல்லாமல் நல்லவழிகளை எடுத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கையில்,

 ஏன் இப்படி அடுத்தவர்களை புண்படுத்திப் பார்ப்பதிலும் அடுத்தவர்களை அழிக்க நினைப்பதிலுமே சிலர் குறியாக அலைகிறார்களென்றுதான்  புரியவில்லை? பணம் குவிக்க என்னவேண்டுமானால் செய்யலாம் என்ற காரணமோ? இல்லை குறுகிய மனப்பான்மையோ! இல்லை பிறரை எவ்வழியாயினும் வேரறுக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணமோ! இதில் எதுவென்றபோதும் அது மனிதகுலத்துக்கு சிறந்ததல்ல,நல்லதுமல்ல!
பிற மன உணர்வுகளை புண்படுத்தி கோடிக்குமேல் கோடிகள் வசூல் ஆனாலும், இப்பூமியைவிட்டு போகும்போது பிறர் அவர்களுக்கு போடும் வாய்கரிசிக்கூட வாயிற்குள் சேராது என்பதை புரியாதவர்களாகவா இருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை மதம் சார்ந்தவர்களாக பார்க்காதீர்கள், மன உணர்வுகளை மதிப்பவர்களாக பாருங்கள்.
உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லையா அதனில் நின்றும் தவிர்ந்துகொள்ளுங்கள்,விளகிக் கொள்ளுங்கள்
அதைவிடுத்து இதுதான் சரி அதுதான் சரியென உண்மையை மறைத்து பொய்மையை இணைத்து வாதிடுவோர்களின் கூற்றுக்களை தயவுசெய்து ஆராயுங்கள் அப்போதுதான் உண்மை எதுவெனப் புரியும்.

நம்கண்முன்னோ அல்லது முதுகுக்குபின்னோ நம்மையோ! நம் தாய்தந்தையையோ பிறர் கேவலப்படுத்தினால் நாம் தாங்கிக்கொள்வோமா? நாம் என்ன செய்வோம்?

நமக்கு நடந்தாலே ஜீரணிக்க முடியாத நம்மால், நம்மையும், நம்பெற்றோர்களையும் இன்னும் இந்த அகிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும்,படைத்து பாதுகாக்கும் இறைவனையும், அவன் அனுப்பிய தூதரையும், தூதர்வழிவந்த திருமறையும்,இவையனைத்தும் ஒன்றிணைந்த மார்க்கத்தையும் கேவலப்படுத்தினாலும், இழிவுபடுத்தினாலும் சினிமாவை சினிமாவாகப்பாருங்கள் எனசொல்வது சரியா சகோதரரே?

இது மதவெறியல்ல இனவெறியல்ல, உணர்வுகளின் வலி, மார்க்கம் சொல்லாத ஒன்றை, இப்படித்தான் சொல்கிறது இவர்கள் செய்கிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டிற்க்கு, இல்லை அப்படியில்லை இது உண்மையில்லை எங்கோ யாரோ தவறு செய்தால் அது மார்க்கத்தை சார்ந்ததல்ல என்பதை புரியவைப்பதற்காத்தான் தற்போது இஸ்லாமியர்கள் இப்படத்தை எதிர்கிறார்கள்,

இதுவரை தனது சுயரூபங்களை கண்டும் காணாமலும் கழிசடையாய் கக்கிக்கொண்டு திரிந்தவர்களுக்காகவும், தற்போது தனது சுயரூபத்தை விஸ்வரூபமாய் காட்டியமைக்காவும், இனிமேலும் கேளிக்கை கூத்துக்களுக்காக தூயவைகளை தூசாக எண்ணி வில்லங்கத்தை விதைக்காமலிருப்பதற்காகவும்,அமையாதியான முறையில் ஆர்ப்பரித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது இஸ்லாமியக்கடல்,இப்படத்தைமட்டுமல்ல இதுபோன்று வந்தவைகளுக்காவும் ,

இனிமேலும் வரமாலிருக்கவும்,உறுதியான இறைநம்பிக்கையில் உரைந்தவர்கள் விசுவாசங்கொண்ட இறைவனுக்காக அமைதியான வழியில் யார்மனதும் புண்படாவாறு,  தங்களது எதிர்ப்பை காட்டுவதில் தவறேதும் உண்டா?
எத்தனை சுயரூபங்கள் விஸ்வரூபமெடுத்தாலும்,வீழ்த்திடவோ இழிவுபடுதிடவோ முடியாது இஸ்லாத்தை என்பதை நிச்சயம் ஒருநாள் உணரும் இழிவையெண்ணும் இதயங்கள்.

