அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, March 25, 2010

ஏதோ நமக்கு தெரிந்தது!!



இட்லி வார்க்க பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்த்துஇட்லி எடுக்கும்போது துணியில் ஒட்டாமல் எடுக்கஇட்லி வார்ப்பதற்குமுன் கொஞ்சம் எண்ணை கையில் தொட்டுஇட்லிதட்டில் துணியைபோட்டுக்கொண்டு தடவவும் இட்லி சூப்பராக ஒட்டாமல் வரும்.



முட்டையை 6 அல்லது 7 நிமிடங்கள் மட்டும் வேகவைக்கவேண்டும் அதனுள்ளே உள்ளசத்துக்கள் அப்படியே கிடைக்கும்.


காய்கறிகளை அரைவேக்காடோடு சமைத்து சாப்பிடுங்கள், அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.முடிந்தால் பச்சையாக சாப்பிடும் காய்கறிகளை அப்படியே கடித்துசாப்பிடுங்க  [அச்சோ கழுவாமல் இல்லை]

 பால்காய்ச்சினதும் பாலை இளஞ்சூட்டோடு கொடுக்கவும். குடிக்கவும்.

[ஆகா வந்துட்டாங்கப்பா இதச்சொல்ல ஆராய்ச்சி ஆம்புலென்ஸ்ன்னு, ஜெய்லானியின் சத்தம் எல்லாரையும் விட சத்தமாக கேட்குது]




அன்புடன் மலிக்கா

25 comments:

அண்ணாமலையான் said...

ok..... thanx

Anonymous said...

பயனுள்ள பயன்பாட்டில் உள்ள தகவல்கள்...

ஜெய்லானி said...

உங்களுக்கு இட்லி எல்லாம் சுடத்தெரியுமா?.

ஜெய்லானி said...

முட்டைய எத்தனை டிகிரில கொதிக்க வைக்கனும்ங்கிறதையும் கொஞ்சம் சொன்னால் தேவலாம்!

பின் குறும்பு:: தண்ணி கொதிக்கவே பத்து நமிஷம் பிடிக்கும்

ஜெய்லானி said...

முருங்கை காயை என்ன செய்ய , அதுவும் பச்சை காய்கறிதானே!! ( நீங்க பொதுவா பச்சை காய்கறின்னு சொன்னீங்க)

Barari said...

நல்ல பயனுள்ள தகவல் சகோதரி.

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையான் said...
ok..... thanx//

மிக்க நன்றி அண்ணாமலையாரே!

அன்புடன் மலிக்கா said...

தமிழரசி said...
பயனுள்ள பயன்பாட்டில் உள்ள தகவல்கள்..

மிக்க நன்றி தமிழரசியக்கா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஜெய்லானி said...

நாலு பாயிண்டாலும் சும்மா நச்சுன்னு இருக்கு!!(( பொம்பிள்ளைகள் நல்லவர்கள் என்று நேற்று சொன்னதால் இந்த கருத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு மேலே உள்ள மூன்றை விட்டு விடவும்)) நன்றி.....

அன்புடன் மலிக்கா said...

//ஜெய்லானி said...
உங்களுக்கு இட்லி எல்லாம் சுடத்தெரியுமா?.//

வாங்க வாங்க மச்சாகிட்ட சொல்லுறேன்.இட்லி சுடும்போதுன்னு சொன்னேன் நான் சுடும்போதுன்னு சொன்னேனா

இருந்தாலும் ஆளையே சுடும்போது இட்லியச்சுடமாட்டமா.

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
முட்டைய எத்தனை டிகிரில கொதிக்க வைக்கனும்ங்கிறதையும் கொஞ்சம் சொன்னால் தேவலாம்! //

ஒரு நூத்திப்பத்து டிகிரியில் வைக்கலாம். நல்ல கொதிக்கும்போது கைவிட்டு பார்க்கனும் விரல் உடனே வெந்துட்டா டக்குன்னு முட்டையை போட்டுரலாம்.. [ஓ டக்குன்னு போட்டா உடஞ்சிபோயிருமேன்னல்லாம் கேக்கக்கூடாது ஓகே]

//பின் குறும்பு:: தண்ணி கொதிக்கவே பத்து நமிஷம் பிடிக்கும்//

முதலில் தண்ணீரை நல்ல கொதிக்கவிட்டு பின்பு முட்டையை போட்டு வேகவைத்தால் 7 8 நிமிஷம் போதும்.

[அம்மாடியோ ஆராய்ச்சி அம்பின்னு பட்டம் கொடுத்துரலாம் ஜெய்லானிக்கு]

ஸாதிகா said...

அருமையான் படங்களுடன் அழகான குறிப்புகள்.சிரிக்கவைக்கும் பின்னூட்டங்கள்,பதில்கள் சூப்பர் போங்கள்

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
முருங்கை காயை என்ன செய்ய , அதுவும் பச்சை காய்கறிதானே!! ( நீங்க பொதுவா பச்சை காய்கறின்னு சொன்னீங்க)/

கரும்பை துண்ணுரமாதரி துண்ணுர வேண்டியதுதான். என்ன அது இனிக்கும், இது இனிக்கிறமாதரி இருக்கும் அவ்வளவுதான்..

அன்புடன் மலிக்கா said...

//Barari said...
நல்ல பயனுள்ள தகவல் சகோதரி//

வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி சகோதரரே!.

