அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, May 9, 2011

வெற்றிகள் குவியட்டும்..


இந்தபோட்டோவில் இருப்பது. எனது பெரிய மச்சான்.[மாமன் மகன். கணவரின் அண்ணன்.] அவர்களின் மகன். ஜெயினுல் அஸ்லம்.
இவர்   குமாரப்பாளையம் ஸ்ரீ வித்திய விகாஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் இவ்வருடம் 12 ஆம் வகுப்புத் தேர்வில்.
1200. மார்க்கிற்க்கு. 1134.மார்க  எடுத்துள்ளார்.

எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம்.மிக்க மகிழ்ச்சி.
ஜெயினுல் அஸ்லத்திற்க்கு.எங்களின் மன்மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். படிப்பில் இன்னும் பலநிலையில் முன்னேற இறைவன் அருள்புரிவானாக..வெற்றிகள் குவியட்டும்...

இன்று 12,ஆம்  வகுப்பு ரிசல்ட். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களைவிட அவர்களின் குடும்பங்கள்தான் என்ன எழுதியுள்ளார்களோ! எப்படி எழுதியுள்ளார்களோ!என்ன மார்க்க வருமோ! என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்திருப்பார்கள். இதோ இன்று அவர்களின் எதிர்பாப்புகளுக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும்.

நல்ல மார்க் எடுத்து தேர்வான குழந்தைகளுக்கு  பதிவர்களின் சார்பாக நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில். சற்று குறைந்த மதிப்பெண்களை வாங்கிய குழந்தைகளுக்கு இனிவரும் காலங்களில் இன்னும் பயிற்ச்சியெடுத்து நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.

பெற்றோர்களுக்கு!.. தங்களின் குழந்தைகளிடம் முதலில் நல்ல நட்போடும் அன்போடும் அரவணைத்து, அவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கி  சாதனை படைக்க தூண்டுகோலாகவும்.ஏற்றம்காண ஏணியாவும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நச்சரித்துக்கொண்டேயிருந்தால் எரிச்சல்தான் வரும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து. அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதோர் வழியை காட்டவேண்டும்..

வாழ்த்துக்களுடன்
அன்புடன் மலிக்கா

15 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவருக்கு என் வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதிக மதிப்பெண் வாங்கியுள்ள அந்த தங்கள் உறவினர் [மாணவர்] அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//எதற்கெடுத்தாலும் நச்சரித்துக்கொண்டேயிருந்தால் எரிச்சல்தான் வரும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து. அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதோர் வழியை காட்டவேண்டும்..//

பெற்றோர்களுக்கு நல்ல அறிவுரை - காலத்திற்கு ஏற்றது.

படத்தில் காட்டப்பட்டுள்ள பழங்கள் யாவும் அருமை. நாக்கில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

congrats to him!!

Chitra said...

Convey our wishes to him. :-)

Chitra said...

The new template looks very nice. :-)

Jaleela Kamal said...

ஜெய்னுள் அஸ்லத்துக்கு வாழ்த்துக்கள்,
படிகக்வே ரொம்ப சந்தோஷமா இருக்கு

பாவா ஷரீப் said...

தம்பிக்கு வாழ்த்துக்கள் மலிக்கா

பாவா ஷரீப் said...

தம்பிக்கு வாழ்த்துக்கள் மலிக்கா

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

Unknown said...

congrats......

குணசேகரன்... said...

வாழ்த்துக்கள்..i hats of that boy..congrates his parents...

jayakumar said...

good.my wishes too malika...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Congrats to him...all the best for success in future

Anonymous said...

mikka nandri

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.