மேலும் தற்போது இந்த பிரச்சனையை வைத்து வெவ்வேறு வழிகளில் சூழ்ச்சிகளும்  நாடகங்களும் நடந்தேறுகிறது , அநியாயப்பழிகளும் சுமத்தப்படுகிறது என்பதை அறியாதவர்களா தமிழ்நாட்டுமக்கள்,யார் எவ்வித நாடங்கள் நடத்தி அதை நம்ப வைக்க எவ்வழிக்குபோனாலும், பொய் ஒருபோதும் நீடிக்காது என்பது அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும்போது நிச்சயம் புரியும். யாரும் யாருக்கும் எதிரியில்லை!நம்மில் யாரும் யாரையும் எதிரியாய் நினைப்பதை விரும்புவதுமில்லை, எல்லோரும் உடன்பிறப்புக்களே!

ஒரே தாய் 5 பிள்ளை பெற்றிருந்தாலும் 5 ம் ஒற்ற குணமுடையவர்களாக இருப்பதில்லை, சிறு சிறு மாற்றங்களும், சிறுசிறு சங்கடங்களும் இருக்கத்தான் செய்யும், அதுபோல்தான் நாமும், நம்மில் குறைகள் இருக்கத்தான் செய்யும் , அச்சிலேற்றுமுன் இலக்கண பிழைகளை சரிசெய்வதுபோல், நமது மனக்குறைகளை  கண்டதும்  சரிசெய்துகொள்வது நம் மனதிடமே உள்ளது, எண்ணுவது சிறப்பானால் எல்லாமே சிறப்பாகும்.

சிந்திப்போருக்கே இப்பூமி விசாலமாக்கப்படுகிறது, தீயசிந்தனை தெளியும்போதும் தெளிவாக புரிந்துகொள்வார்கள்,
இதுவரை இருண்ட வழிகேட்டில் இருந்தவற்றை உணர்ந்து திருந்துவார்கள் மனதளவிலாவது. எல்லாம் வல்ல இறைவனே அதற்க்கு போதுமானவன்,அவனே அனைத்தையும் நன்கறிந்தவன், அவனே இவ்வுககிற்க்கும் எனக்கும் உங்களுக்கும் என்றும் பாதுகாவலன்.

மீண்டும் உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா

13 comments:

சுதாகர் said...

இலக்கணத்தில் எழுத்துப்பிழையிருந்தால் திருத்திக்கொள்ளலாம், எல்லாம் முடிந்து அச்சிலேற்றிய இலக்கியத்தில் இலக்கணமே இல்லாதிந்தால்?
என் இலக்கணத்தில் அடிக்கடி பிழையேற்படும், அடித்து திருத்திவிடுவேன், ஆனால் பிறரின் குணக்களத்தில் பிழையிருந்தால் என் செய்வேன்//

அச்சச்சோ அப்ப நீங்களும் அடிப்பீங்களா சிஸ்..

நியாயமான கேள்விகள்தான் சிஸ், காசுக்காக சிலர் செய்யும் கூத்து எல்லாத்தரப்பு மக்கலையும் பாதிகிறது. சகோதரத்துவத்தோடு இருப்பதற்க்கும் பங்கம்விளைவிப்பதுபோல,

விட்டுதள்ளுங்க சிஸ், குப்பையெல்லாம் வீட்டில் சேர்கலாம அதுபோல்தான் இதுவும்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உருவான மனக்குமுறல்..!
உங்கள்
உணர்வை
உள்வாங்கி
உணர்வாரொருவர்
உலகிலெங்கோ
உண்டெனில்
உளமெங்கும்
உவகையே..!

jaffer khan said...

salam sago!
Super article keep it up...!

ஹுஸைனம்மா said...

கேட்டவங்களின் உணர்வுகளை மதித்து விளக்கம் கொடுத்தது நல்ல செயல். நல்ல பதிவு.

சேக்கனா M. நிஜாம் said...

சிந்திக்கவேண்டிய விளக்கங்கள் !Asan Buhari said...

வாழ்த்துக்கள் மலிக்கா.