காஞ்சி முரளி said...

புதுசா இருக்க...!
எங்க வீட்ல சொல்லுறேனுங்க...

நட்புடன்...
காஞ்சி முரளி........

திவ்யாஹரி said...

நல்ல குறிப்புகள்..
முட்டையை 6,7 நிமிஷங்கள் மட்டும் வைத்தால் உரிக்கும் போது முழுதாய் வராதே தோழி? முழுதாய் வர ஏதும் குறிப்பு இருக்கா?

kavisiva said...

மலிக்கா பயனுள்ள தகவல்கள். நன்றி

இட்லி வார்க்க ப்ளாஸ்டிக் கவர் யூஸ் பண்றவங்களும்னு இருக்காங்கன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அன்புடன் மலிக்கா said...

//ஸாதிகா said...
அருமையான் படங்களுடன் அழகான குறிப்புகள்.சிரிக்கவைக்கும் பின்னூட்டங்கள்,பதில்கள் சூப்பர் போங்கள்//

மிக்க நன்றி ஸாதிக்காக்கா. எல்லாம் நம்ம ஜெய்லானிக்கே இந்த பெருமை சேரும் ஸாதிக்காக்கா..

அன்புடன் மலிக்கா said...

/Kanchi Murali said...
புதுசா இருக்க...!
எங்க வீட்ல சொல்லுறேனுங்க...

நட்புடன்...
காஞ்சி முரளி//

என்ன புதுசா இருக்க முரளி.. [சும்மா சும்மா]

நன்றி முரளி

அன்புடன் மலிக்கா said...

/ திவ்யாஹரி said...
நல்ல குறிப்புகள்..
முட்டையை 6,7 நிமிஷங்கள் மட்டும் வைத்தால் உரிக்கும் போது முழுதாய் வராதே தோழி? முழுதாய் வர ஏதும் குறிப்பு இருக்கா/

நல்ல கொதிக்கும் தண்ணீரில் 7 நிமிடம் முட்டையை வேகவிட்டு அடுப்பை ஆப் செய்து பாத்திரத்தை மூடி வைத்துவிடவும் சிறிது நேரம் கழித்து எடுத்து உரித்தால் முழுமையாக வரும் தோழி..

மிக்க நன்றி திவ்யா

அன்புடன் மலிக்கா said...

/kavisiva said...
மலிக்கா பயனுள்ள தகவல்கள். நன்றி

இட்லி வார்க்க ப்ளாஸ்டிக் கவர் யூஸ் பண்றவங்களும்னு இருக்காங்கன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்/

நிறைய வீடுகளில் அதுபோல் பிளாஸ்டிக் கவர்தான் உபயோகப்படுத்துறாங்க கவி. ஈசியா இட்லி வந்துவிடுமுன்னு.
எல்லாம் ஈசியாயிட்ட நம்மளை ஈசியா நோய் தொத்திடுமுன்னு யாரும் கவலைப்படுவதில்லை வேலை ஈசியா முடிஞ்சா சரின்னு.

மிக்க நன்றி கவி

ஜெய்லானி said...

//வாங்க வாங்க மச்சாகிட்ட சொல்லுறேன்.இட்லி சுடும்போதுன்னு சொன்னேன் நான் சுடும்போதுன்னு சொன்னேனா//

இதுக்குதான் ‘’கழுவுர தண்ணில நழுவுர மீனுன்னு பேரு’’. தப்பிச்சிட்டீங்க

//
ஒரு நூத்திப்பத்து டிகிரியில் வைக்கலாம். நல்ல கொதிக்கும்போது கைவிட்டு பார்க்கனும் விரல் உடனே வெந்துட்டா டக்குன்னு முட்டையை போட்டுரலாம்.. [ஓ டக்குன்னு போட்டா உடஞ்சிபோயிருமேன்னல்லாம் கேக்கக்கூடாது ஓகே]//

அச்சச்சோ!!..என்னை விட்டுடுங்க இணி சந்தேகமே கேக்க மாட்டேன்!!

//கரும்பை துண்ணுரமாதரி துண்ணுர வேண்டியதுதான். என்ன அது இனிக்கும், இது இனிக்கிறமாதரி இருக்கும் அவ்வளவுதான்..//

கேள்வி கேட்டதுக்கு இந்த தண்டனை வேறயா எனக்கு!!!

#############

நல்ல தமாஸு

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்புகள்.

இதுபோன்ற உபயோகமான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு அப்புறம் ஏன் //[ஆகா வந்துட்டாங்கப்பா இதச்சொல்ல ஆராய்ச்சி ஆம்புலென்ஸ்ன்னு..// இது. பரவாயில்லை நல்ல பகிர்வுக்கு பட்டம் கொடுத்தால் தப்பில்லை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்புகள்.

இதுபோன்ற உபயோகமான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு அப்புறம் ஏன் //[ஆகா வந்துட்டாங்கப்பா இதச்சொல்ல ஆராய்ச்சி ஆம்புலென்ஸ்ன்னு..// இது. பரவாயில்லை நல்ல பகிர்வுக்கு பட்டம் கொடுத்தால் தப்பில்லை.

Jaleela Kamal said...

நகைச்சுவையுடன் டிப்ஸ் குறிப்பு ஹி ஹி

ஜெய்லானிகககா கொடுத்தது அதைவிட ஜூப்பரு...

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.