அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, June 29, 2010

டி.சர்ட்டில் மினி கவுன் அன் ஸ்கர்ட்.

டி சர்ட்டில் ஸ்கர்ட்
தேவையானவை
டி சர்ட் 1 [பனியன்கிளாத்]
பூனம் துணியில் 1 யாட் [2 முழம்]
நூல்
கத்த்ரிக்கோல்
தையல் மிசின் [இதில்லாம எப்புடிதைக்கமுடியும் ஹி ஹி கையாலும் தைக்கலாம்]
டி சர்ட்டை  இதுபோல் கீழ்பாகத்தில் நறுக்கவும் அதாவது இடுப்புபட்டிக்கு தேவையானைதை
அதோடு பூனம் துணியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் அடுக்கு கொசுவம் வைப்பதற்கு தோதாக[ஏதுவாக]
இது  ஸ்கர்ட்டுக்கு இடுப்பளவுக்கு தேவையான பட்டி
இடுப்புபகுதிக்கு எளாஸ்டிக்கும் வைக்கலாம். ஜிப்பும் வைக்கலாம்.
அதை ஒருபுறம் இணைக்கவும்
இதேபோல் இணைத்துக்கொண்டு

பூனம்துணியை இரண்டாக மடித்து அந்த இடுப்புப்பட்டியில் சேர்த்து அடுக்கியதுபோல் கொசுவம் வைத்து  தைக்கவும்

தைத்ததும் மறுபுறமும் இணைத்தது திருப்பினால் இதுபோல் வரும்

இது மேல்கவுனுக்கு
அதில் காலியாக இருக்கும் கழுதின் கீழ் இதுபோல் திருடி கலர்ஸ் வைத்து டிசைன் செய்துக்கொள்ளலாம் பார்க்க அழகாகயிருக்கும். இந்த டிசைன் செய்து 1 மணிநேரம் காயவிடனும். தைத்திவிட்டும் செய்யலாம்.

 மேல்கவுனுக்குக்கும் அதன் ஒருபுறத்தை முதலில் தைத்துஇணைத்துவிட்டு, அதேபோல் அடுக்கி தைக்கவும்
இதற்கு தாங்களின் இஸ்டத்திற்கு தகுந்தார்போல் இரு அடுக்கு.
 ஒரு அடுக்கு எனத் தைக்கலாம்

நான் தைத்திருப்பது இரு அடுக்கு.

இப்போது மினி ஸ்கர்ட் அன் கவுன் ரெடி.

இதை தத்தித்ததி நடக்கும் அழகுகுட்டிகளுக்கு போட்டால் அழகு டபுளாகும்.
 சிறிதாக ஆகிவிட்ட டிசர்ட்டில்கூட[ புதிதாக இருந்தால்]

இதேபோல் தைக்கலாம் இப்படி செய்துபாருங்களேன்.


டிஸ்கி// இது ஊரிலிருக்கும் என் தங்கையின் மகள் 
அழகுச்செல்லம் ஆதிராக்குட்டிக்கு தைத்துள்ளேன்.
எப்படியிருக்கு இந்த பெரியம்மாவின் கைவண்ணம்.

அன்புடன் மலிக்கா

23 comments:

Chitra said...

Very good idea and tip! பகிர்வுக்கு நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா .... ஆதிரா குட்டி இந்த சகலகலாவல்லி மல்லியின் கைவண்ணத்திலான டிரஸ் போட கொடுத்து வைத்தவள் .சூப்பர் டிப்ஸ் ....

jerald said...

நான் பெரியம்மா பைத்தியம்... ஆதிரா குட்டி யும் இனி பெரியம்மா பைத்தியம்

jerald said...

நான் பெரியம்மா பைத்தியம்... ஆதிரா குட்டி யும் இனி பெரியம்மா பைத்தியம்

எல் கே said...

arumai... ithaium parcel pannungalen

Deepa said...

ரொம்ப அழகு! அந்தக் குட்டிக்குப் போட்டு விட்டு ஒரு படமும் எடுத்துப் போடுங்களேன்.

ஜெய்லானி said...

லேடிஸ் டைலர் கடைபோடலாமுன்னு இருந்தேன் . இப்ப குட்டீஸுக்கும் சேர்த்து போட்டுட வேண்டியதுதான்.

அழகா தெளிவா இருக்கு.

ஜெய்லானி said...

தையல் மிஷின்ல ஊசி இருக்கனுமா..?
ஒரு சந்தேகம்தான் ஹி..ஹி..

சசிகுமார் said...

அக்கா இந்த டிரஸ் நல்லா இருக்கு. என் பொண்ணுக்கு எடுத்துக்கவா ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
Very good idea and tip! பகிர்வுக்கு நன்றி./

மிக்க நன்றி சித்ராமேடம் தொடர் வருக்கைக்கும் மிக்க மகிழ்ச்சி

அன்புடன் மலிக்கா said...

