அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, March 13, 2013

என்னையே கவுத்திட்டாங்களே!



மழலையர் சாம்ராஜியத்தில் மகிழ்ச்சியோடு மலிக்கா.

கடல்தாண்டி பஃஹ்ரைன் நாட்டுக்கு ஒரு குழந்தையினைக்காண வந்த எனக்கு, கண்ணுக்கு  குளிர்ச்சியாய், மனதுக்கும் மகிழ்ச்சியாய், மழலையரின் தோட்டத்துக்கு நடுவில் அவர்கள் அசைத்து ஆடி விளையாடும் ஊஞ்சலாகிபோனேன்,குழந்தைச் செல்வங்களின் அன்புக்கடலில் ஆழம் பார்த்து ஆழம்பார்த்து கவிழ்ந்தேபோனேன் நான்.
அழகு பொக்கிஷம்,  மதிமயக்கும் தேவதை ,  மலர்களின் ரோசா, 
எங்க வீட்டு ஷெஷா.
இரண்டு மலையாள இளவரசர்களுக்கு மத்தியில்  ஒரு தமிழ்நாட்டு ராசா
காயல்பட்டின குயி[ல்]ன் [அஃப்ரா] 
இவங்க பேசும் தழிம் மிக அழகாக இருக்கும், மலிக்கா ஆண்டி நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க, இது ரொம்ப அழாக இருக்கு எனும்போதும்,  அந்த ”ழ” உச்சரிப்பும்,  ”தெரியாதா உங்களுக்கு” என இவுக கேட்கும்போது,மிக மிக அழகாக இருக்கும், இவங்களிடம் பேசிக்கொண்டேயிருக்கப்பிடிக்கும்,
அக்‌ஷிதா, ஆகில்[மலையாள மைனாக்கள்]
அதிரையின் இளவரசன், கொஞ்சும் மழலை “குத்தூஸ்
”தொண்டியின்” வருங்கால ஆஷிச நாயகன்[ஷஹீம் அலி]
இவர் பேசிக்கொண்டேயிருக்கும் அழகு அருமை, இவங்க என்னை தொண்டிக்கு அழைத்துபோய் அவங்க வீட்டையே தந்துடுவாங்களாம், அதாவது எல்லாம் தருவேன் உனக்காக ந்னு சொல்லாமல் சொல்லுவார், நான் பெரியவனா இருந்தா உனக்கு தலை துவட்டிவிடுவேன் என சொல்லி சிரியோ சிரின்னு சிரிக்கவைத்தவர்,
ஆகி[ல்]லென்னும் அழகன்,  இவருக்கு நான் என்றால் மிகவும் இஸ்டம்,  மூச்சுக்கு மூச்சு  ஆண்டி ஆண்டி என்று வலம் வந்[ரு]து, எனது ஒவ்வொரு செயலையும் ரசிக்கும் மலையாள மழலை. ஆண்டி நீ ஐஸ்வர்யா ராயப்போல உண்டுன்னு[ அது சரி ஐஸ்வர்யா ராயின்னா யாரு அவ்வ்வ்வ்] சொல்லி பக்கதிருப்போரெல்லாம்  அட குட்டீஸே, என அசந்துபோவதுபோல் பேசினானே பார்க்கனும், ஆண்டி நீ ஸாரி கட்டி எண்ட வீட்டுவா, என என்னை அழைத்துகொண்டுபோய் விருந்துகொடுத்தவர்,
முத்துப்பேட்டையின் குயின் ”முஃப்லிஹா” [நம்மளுக்கு அடுத்தபடியா வருவாங்களோ சரி சரி விடுங்க], இவங்க உதடு குவித்து கன்னத்தில் கொடுக்கும் முத்தமிருக்கே அப்பப்பா அதுக்கே சொத்த எழுதி வச்சிரலாம்..[ரிஸ்வாஸ் காதுலமட்டும் இத போட்டுடாதீங்க, யாரது? இவுகட அம்மாதான்]

 அதிகம் பேசாத அழகு குட்டீஸ் அஃப்வான். இவரின் மெளனச்சிரிப்பு மிகவும் அழகு, சேட்டையில்லாமல் சேட்டைசெய்யும் செல்ல மழலை..

பாசமுள்ள யாசர், மற்றும் ,குட்டிஸ் முஃப்லிஹா,குத்தூஸ்.

கவுத்திட்டாங்கய்யா இவுங்க என்னையே கவுத்திட்டாங்கய்யா..

