அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, July 10, 2010

மேகி கோதுமை முர்தபா..

தேவையானவைகள்.

மேகி நூடல்ஸ் -3 பாக்கட்

மக்ரூனி -1 கப்
முட்டை -5
காய்கறிகள் பொடியாக நறுக்கியது -2 கப்
கேரட். காளிபிளவர்.பீண்ஸ்.சோளம்.
வெங்காயம் -1
தக்காளி -1
மல்லியிலை 1/2 கட்டு
கரம் மசலா -2 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு..
கோதுமை தோசைக்கு
கோதுமை 1/4 கிலோ
உப்பு தண்ணீர்
கோதுமைதோசையின் பததுக்கு மாவைகலந்துக்கொள்ளவும்.
மேகி மக்ரூனியை வேகவைத்து வடித்துக்கொண்டு.
 அதை ஒரு அகன்ற பாதிரத்தில்போட்டு அதனுடன் நறுக்கிய காய்கறிகள். தக்காளி. வெங்காயம். உப்பு. மல்லியிலை. கரம் மசாலா. முட்டை அனைத்தையும் ஒன்றாக அப்பாத்திரத்திலேயேபோட்டு நன்றாக கலக்கவும்.
 பின்பு நான்ஸ்டிக்  தோசைக்கல்லில் எண்ணைவிட்டு

                               இதுபோல் ஊற்றி அடுப்பை மிதமாக்கவும்
 மேல்புறம் வெந்ததும் அதிலேயே நான்கு துண்டாக கட்செய்யவும். பின்பு திருப்பிபோடவும்.
 அது வெந்ததும் ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

 மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லில் சிறிது எண்ணைவிட்டு அதில் கோதுமைதோசை சுட்டெடுக்கவும்.
 அதையும் ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
 ஒரு பெரிய தட்டில் கோதுமைதோசையை வைத்து அதன் மேல்புறம் ஒரு துண்டு மேகி முர்தபாவை வைக்கவும்.
 இதுபோல் மடக்கவும் அதை இணைக்க சிறு குச்சிகள் [பல்குத்தும்குச்சி. சாப்பிட்டதும் பல்லில் மாட்டிக்கிட்ட தேவையும் படுமுல்ல] கொண்டு இணைக்கலாம் அல்லது அப்படியே பிளேட்டில் வைத்தும் கொடுக்கலாம்.
 ருசி மிக அருமையாக இருக்கும்.

வெஜ் காரங்க முட்டையை தவிர்த்து
மேகி செய்வதுபோல் செய்து இந்த கோதுமைதோசைக்குள் வைத்து சாப்பிட்டுபாருங்கள் இருவேறு வித்தியாச ருசியும் கலந்து சூப்பராக இருக்கும்.



இது ரு நல்லரெசிபியாக இருந்தது. என்ன இருந்தது கேட்குறீங்களா?

நானே இத முதல் முறையா டிரைப்பண்ணினேன். என்னது அப்படிப்பார்க்குறீங்க உண்மையத்தாங்க சொல்லுதேன்
நல்லாயிருந்ததுன்னு பெண்பதிவர்கள் சந்திச்சோமே அப்போது சொன்னாங்களே! என்ன? என்ன கேட்டிங்க ஓ அதுவா இதுன்னுதானே. அதேதான் இது..

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..

அன்புடன் மலிக்கா

15 comments:

காஞ்சி முரளி said...

ஒரு பிளேட் பார்சல்...

எல் கே said...

differetna irukku, egg illama panna mudiumaa??

'பரிவை' சே.குமார் said...

nallaththaan theriyuthu. bachelor lifela ithellam seiya enga neram irukku... mmmm... friday try seiyalaam.

நாடோடி said...

என‌க்கு பிடிக்க‌ல‌....
.

.

.


இப்ப‌டி ப‌ட‌த்த‌ ம‌ட்டும் போட்டு, வாயில‌ த‌ண்ணி வ‌ர‌ வ‌ச்சிட்டு, பார்ச‌ல் அனுப்பாம‌ விடுற‌த‌...அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

பிரியாணி சந்திப்புல போட்டதான்னு கேக்கலாமுன்னு வந்தால் நீங்களே சொல்லிட்டீங்க ..சூப்பர் ..

ஒரு செட் சூடா பார்ஸல்...

ஸாதிகா said...

அட..இப்படித்தான் செய்தீர்களா?டிரை பண்ணிடுவோம்.

Mohamed G said...

பரோட்டா முர்த்தபா கேள்விபட்டிருக்கின்றோம்,மாகி முர்த்தபா புதுசுதான்.

Admin said...

படங்களைப் பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கு. அனுப்பிவிடுங்க

GEETHA ACHAL said...

Differentஆக இருக்கு...அருமையாக இருக்கின்றது...செய்து பார்க்கிறேன்...நன்றி...

சாருஸ்ரீராஜ் said...

malli vithyasama irukku , egg illama verum noodles mattum vachu innaiku seithu parkiren ... yena pasangaluku gothumai dosai&noodles piditha item (tamil font not working)

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
ஒரு பிளேட் பார்சல்...

பிளேட் மட்டும்தானே! நேற்றே அனுப்பிச்சிட்டேன் வந்ததா?முரளி..


//LK said...
differetna irukku, egg illama panna mudiumaa??

குறிப்பிலேயே சொல்லியிருகேன் கார்த்திக். செய்யலாம் செய்துபாருங்க. ஆனா முட்டைபோட்டாதான் முர்தபா போல் வரும். அது செட்டாகனுமில்லையா தோசைக்கல்லில் ஊற்றும்போது வெறும் மேகிகலவையை ஊற்றினால் எப்படி எடுக்கவரும் அதேன் சொன்னேன்.

மேகிபோல் செய்து அதனை தோசைக்குள் வைத்து சாப்பிடலாம்.

ஆனா ஒன்னு நான் அதுபோல செய்ததில்லை கார்த்திக்..

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
nallaththaan theriyuthu. bachelor lifela ithellam seiya enga neram irukku... mmmm... friday try seiyalaam.

கஷ்டமேயில்லை 15 நிமிசத்தில் செய்திடலாம் குமார் ஒரு நாளைக்கு டிரைப்பண்ணிப்பாருங்கோ..

நன்றிகுமார்.

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
என‌க்கு பிடிக்க‌ல‌....//
.

. ம்ம்ம்ம் ஹூம் அழுறது கேட்குதா!
பிடிக்கலைன்னதும்.

.


//இப்ப‌டி ப‌ட‌த்த‌ ம‌ட்டும் போட்டு, வாயில‌ த‌ண்ணி வ‌ர‌ வ‌ச்சிட்டு, பார்ச‌ல் அனுப்பாம‌ விடுற‌த‌...அவ்வ்வ்வ்வ்//

இனி பிளாக் பார்சன் ஒன்னு ஓப்பன் பண்ணலாமுன்னு இருக்கேன் என்ன ஒன்னு டிரிபுளா பேப்பண்ணனும் ஓகே ஃப்ரியெல்லாம் கிடையாது இது சர்விஸ் சார்ஜிமட்டும்தான்.

மிக்க நன்றி ஸ்டீபன்

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

அன்றே நான் ருசி பார்த்துவிட்டேன் ரொம்ப அருமை மலிக்கா , வேலை தான் கொஞ்ச்ம அதிகம்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.