அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, August 30, 2012

என்றும் உங்கள் ஆதரவை நாடி!


அன்பிற்கினிய எனது இணையதள உறவுகளுக்கும். நட்புகளுக்கும்.அன்பின் நெஞ்சங்களுக்கும் எனது சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும்.மனசங்கடங்களையும்.உள்நெஞ்சத்து உணர்வுகளையும். உங்களோடு பகிர்ந்துகொள்வதில்  மகிழ்வதோடு அதற்க்கு உங்களின் அன்பின் பரிமாற்றங்களையும் பெற்றுக்கொண்டு நெகிழ்ந்தும் வருகிறேன். அதேபோல் தற்போது

மேலும் விபரமறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..

http://kalaisaral.blogspot.com/2012/08/blog-post.html அதேபோல் தற்போது 

 எங்கள் ஊரில்  
ஆன்லைன் சம்மந்தமான 
உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட  
”பிஸ்மி” ஆன்லைன் சென்டர்  என்ற நிறுவனைத்தை விரைவில் திறக்கவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். 

அதிவேகமாக நகரும் நாட்களில் 24 மணிநேரம் மனிதருக்கு போதவில்லை அதனை அறிந்தே இறைவன் மனிதத்தேவைகளை நொடிக்கணக்கில் நிறைவேற்றிட மனிதனைக்கொண்டே கணினியை கண்டுபிடிக்கவைத்து காலநேரத்தை வீணடிக்காது அதன்மூலம் மனிதர்களின் அவசரதேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள கற்றுகொடுத்துள்ளான் அதன் அடிப்படையில்தான் உங்கள் காலநேரத்தை மிச்சப்படுத்த உங்களை வீண் அலைச்சலிலிருந்து தடுக்க. உங்கள் சிரமங்களை குறைக்க.  இதுபோன்ற ஸ்தாபனங்கள் தொடங்கப்படுகிறது அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதோடு அதனிலிருந்து எங்களுக்கும் பயன்தருமாரும்
உதவுங்கள்.

திறப்பு நாளை அதி விரைவில் தெரிவிக்கிறேன். உங்களின் தேவைகளை நிறைவேற்றிட காத்திருக்கிறோம்.தாங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களோடு என்றும் இணைந்திருங்கள் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள். எங்களுக்காக பிராத்தனையும் செய்யுங்கள்...

அன்புடன் மலிக்கா

12 comments:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

புதிதாக தொடங்கள் இருக்கும் வியாபாரதில் வெற்றியடை துஆ செய்கிறேன்.

Jaleela Kamal said...


அஸ்ஸலாமு அலைக்கும்,
வாழ்த்துக்கள் மலிக்கா பிஸ்மி சென்டர் பெயரே அருமை.
உங்கள் சேவை சிறப்பாக அமைய எங்கள் துஆக்கள்\
இப்படிக்கு
உங்கள் ஜலீலாக்கா

Unknown said...

INSHA ALLAH,ALLAH WILL HELP.

BY,
H.Anvardeen.

பால கணேஷ் said...

இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் தங்கையே. நிச்சயம் உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

ஸாதிகா said...

எனது வாழ்த்துக்களும் துஆக்களும் மலிக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள சேவைப்பதிவு.

வாழ்த்துகள்.

sakthi@shija said...

மலிக்காக்கா நீங்க இந்தியா போய் உருப்படியான வேலையைதான் பார்கிறீர்கள்.மற்றவர்கள்போலில்லாமல் பெண்களுக்கு எடுத்துக்காட்டக இருக்கிறீர்கள். வீட்டுக்குள்ளேயும் நிறுவனம் [ஃபேன்ஷி கடை]வெளியேயும் நிறுவனம் [ஆன்லைன் சென்டர்] அசத்துறீங்கப்பா.

சரி அடுத்து ஏதாவது செய்யப்போறீங்க சொல்லுவீங்களல்ல எங்ககிட்ட..

வாழ்த்துகள் அக்காள் உங்கள் வளரச்சியும் சேவைகளும் தொடரட்டும்...

அன்புதம்பி

சக்திவேல்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

எல் கே said...

வாழ்த்துகள்

காஞ்சி முரளி said...

ஹி..! ஹி...!

வாழ்த்துக்கள்...!

அப்படியே உங்க கடைக்கு பக்கத்துல ஒரு கடையப் பாருங்க...!

நானும் ஓர் கடையத் தொறக்குறேன்...!

Unknown said...

வாழத்துக்கள் என்றென்றும்..

அன்புடன் Br. அபு ஆஃப்ரின்

Unknown said...

hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.