அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, July 14, 2010

மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன்..


.ஸ்பெசல் அவித்த மீன்கறி
மீன் கால் கிலோ
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
பச்சைமிளாய் 4
வரமிளகாய் 3
எண்ணை 1 ஸ்பூன்
கடுகு
உப்பு

மீனைக்கழுவி துண்டுக்களாக்கி அதில் உப்பைதடவி மஞ்சள் தூள் வரமிளாய் கடுகு இவற்றை விழுதுபோல் அரைத்து அதை மீனுடன் கலக்கவும் பச்சைமிளகாயைகீறிகொண்டு எண்ணையும் சேர்த்து அதையும் அதனுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதனை குக்கரில்[ தண்ணீர் கொஞ்சம் ] 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

அவித்த மீன் வாசனையுடன் சாப்பிட டேஸ்டாக இருக்கும் இது
புத்தகத்தில் படித்து செய்த சமையல்.

அன்புடன் மலிக்கா..

கருவிலிருக்கும் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


இந்த தகவல்கள் நமக்கு மெயிலில் வந்தது. அல்லாரும் அறிந்துகொள்ளட்டடுமேன்னு இதில்[இது ஏற்கனவே படித்ததுதான் மீண்டும் படிப்பதில்------- அப்படின்னு கருத்துக்கள் வரும் ஹி ஹி.. அதுவும் சரியே. இருந்தாலும் தெரியாதவுக தெரியட்டுமேன்னு ஒரு அக்கரைதான்..

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இதுத் தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில்,”கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

16 comments:

எல் கே said...

point noted

GEETHA ACHAL said...

என்ன கொடுமை பாருங்க...இதே அமெரிக்காவில் தான் நான் கர்பமாக இருக்கும் பொழுதும் சரி...குழந்தைக்கு பாலுட்டும் பொழுதும் சரி...மீனை கண்ணால் கூட பார்க்க கூடாது...சாப்பிட கூடாது...அதில் Mercury அளவு அதிகமாக இருக்கின்றது...குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பினை அதிகம் கொடுக்கும்.என்றும் ஒரு Excel Sheetயில் ஒரு சில மீன்களை மட்டும் சாப்பிடலாம்...அதுவும் மாதத்திற்கு 1 முறை இவ்வளவு அளவு என்று கொடுத்தாங்க...அப்புறம் என்ன...எதுக்கு risk எடுக்க வேண்டும் என்று அக்ஷ்தாவிற்கு 1 வயது ஆன பிறகு தான் மீனை சாப்பிட்டேன்...

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பதிவு அக்கா. மீன் அவியல் பிலிப்பைனி சாப்பிடுவதுபோல் இருக்காது என்று நினைக்கிறேன்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

தகவலுக்கு நன்றி.. :-))))

காஞ்சி முரளி said...

Saringa....
Malika sonna sarithan...!

Natpudan..
Kanchi Murlai

நாடோடி said...

உப‌யோக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

ஜெய்லானி said...

ஜெய்லானி ..?

எஸ் மேடம்

ஜெய்லானி said...

//மீன் கால் கிலோ//

மலிகாக்கா மீன் கால் எங்க கிடைக்குது.நானும் ஊர் பூரா தேடிட்டேன் ஆனா எங்கயும் கிடைக்கல. தகவல் பிளிஸ்

ஜெய்லானி said...

//அவித்த மீன் வாசனையுடன் சாப்பிட டேஸ்டாக இருக்கும் இது
புத்தகத்தில் படித்து செய்த சமையல்//

அவித்த மீன் வாசனையுடன் எதை சாப்பிடனும் ஹி..ஹி..

ஜெய்லானி said...

மீன் ஃபிரை ஒரு பிளேட் சூடா பார்ஸல்


நல்ல பதிவு ...!!

சசிகுமார் said...

கடைசி வரைக்கும் என்ன மீனுன்னே சொல்லவில்லையே ஹி ஹி ஹி

காஞ்சி முரளி said...

மீன் ஃபிரை ஒரு பிளேட் சூடா பார்ஸல்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

அன்புடன் மலிக்கா said...

Ananthi said...
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
//

உங்கள் அன்பான நட்பின் அடயாளமாய் அன்புடன் விருதை பெற்றுக்கொண்டேன் ஆனந்தி,

மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//மீன் கால் கிலோ//

மலிகாக்கா மீன் கால் எங்க கிடைக்குது.நானும் ஊர் பூரா தேடிட்டேன் ஆனா எங்கயும் கிடைக்கல. தகவல் பிளிஸ்.//

நேரா ஜெய்மார்ட் போங்க அங்க ஜெய்மீன் சாரி நெய்மீன். எடுத்து கால்கிலோன்னு கேளுங்க
கொடுப்பாக வாங்கிவந்து சமைங்க. ஒரு ஆளுக்கு கால்கிலோ 5 நாளைக்கு வரும்

அன்புடன் மலிக்கா said...

GEETHA ACHAL said...
என்ன கொடுமை பாருங்க...இதே அமெரிக்காவில் தான் நான் கர்பமாக இருக்கும் பொழுதும் சரி...குழந்தைக்கு பாலுட்டும் பொழுதும் சரி...மீனை கண்ணால் கூட பார்க்க கூடாது...சாப்பிட கூடாது...அதில் Mercury அளவு அதிகமாக இருக்கின்றது...குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பினை அதிகம் கொடுக்கும்.என்றும் ஒரு Excel Sheetயில் ஒரு சில மீன்களை மட்டும் சாப்பிடலாம்...அதுவும் மாதத்திற்கு 1 முறை இவ்வளவு அளவு என்று கொடுத்தாங்க...அப்புறம் என்ன...எதுக்கு risk எடுக்க வேண்டும் என்று அக்ஷ்தாவிற்கு 1 வயது ஆன பிறகு தான் மீனை சாப்பிட்டேன்,..//

ஓ அப்படியா! ஒரு சிலரின் உடல்வாக்கு கழந்தையின் நலன்கருதி அப்படி சொலியிருக்காங்கலோ என்னவோ! ஆனாலும் மீனில் நிறைய ஊட்டச்சத்து இருக்கு.

இங்கு [குஜராத் ஐயராத்து அக்கா]
என்னோட பிரண்ட் அவங்க மகனுக்கு மீன்கொடுத்தாதான் கண்ணும் மூளையும் சரியாகுமுன்னு சொன்னாங்க. அவங்களூக்கு சிரமம் பின்பு மீன்மாத்திரை முட்டியின்னு கொடுத்து அதன் பின்பு சரியாச்சி. இடையிடையே தற்போதும் கொடுகிரார்கள்..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.