அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, September 24, 2009

கீரை வடை


சிகப்பு கீரை ஒரு கட்டு
கொண்டைக்கடலை 1 கப்
பல்லாரி 1
ப.மிளகாய்
ஆயில்,
உப்பு
இஞ்சி, பூண்டுவிழுது 1 ஸ்பூன்
மிளகாய் தூள் காரத்திற்கேற்ப


கொ.கடலையை அரவேக்காடாக வேகவைத்து அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்

கீரையை பொடியாக நறுக்கி [அதை சிறிது ஆயில்விட்டு வதக்கியும் போடலாம் அப்படியேவும் போடலாம்

ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை, நறுக்கிய கீரை,
பல்லாரி, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி-பூண்டு விழுது,

அனைத்தும் ஒன்றாக பிசைந்துகொண்டு
இதேபோல் சிறு உருண்டையாக்கி வடையாக தட்டி,
அதை நிறைய ஆயில்விட்டு,

இதுபோல் பொறித்து எடுக்கலாம்

ஒரு நான்ஸ்டிக் ஃபேனில் 2 ஸ்பூன் ஆயில்விட்டு தட்டிவைத்திருக்கும் வடையைபோட்டு

அதை இருபுறமும்சிவக்கவிட்டு எடுக்கவும்இது பார்க்க கலர்ஃபுல்லாகவும், மிக ருசியாகவும், உடம்புக்கு ஹெல்த்தியாகவும், இருக்கும்..

அன்புடன் மலிக்கா

7 comments:

என் இதயத்திலிருந்து.... said...
This comment has been removed by the author.
என் இதயத்திலிருந்து.... said...

கீரை வடைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இங்க தனியா இருக்றதால செய்ய தெரியா இருந்தேன். உங்க செய்முறை பார்த்து நேற்று செய்து பார்த்தேன். ஓரளவு சுவையா இருந்தது. இன்னும் பலமுறை செய்தால் நன்றாக வரும் என்று நினைக்கின்றேன். கொத்து ரொட்டி செய்வது பற்றி இலகுவான செய்முறை இருந்தால் பதியுங்களேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பதிவுகள்...

Ammu Madhu said...

நல்ல ரெசிப்பி..அன்புடன்,

அம்மு.

அன்புடன் மலிக்கா said...

//என் இதயத்திலிருந்து.... said...

கீரை வடைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இங்க தனியா இருக்றதால செய்ய தெரியா இருந்தேன். உங்க செய்முறை பார்த்து நேற்று செய்து பார்த்தேன். ஓரளவு சுவையா இருந்தது. இன்னும் பலமுறை செய்தால் நன்றாக வரும் என்று நினைக்கின்றேன். கொத்து ரொட்டி செய்வது பற்றி இலகுவான செய்முறை இருந்தால் பதியுங்களேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பதிவுகள்//

ரொம்ப சந்தோஷம், தாங்களின் முதல் வருகைக்கும் செய்து பார்த்துகருத்துக்கள் கூறியமைக்கும்.

தனியாக இருந்துகொண்டே செய்துபார்த்தமைக்கு ஒரு சபாஷ்

நிச்சயம் பதிகிறேன் எனக்கு தெரிந்தவகையில்
தொடர்ந்து வாருங்கள் ஊக்கம் தாருங்கள்

அன்புடன் மலிக்கா said...

//நல்ல ரெசிப்பி..
அன்புடன்,
அம்மு.//

ரொம்ப நன்றி அம்மு முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி
தொடர்ந்து வாருங்கள் ஊக்கம் தாருங்கள்

Jaleela said...

கீரை வடை ரொம்ப அருமை . இது சிவப்பு பாலக் தானே.
அபப் என் பக்கமும் வந்து கருத்தை தெரிவியுங்கள்.

Mrs.Menagasathia said...

நல்ல சத்தான ரெசிபி!!

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.