அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 3, 2010

கோதுமை ரவா பரோட்டா



தேவையானவை
2 கப் கோதுமை
1 கப் ரவா
1 முட்டை வேண்டாமென்றால் தவிர்கவும்
இளம் சூட்டில் மாவு பிசைய தண்ணீர்
தேவைக்கேற்ப உப்பு
சிறு பிஞ்ச் சோடாப்பு அல்லது
1 ஸ்பூன் ஜீனி
சுட்டெடுக்க ஆயில்
இதற்கு கொஞ்சம் ஆயில் போதும்

இரு மாவையும்கலந்து தண்ணீர் உப்பு சோடா அல்லது ஜீனி சேர்த்து நன்றாக பிசையைவும் வழக்கம்போல் பரோட்டா மாவு பதத்துக்கு
தண்ணீரோடு கொஞ்சம்  7 அப் சேர்த்து பிசைந்தால் பரோட்டா மிருதுவாக இருக்கும்.
உருண்டை போட்டுவைத்து நேரம் கழித்தும் சுடலாம், உடனேயும் சுடலாம்.



இதற்கு காரச்சட்னி சைடிஸாக.
 உங்களுக்கு எது வேணுமோ அது செய்துக்கோங்க
மைதாவைவிட கோதுமை உடலுக்கு நல்லதுன்னு சொல்வாங்க
செய்து சாப்பிட்டு பாருங்க..

அன்புடன் மலிக்கா

9 comments:

ஸாதிகா said...

பரோட்டவைப்பார்த்ததுமே செய்து விட வேண்டும் போல் இருக்கிறது மலிக்கா.கவிதையுடன் பரோட்டாவும் நன்றாக வரும் போலும் உங்களுக்கு .வித்தியாசமான பரோட்டா.செய்து பார்த்து விடுவோம்

S.A. நவாஸுதீன் said...

பரோட்டால ரவை கலந்தா?. ஹ்ம்ம். டெஸ்ட் (டேஸ்ட்) பண்ணி பார்த்துடுவோம்.

பித்தனின் வாக்கு said...

நல்ல வித்தியாசமான காம்பினேசன். மிக அருமை. இப்ப புரேட்டா சாப்பிட வேண்டும் போல இருக்கு. நன்றி.

அண்ணாமலையான் said...

gud one...

திவ்யாஹரி said...

ஆஹா ஞாபக படுத்திட்டீங்களே தோழி.. செஞ்சி சாப்டு பார்த்துட்டு சொல்றேன் தோழி.. அப்டியே குருமா வைக்கவும் சொல்லி கொடுங்க.. உங்க குருமா எப்படி இருக்குனு சாப்ட்டு பார்க்குறோம்.. ஆஹா ஞாபக படுத்திட்டீங்களே தோழி.. செஞ்சி சாப்டு பார்த்துட்டு சொல்றேன் தோழி.. அப்டியே குருமா வைக்கவும் சொல்லி கொடுங்க.. உங்க குருமா எப்படி இருக்குனு சாப்ட்டு பார்க்குறோம்.. என் வலைத்தளத்தையும் கொஞ்சம் பாருங்கள் தோழி.. உங்கள்கருத்தும் தெரிஞ்சிக்க ஆசைப்படுகிறேன்..

Unknown said...

ஆஹா நல்ல சாப்ட்டாக இருக்கே

suvaiyaana suvai said...

வித்தியாசமான காம்பினேசன்!!

கோமதி அரசு said...

பரோட்டா கோதுமை மாவில் செய்தது இல்லை, செய்துப் பார்த்து விடுகிறேன்,முட்டை கலக்காமல்.

நன்றி.

விக்னேஷ்வரி said...

இது வித்தியாசமா இருக்கு. இந்த வீக்கெண்ட் முயற்சி பண்ணிட வேண்டியது தான்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.