அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 17, 2016

விருதுக்கு எனது நூல் தேர்வு..



இறைவனின் உதவியால், எனது இரண்டாம்  கவிதை தொகுப்பு  
“பூக்கவா புதையவா” நூலிற்கு வாஷிங்டன் அமெரிக்க உலக தமிழ்பல்கலைகழகம் சிறந்த நூலுக்கான விருதுக்கு தேர்வுசெய்துள்ளது, மிகுந்த மகிழ்வை தந்துள்ளது, 
மேலும் வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விருதுவழங்கும்விழா மதுரை. பப்பீஸ்  ஹோட்டலில் நடைபெற உள்ளதென அழைப்பிதல் வந்துள்ளது. 
எழுத்தறிவித்த இறைவனுக்கும்,அதனை எடுத்தியம்ப வாய்ப்பளித்த என் குடும்பத்தார்க்கும் இன்னுமின்னும் எழுக்களில் முன்னேற உறுதுணையாயிருக்கும் தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.



4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இறைவனின் உதவியால், எனது இரண்டாம் கவிதை தொகுப்பு “பூக்கவா புதையவா” நூலிற்கு வாஷிங்டன் அமெரிக்க உலக தமிழ்பல்கலைகழகம் சிறந்த நூலுக்கான விருதுக்கு தேர்வுசெய்துள்ளது, மிகுந்த மகிழ்வை தந்துள்ளது//

மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

பானு said...

அல்ஹம்துலில்லாஹ்...மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா... மிக்க மகிழ்ச்சி...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வாழ்த்துகள் சகோதரி. விருதுகள், பரிசுகள் உங்களை இன்னும் சிறப்பாக எழுத வைக்கட்டும்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.