அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, March 9, 2010

மைக்ரோ ஓவனில் கிரீன் சாம்பார்


பச்சை பயர் உடைத்தது 1/4 கிலோ
பல்லாரி [பெரிய வெங்காயம்] 1
தக்காளி 1
சாம்பார்பொடி 3,ஸ்பூன்
ஸ்பினாச்[கீரை] 1 கட்டு
மத்தங்காய்[பூசணிகாய்]
கொஞ்சம் அதனுடைய தோலும் தனியே
உப்பு
மல்லி- தூவ
தாளிக்க,,
ஆயில், கடுகு
கருவேப்பில்லை

பருப்பை ஓவனில் 3 நிமிடம் வைத்து வருத்தெடுக்கவும், பின்பு தண்ணீர்விட்டு தக்காளியும் சேர்த்து10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்

அதனுடன் மத்தங்காய், அதந்தோல் கட்செய்த கீரை, பல்லாரியை- ஒருஸ்பூன் ஆயில்விட்டு அதைவதக்கி அதனுடன்சேர்க்கவும்

சாம்பார்பொடி,உப்பும் சேர்த்துகொள்ளவும்

தேவையான அளவு தண்ணீர்விட்டு ஓவனில் மீண்டும் 10 நிமிடம் மூடி வைக்கவும்

நல்ல வாசம் வந்ததும் வெளியிலெடுத்து கொஞ்சமாக லெமன் ஜூஸ் ஊற்றவும்
[கருவேப்பில்லை கடுகு தாளித்துக்கொள்ளவும்]
தாளித்தவைகளைஊற்றி அதன்மேல் நறுக்கிய மல்லி தூவி பறிமாரவும்

இது நல்ல டேஸ்டுடன் இருக்கும்
சாதம், இட்லி, மற்றவைகளுக்கும் ஏற்றது







அன்புடன் மலிக்கா

12 comments:

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க, பாசிப்பருப்பு கடைசல் அல்லது கூட்டு. பரங்கிக்காய் சேர்ப்பது புதிது. கொஞ்சமா லெமன் சொல்லி இவ்வளோ பெரிய பாட்டிலா?. உங்க ஊரில் ஒரிஜினல் எழுமிச்சங்காய் பிரஷ்சா கிடைக்காதா? மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

பாசிப்பருப்பை ஓவனில்தான் வேக வைத்தீர்களா? எவ்வளவு நேரம், தண்ணீர் வைத்தீர்கள்?

நீங்க ஏன் மைக்ரோவேவில் சமைப்பது எப்படின்னு ஒரு தொடர் எழுதக்கூடாது?

Jaleela Kamal said...

//பாசிப்பருப்பை ஓவனில்தான் வேக வைத்தீர்களா? எவ்வளவு நேரம், தண்ணீர் வைத்தீர்கள்?// ???/





ரொம்ப நல்ல இருக்கு, கடைசியில் எலுமிச்சையா?

அன்புடன் மலிக்கா said...

பித்தனின் வாக்கு said...
நல்லா இருக்குங்க, பாசிப்பருப்பு கடைசல் அல்லது கூட்டு. பரங்கிக்காய் சேர்ப்பது புதிது. கொஞ்சமா லெமன் சொல்லி இவ்வளோ பெரிய பாட்டிலா?. உங்க ஊரில் ஒரிஜினல் எழுமிச்சங்காய் பிரஷ்சா கிடைக்காதா? மிக்க நன்றி//


அட இங்கப்பாருங்கப்பா. இங்கே எல்லாம் கிடைக்கும் எழுமிச்சை தீர்ந்துபோச்சின்னு அந்த பெரிய பாட்டிலகாட்டிட்டேன் ஸ்ஸ்ஸ் அப்பாட இனி சாக்கிரதையா போட்டோ எடுக்கனும்..

ரொம்ப நன்றி திவாகர்சார்

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
பாசிப்பருப்பை ஓவனில்தான் வேக வைத்தீர்களா? எவ்வளவு நேரம், தண்ணீர் வைத்தீர்கள்?/

வறுப்பதற்கு 20 நொடி. வேகவைக்க.
2 நிமிடம். தண்ணீர்களவாக வைத்து மூடாமல் ஓவனில் வைக்கனும் இல்லையென்றால் பொங்கிவிடும்.

2 நிமிடத்தில் வேகவில்லையென்றால் மீண்டும் 30 நொடி வைக்கனும்..

ஓவனில் தன்மையைப்பொருத்து வேகும் தன்மையும்..

//நீங்க ஏன் மைக்ரோவேவில் சமைப்பது எப்படின்னு ஒரு தொடர் எழுதக்கூடாது?//

எழுதனும் ஹுசைனம்மா நிறைய எழுதிக்கொண்டே இருப்பதால் இதற்கு நேரமில்லை இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன் எனக்கு தெரிந்த வரையில் சொல்லித்தருகிறேன்..

மிக்க நன்றி ஹுசைனம்மா..

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
//பாசிப்பருப்பை ஓவனில்தான் வேக வைத்தீர்களா? எவ்வளவு நேரம், தண்ணீர் வைத்தீர்கள்?// ???/

ஆமா ஜலீக்கா அதில்தான் வேகவைத்தேன் ஒரு கப் பயருக்கு 2 கப் தண்ணீர்.
ஓவன் பைளலைப்பொருத்து தண்ணீர் வைக்கனும் மூடக்கூடாது..


//ரொம்ப நல்ல இருக்கு, கடைசியில் எலுமிச்சையா//

ஆமாம் கடைசியில்
எழுமிச்சை சாரு விட்டால் அதன் டேஸ்ட் மாறாமல் இருக்கும். சிறுகசப்பும் தோன்றாது..

நன்றிக்கா

ப.கந்தசாமி said...

நீங்களும் நம்ம மாதிரி சமையல் நிபுணராட்டமா இருக்கீங்க, சந்தோஷம்.

ஆனா இதுல ஒரு கஷ்டம் என்னன்னா, ஊட்டுக்கார அம்மா இந்த வேலைய பர்மனெண்ட் பணாணீட்டாங்கன்னா வம்புதான்.

தமிழிஸிலே ஓட்டுப்போட்டுட்டேன். தமிழ்மணம் கண்ணுல பட மாட்டேன்கிறதே. என்ன பண்ணுவேன், இறைவா,வழிகாட்டு.

'பரிவை' சே.குமார் said...

சாம்பார் சாப்பிட ஆசை..! நம்ம சமையல்தான் தங்கியிருக்கும் அறையில்... பார்க்கலாம் இந்த வாரத்தில் ஒரு நாள் கிரீன் சாம்பார்தான்.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அப்படியா விசயம் !சொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க வீட்டு ஓனர் மட்டும் வெளியூர் போகட்டும் எங்க கைவரிசயை காட்டிடுவோம்ல.

மீண்டும் வருவான் பனித்துளி !

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா, தொடர்ந்து எழுதி பல சாதனைகளை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

டெலிப்ப‌தி ப‌ற்றியெல்லாம் என‌க்கு எதுவும் தெரியாது.:-)
கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்பு தான் ப‌ருப்பை எப்ப‌டி ஓவ‌னில் ச‌மைப்ப‌து என்று கூகிளில் தேடி ப‌டித்துக்கொண்டிருந்தேன் அது முடிந்து இங்கு வ‌ந்து பார்த்தால் அத‌ற்கு விடை இங்கிருக்கு.

Jaleela Kamal said...

ஒகே நன்றி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.