பண்போடு பதில்சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது.

அன்புடன் புகாரி

சேக் said...

அக்கா நீங்க நல்லாருக்கணும் ,உலகம் புரியாமல் இருக்கீங்க ,ஜெயலலிதா போட்ட வலையில் 2 3 குழு மாட்டி கெட்டபெயர் வாங்கி ,படத்தை தடை செய்து விட்டோம் என்று பீற்றிகொள்கிரார்கள் .பாப்ரி மஸ்ஜித் இடிக்க ஆள் அனுப்பிய ஜெ ,மோடிக்கு வாழ்த்து சொல்ல அவர் பதவி ஏற்பு விழாவுக்கு போன ஜெ ,தனது டீ வி க்கு கமல் படம் கொடுக்காததால் ,தடை செய்தாரே ஒழிய முஸ்லிம்களுக்கு மரியாதை கொடுக்க ஜெ மனசு ஒருநாளும் சம்மதிக்காது.மேலும் அல்லாஹ் யாவற்றிலும் ஞானம் படைத்தவன் .எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

liaquat ali said...

ஆயிரம் கற்பழிப்புகள் நாட்டில் நடந்தேறியும் டெல்லி மாணவி சம்பவம் மட்டும் எப்படி பேசப்பட்டதோ அதே போல் தான் விசுவரூபம் பிரச்சனையும் . இனி கவனமாக இருப்பார்கள்

Seeni said...

sako..!

nalla sonneenga...

en thalaththil..VISHA-ROOPAM...
7 thodar ezhiyullen
viruppam ullavarkal padiththu paarkkalaa'm....

பால கணேஷ் said...

வரிக்கு வரி கைதட்டி ஆமோதிக்கிறேன் தங்கையே உங்கள் உணர்வுகளை!

enrenrum16 said...

//வாழ்க்கையில் முன்னேறுவது!ஜெயிப்பது எப்படி! தனிமனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கம், சமுதாயத்தை நல்வழி படுத்துவது, குடும்பதை வழிநடத்துவது, குழந்தைகளை வளர்ப்பது,! உழைத்து சம்பாரிப்பது ,உருப்படியாய் வாழ்வது எப்படியென இப்படியான நற்சிந்தனையோடுகூடிய நகைசுவைகளோடும் நல்ல சிந்தனைகளை தூண்டகூடிய வகையிலும், ஆபாசங்களை புகுத்தாமல் அத்துமீறுதல் இல்லாமல் நல்லவழிகளை எடுத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கையில்,//

உணையிலெயே தமது ஆக்கங்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வ்ர வேண்டுமென விரும்புவர்கள் அதிக லாப நோக்கின்றி இவை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுப்பார்களே.... மனசாட்சி உறுத்தலின்றி பண்ம், புகழுக்காக எதையும் செய்ய முனவருபவர்களே இத்துறையில் அதிகம். தான் எடுத்த/நடித்த படங்களைத் தமது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க முடியுமா என இவர்கள் சிந்திக்க ஆரம்பித்தாலே ஊடகத்துறை நல்ல விதத்தில் முன்னேறும்.

உங்கள் எண்ணத்தை அழகாக வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட்டீர்கள் மலிக்காக்கா.

Anonymous said...

சினிமாக்கள் செய்யும் சீரழிவுக்கு அளவில்லாமல் போவதென்வோ உண்மைதாங்க மலிக்கா. அதுக்கா சினிமாவே பார்க்கக்கூடாதுன்னு சொல்லுறீங்களா?

பலபேருடைய பொழுதுபோக்கு அம்சமே அதுதான் அதிலேயும் இப்படி அள்ளிப்போட்டா எப்புடிங்க.

விஸ்வரூபம் மட்டும்தான் உங்க கண்ணுக்கு வில்லங்கபடமா தெரியுதா?
உலக நாயகனை ஊர்கோடியில் அமுக்கிட முடியுமா?

நெசமா நல்லவன்

Anonymous said...

ஆனாலும் உங்களுக்கு பாராட்டுகள். உங்க மததையும் விடுக்கொடுக்காம பிறரையும் புண்படுதாம பதில் சொல்லியிருப்பது நன்று மற்ற உங்க ஆளுங்கபோல கண்ணாபிண்ணான்னு கூவாம..

நெசமா நல்லவன்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.