அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, February 7, 2015

தாய் என்பதில் பெருமிதம்...


திருச்சங்கோடு KSR பாலிடெக்னிகல் காலேஜில் முதலாம் ஆண்டு ஆட்டோ மொபைல் படிக்கும் எனது புதல்வனுக்கு இன்றோடு 15 வயது நிறைவு பெற்று 16 வது வயத்துக்கு அடியெடுத்து வைக்கும் அவரை வாழ்த்தியபடியே,


இவ்வருடத்திம் முதல் செமஸ்டர் மார்க் விபரம்,மற்றும்
இரண்டாம் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்வில்,
ஹெச்சோடி தி செந்தில்நாதன் அவர்கள்  முதல் மற்ற ஆசிரியர்கள் வரை எமது மகனார் மரூஃப்பைதான் முதலில் வருவான் என்ற நம்பிகையில் இருந்துள்ளார்கள் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் மேடையில் பேசியபோது மனம் ஆனந்தத்திலும் கண்கள் ஆனந்தகண்ணீரிலும்
மிதந்தது.
 அவனின் குணநலன்கள் மற்றும் அவன் நடந்துகொள்ளும்விதம் படிப்பில் அவன்காட்டும் அக்கரையென
மகனைப்பற்றி ஆசான்கள் கூறக்கேட்டு பெற்றோர்களான எங்கள் உள்ளம் ஆனந்தக்கூத்தாடி மகிழ்ந்தது .இன்னும் கொஞ்சம் விளையாட்டுதனத்தைவிட்டுவிட்டு கவனம் முழுவதையும் படிப்பில் கொண்டுவந்தால் மிகசிறந்தவானக வருவான் என்ற அறிவுரையும் சான்றோர்சொல்லகேட்டபோது நிச்சயம் செய்கிறேன் என்ற அவனின் உறுதி மேலும் நம்பிக்கையை தந்தது


எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்பினிலே
என்ற மகவுகளுடைய நல்லதும் கெட்டதும் தாயையே சாரும் என்பதை
உணர்ந்து
 அவனின் முகவரி நான் என்பதை விட ” எனது முகவரி அவன்” எனும்எல்லையைத்தொடும்போது  மனம் மகிழ்வுகாணும் மரணம் வந்தபோதும் மனம் நிறைக்கொள்ளும்.

இறைவன் நாடினால்
இன்னும் எங்கள் மகனார் சிறப்புபெற்று எல்லோரிடத்திலும் அன்புபாராட்டி
எல்லோரும்போற்றும்படி வளர்வான் என்ற நம்பிக்கையில் இறைவனிடம் வேண்டியபடி,,

என்றும் அன்புடன்

2 comments:

-'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்...
பிறந்தநாளுக்கும்...
முதல் மாணவனாக ஆனதாற்கும்...

kari kalan said...

உங்களின் பெருமையை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள் !

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்"
இதில் தந்தை என்னுமிடத்தில் தாயென்று போட்டு கொண்டு மகன் மூலம் மென்மேலும் சிறப்புற வேண்டுமென வாழ்த்துகிறேன்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.