[கனவைக்கூட சமைப்போமுல்ல] இது அந்தகனவு இல்லீங்கோ,
கண்ணில் நீந்தும்
கனவையும் உணர்வாய் சமைப்போம் கவிதையாய்
கடலில் நீந்தும்
கனவாவையும் சமைப்போம் கனவாக் கறியாய்.
அச்சோ இங்கேயும் கவிதையா. ஓடாதீங்க நில்லுங்க.சமையலதான் இது சமையல்தான்..
கனவா! [squid] தேவையான அளவு[இது 1 கப்]
பட்டர் தேவையான அளவு,
தக்காளி 1
பல்லாரி வெங்காயம் 1
சோயா சாஸ் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் 2 இலை
சீரகம் சோம்பு மிளகு சிகப்புமிளகாய்.3.பட்டை
இவைகளை லேசாக வறுத்து பொடித்த மசாலா 1/14 ஸ்பூன்
கொத்தமல்லியிலை
உப்பு
எண்ணை
கனவாவை சுத்தம் செய்துகொண்டு எடுத்துக்கொள்ளவும்
[சுத்தம் செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும் இல்லையெனில் அதிலிருக்கும் கருப்பு பித்து கலங்கிவிட்டால், மொத்த கனவாமீனும் கருப்பாகிவிடும்]
தக்காளி வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் இவைகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அடுப்பை பற்றி, அதில் ஒரு கடாய் வைத்து அது சூடானதும், அதில் பட்டர்போட்டு உருகியதும் அதனுடன் கொஞ்சம் எண்ணைவிட்டு,அதில் சோம்பு போட்டு தாளித்து, அதனுடன், நறுக்கிவைத்துள்ள வெங்காயம்போட்டு, சிவக்க வதங்கியதும், தக்காளியைபோட்டு அதுவும் வதங்கியது,அதன்மேல்,இஞ்சி பூண்டு விழுது வாசனை வந்ததும்,வறுத்து பொடித்த மசாலாவைபோட்டு கிளறும்போதே சோயா சாஸ் ஊற்றி கிளறினால் நன்றாக வாசம் வரும், அப்போது , ஸ்பிரிங் ஆனியன் போட்டு,அதன்மேல் கனவாவை போட்டு கிளறி மசாலாக்கள் கனவாவோடு சேர்ந்து பிரண்டு கமகமக்கும்போது, உப்பு போட்டு 1கப் தண்ணீர்விட்டு, அடுப்பை மெதுவாக குறைத்துவைக்கவும்.
சற்று நேரம் கழித்து திறந்து கிளறிப்பார்த்து கறிபத்ததுக்கு வந்ததும் வெதுவிட்டதா என பார்த்துவிட்டு வேகவில்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து 2,3 நிமிடம் கிளறிவிட்டு பின்பு இறக்கவும். அதன்மேல் கொத்தமல்லியிலை தூவி கிளறி, சாப்பிடவும். இது மிகவும் ருசியான கறி, சப்பாத்தி, பரோட்டா, சோறுக்கூடவும்,சாப்பிடலாம்.
கனவகூட சமக்கிறாங்கப்பா, யாரோட மயிண்ட் வாய்ஸோ கேட்குது. ஹாஹா..
அன்புடன் மலிக்கா.
4 comments:
என்ன ஆச்சரியம் ! எங்கள் வீட்டில் இன்றைய பகல் உணவில் கனவா கறியும் ஒன்று... சாப்பிட ருசியாக இருக்கும்.
தொகுப்பு அருமை !
தொடர வாழ்த்துகள்...
கணவா மீன் கறி பார்க்க ரொம்ப நல்ல இருக்கு. கவிதையும் சூப்பர்:)
கனவ கூட கவிதையும் போட்டி போடுது
இது கனவா?! நினைவா?!
Post a Comment