அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, January 7, 2014

இன்னும் முன்னேறு!


 
பெற்ற பிள்ளைகளால்
பெற்றோருக்கு கிடைகும் சந்தோஷம்
காசு பணத்திலல்ல, அவர்களின் வளர்ச்சியிலும்
அவர்கள் நன்னடத்தையிலும், அவர்களின் முன்னேற்றத்திலும்
அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியிலும்தான்,
ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவதும் விரும்புவதும் அதுவே
என் மகன் இவன் என்பதை விட, இவனின் தாய் நான் என்பதில்
என்று ஒரு பெற்றோர்கள் நெகிழ்ந்து மகிழ்கிறார்களோ
அன்றே அவர்களின் தீரா ஆவல்கள் நிறைவேறுகிறது
அவ்வகையில் தற்போது நான், படிப்பிலும் விளையாட்டிலும்
சிறப்பதுபோல் அவன் வாழ்விலும் செயலிலும் சிறந்துவிளங்கிட
சிரம்தாழ்த்தி இறைவனிடம் வேண்டுகிறேன். 
டேபில் டென்னிஸ்ஸில் முதலிடம்
புட்பாலில் முதலிடம்
ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம்
மற்றுமொரு ஃபுட்பாலில் ரன்னர்.

ஸ்டேட் அன் டிஸ்டிக் லெவலில்.
முதல் மற்றும் இரண்டாமிடம்
மேக்ஸ் அன் இங்லீஸ் தேர்வில் என
இம்முறை ஊர்வரும்போது
பதக்கமும் கப்பும் சர்ட்பிக்கெட்டும் வாங்கிவந்து மகிழ்வித்தான்

உடல்நலம் சற்று அடிக்கடி சறுக்கிறது நோஞ்சானாக இருக்கின்றான்,
சத்துள்ள உணவு சாப்பிட அடம்பிடித்தால்
சவளைப்பிள்ளையாக இருக்கும் என்று யாரோ சொன்னது நியாபகம் வருது
இரண்டு வருடமாகியும் குற்றால சீசனும் அவனுடலுக்கு
இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை  
குற்றாலம்  சையத் ரெசிடண்டல்ஸில் 
பத்தாம் வகுப்பில் படித்துகொண்டிருக்கும்
எனது மகனுக்கு தங்கள் அனைவரின்
பிராத்தனையென்னும் துஆக்கள் வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடு வாழவும் 
வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்லமதிபெண் எடுத்து
அவனின் எதிர்கால எண்ணங்களும் ஆசைகளும்  நிறைவேறவும்,
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்.
 

குறிப்பு: குழந்தைகளுக்குள் என்ன இருக்கோ அதுதான் வெளிப்படும்
ரொம்ப போட்டு எல்லாவற்றையும் திணித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவே மறுக்கும், அது படிப்பானாலும் சரி, அவர்களால் முடியுமென்ற உற்சாகத்தை மட்டுமே நாம் ஊக்கமாக கொடுத்தால்போதும்
பல நேரம் முடிவது சில நேரம் முடியாமலும் போகலாம் 

அதற்காக அவர்களை குற்றஞ்சொல்லி குத்திக்காட்டகூடாது ,குறிப்பாக அடுத்தப்பிள்ளைகளை எடுத்துக்காட்டி ஒப்பீடுக் காட்டகூடாது,அது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது எனது கருத்து...


10 comments:

Anonymous said...

வணக்கம்

நீங்கள் சொல்வது உண்மைதான்...நல்ல கருத்தாடல்..வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அஸ்மா said...

மாஷா அல்லாஹ்!

மஃரூஃப் தங்கம்..
முழுமையான‌ உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் உறுதியான ஈமானோடும் வாழ்ந்து பெற்றோர்களுக்கு மென்மேலும் பலனளிக்கவும்,

வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து
அவரின் எதிர்கால எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேறவும்,
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! :)

enrenrum16 said...

மாஷா அல்லாஹ்... உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்... மென்மேலும் பெருமைகளை உங்கள் மகன் சேர்க்கவும் நல்ல உடல்நிலையைத் தரவும் அல்லாஹ் போதுமானவன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மாஷா அல்லாஹ்... !

123

நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

suvanappiriyan said...

மேலும் பல பதக்கங்களை அள்ள பிரார்த்திக்கிறேன்.!

Unknown said...

வாழ்த்துகள்...மாஷா அல்லாஹ் உங்கள் மகன் மேன்மேலும் வளர அல்லாஹ் உதவி செய்வானாக....அவர் உடல் ஆரோக்கியம் அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

meeranhasani said...

வாழ்த்துகள். அல்லாஹ் அவருக்கு உடல் நலத்தை கொடுத்து, மேன் மேலும் வளர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

'பரிவை' சே.குமார் said...

இன்னும் சிறப்பான உயரத்தை அடைய வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நல்ல நலத்துடன் வல்ல வளத்துடன்
பல்லாண்டு வாழ்க படா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.