பாலைவத்துக்கு சென்ற என்னை சோலைவனதுக்குள் சொக்க வை[த்த ]க்கும் செல்வங்களுக்கு, எனது அன்பு முத்தங்கள் என்றென்றும்...

டிஸ்கி// இவர்களெல்லாம் வளர்ந்து என்னை யாருன்னு கேட்டா, இதைக்காட்டியாவது அவதானுங்க நான், இதெல்லாம்தான் நீங்கன்னு சொல்லுவோமுல்ல..[எல்லாத்துக்கும் இப்ப ஆதாரம் கேட்கும் காலமுங்கோ ஹா ஹா]

அன்புடன் மலிக்கா..

12 comments:

Anonymous said...

ungkaLai kavuthiddangkalaa.super. kuttiskal superooooooooooooo super

hiyami

சாருஸ்ரீராஜ் said...

malli kutties anaithum alagu .so cute kutties, sezha so cuteeee

வாணி said...

அழகான குழந்தைகளோடு அன்பான நீரோடையும். அழகோ அழகோ.

இன்றுதான் உங்களைப்பார்கிறோம் மலிக்காமேம்.

உண்மையாவே அழகா இருக்கீங்க உங்கள் கவிதைகலைபோல். உங்க கவிதைக்கு நான் ரசிகை தீவிர ரசிகை.

ஒரு கவிதையை சுட்டுகூட என் தோழிகிட்ட என்னோடதுன்னு சொல்லி. அதர்ச்சி அடைய வச்சிட்டு. பின்பு உண்மையை சொல்லிட்டேன்..

அன்புடன் வாணி

வாணி said...

ஷெஷாவின் கண்ணாடி போஸ் ரொம்ப சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சுத்திப்போடுங்க

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு செல்லங்கள்... செல்வங்கள் ...

சேக்கனா M. நிஜாம் said...

அழகிய தொகுப்பு !

தொடர வாழ்த்துகள்...

'பரிவை' சே.குமார் said...

குட்டீஸ் போட்டோஸ் அருமை அக்கா...
மலர்க்கண்காட்சி பார்ப்பது போல் அழகு...
சுத்திப் போடச் சொல்லுங்க எல்லாக் கண்ணும் குட்டீஸ் மேல்தான்...

பால கணேஷ் said...

ஒவ்வொரு சுட்டியின் படமும் அவர்களைப் பத்தி அன்போட நீ சொல்லியிருக்கற விஷயங்களும் படிக்கப் படிக்க மனசைக் கட்டி்ப் போட்டுட்டது! அருமை!

ஹுஸைனம்மா said...

என்னையே கவுத்திட்டாங்களே!

அதென்ன “என்னையே”???!! நீங்க என்ன அம்புட்டு கனமா? ஹி.. ஹி..

ஷெஷா அழகு. அழகான தலைமுடி. பிறந்த முடி இறக்கியபின் வளர்ந்ததா இவ்வளவும்? இப்பவே கொண்டை கட்டலாம் போல. மாஷா அல்லாஹ்.

ஹுஸைனம்மா said...

//மலிக்கா ஆண்டி நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க//

//ஆண்டி நீ ஐஸ்வர்யா ராயப்போல உண்டு//

இப்போப் புரியுது “டைட்டானிக்” கவுந்த ரகசியம்!! :-)))

காவ்யா said...

ஹுஸைனம்மா said...
//மலிக்கா ஆண்டி நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க//

//ஆண்டி நீ ஐஸ்வர்யா ராயப்போல உண்டு//

இப்போப் புரியுது “டைட்டானிக்” கவுந்த ரகசியம்!! :-)))//

உண்மையச்சொன்னா எல்லாரும் இப்படித்தான் கவுந்துடுவாங்களோ.

காவ்யா said...

மெய்யாலுமே அழகுதானுங்கோ நீங்க, என் சாடைகொஞ்சம் எட்டிப்பார்குது வட்டமுகத்தில்.

குட்டிஸ்கள் செம க்யூட்

அதிலும் கண்ணாடியணிந்த ஷெஷா, செம கீயூட்.

அனைவருக்கும் முத்தங்கள். உங்களுக்கில்லை, அப்படியென்று சொல்லமாட்டேன் என் அன்புத்தோழி.

வாணியோட தங்கைதான் நான்.சின்னம்மா பொண்ணு

உங்களோட ரசிகை

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.