சாருஸ்ரீராஜ் said...
ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா .... ஆதிரா குட்டி இந்த சகலகலாவல்லி மல்லியின் கைவண்ணத்திலான டிரஸ் போட கொடுத்து வைத்தவள் .சூப்பர் டிப்ஸ் ..

என்ன சாருக்கா நான் பெரியம்மான்னா நீங்க பெரியபெரியம்மா தெரியும்தானே!
ஆகா குட்டிபொண்ணு கொடுத்துவைதவள்.

ரொம்ப நன்றி சாருக்கா

அன்புடன் மலிக்கா said...

jerald said...
நான் பெரியம்மா பைத்தியம்... ஆதிரா குட்டி யும் இனி பெரியம்மா பைத்தியம்.

ஓ அப்படியா. ரொம்ப சந்தோஷமுங்க
ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க மகிழ்ச்சி....

அன்புடன் மலிக்கா said...

Deepa said...
ரொம்ப அழகு! அந்தக் குட்டிக்குப் போட்டு விட்டு ஒரு படமும் எடுத்துப் போடுங்களேன்.//



நானும் இன்னும் என்குட்டிச்செல்லத்தை நேரில் பார்கவில்லை தீபி. எப்போதும் வெப்பில்தான் பார்க்கிறேன் அப்படியிருந்தும் என்னை தேடுதாம். என்னைபார்த்ததும் என்ன ஒரு துள்ளல். கண்ணாடியை உடைத்து கைவிட்டு தூக்கவிடலாம்போல் தோன்றும் முடியலையே ஊருக்குபோனதும் கீழே விடமாட்டோமுல்ல..

பார்சல்போட்டு அதுகிடைததும் போட்டோ எடுத்து அனுப்பியதும் போடுகிறேன் தீபிகா.

மிக்க நன்றிமா..

அன்புடன் மலிக்கா said...

LK said...
arumai... ithaium parcel pannungalen.//

ஓ தாரளமாக அனுப்புகிறேன் கார்த்திக்.
இதையும் பார்சல்தான் போடனும். அப்படியே ஜெராக்ஸ் ஒன்னு எடுத்து அதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் சரியா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
லேடிஸ் டைலர் கடைபோடலாமுன்னு இருந்தேன் . இப்ப குட்டீஸுக்கும் சேர்த்து போட்டுட வேண்டியதுதான்.

அழகா தெளிவா இருக்கு./

ஓகோ அதுவேறையா. சரி சரி எங்கே ஆரம்பிக்கலாம்.சா விலா து விலா. இல்லை ஊரிலா.

ரொம்ப சந்தோஷம் பாட்னர் அண்ணாத்தே..




//ஜெய்லானி said...
தையல் மிஷின்ல ஊசி இருக்கனுமா..?
ஒரு சந்தேகம்தான் ஹி..ஹி...//

இந்த அழகுல கடைப்போறப்போறாங்களாம் ஹி ஹி.
சேச்சே அதெல்லாம் வேணாம்
அப்படியே தையுங்க ஒட்டிகிடும் அது பேக்கிங் மிசினாயிருந்தா

[அச்சோ எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க இந்த அண்ணாத்தே இந்த வெயியில் ஒரு 10 நிமிசம் நிக்கவிடனும்..]

அன்புடன் மலிக்கா said...

சசிகுமார் said...
அக்கா இந்த டிரஸ் நல்லா இருக்கு. என் பொண்ணுக்கு எடுத்துக்கவா ஹா ஹா ஹா.//

என்ன கேள்வியிது சசி எடுத்துக்கோங்க இதுக்கெல்லாம் போய் என்னிடம் கேட்கலாமா!

உங்க குட்டிஸ் பேரென்ன சசி..

Anonymous said...

You are so creative acca. Keep posting new ideas like this.

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் மலிக்கா!!

அப்பாதுரை said...

குழந்தை தொப்பியில் எழுதியிருப்பது கொஞ்சம் விவகாரமான விசயம்.

'பரிவை' சே.குமார் said...

அக்கா.

ரொம்ப அழகா இருக்கு. நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி தச்சிருந்தா என் செல்லத்துக்கு வாங்கிக்கிட்டு போயிருப்பேன்.

செந்தில்குமார் said...

பாவம் எல்லா டைலரும் இனி வருமானம் இல்லாம கஷ்டபடப்போராங்க...மல்லிக்கா

இவ்வளவு சுலபமா சொல்லிகொடுத்தா எப்படி....

என் இளய பருவத்தில் இப்படியெல்லான் முயற்ச்சி செய்து ஊசியை உடைத்த ஞாபகம்....

Jaleela Kamal said...

mmmm
rompa super poongka

Jaleela Kamal said...

mmmm
rompa super poongka

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.