அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, April 3, 2010

சுட்ட இட்லியை மீண்டும் சுட!


இட்லி 4
3 டேபிள் ஸ்பூன் கடலைமாவு அல்லது [கோதுமை]
சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது தேவையான அளவு
ப,மிளகாய் காரத்திற்கேற்ப
முழு சோம்பு சிறிதளவு
கருவேப்பில்லை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
உப்பு
ஆயில்





இட்லியை லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில்போட்டு ரொம்ப நைசாக இல்லாமல் அரைத்து
எடுக்கவும் அதில் கடலைமாவு வெங்காயம் ப மிளகாய் உப்பு கருவேப்பில்லை
சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
அதை ஆயிலில் பொட்டும் பொரித்து எடுக்கலாம் இல்லன்னா
வெங்காய பஞ்சி பிசிரிவிட்டதுபோல் போட்டு எடுக்கலாம்
இல்லையென்றால் வடைபோல் தட்டி நாண்ஸ்டிக் ஃபேனில்
கொஞ்சமாக ஆயில்விட்டு பொரித்து எடுக்கலாம்

[எப்படியோ வீணாக்காமல் செய்து சாப்பிட்டால் சரி இல்லன்னா பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ் அதில் மூன்று நான்கு நாளைக்கு வைத்துவிட்டு அப்புறம் கச்சடாவில் போடுவதற்கு இதபோல செய்து சாப்பிடலாமுன்னு சொல்லவந்தேன்] 


1ஸ்பூன் இடியப்பமாவு சேர்த்துக்கொண்டால் மொறுமொறுப்பு கூடுதல் கிடைக்கும் . இந்த ரெசிபி  சுவையாக இருக்கும்..


[இந்த பிளேட் என் செல்லத்தோடது அவர் சொல்லிட்டார் இனி எந்த ரெசிபியும் இதில் வைத்துதான் போட்டோ எடுத்துப்போடனுமாம் செஞ்சிட்டோமுல்ல]

[அச்சோ அச்சோ அடி ராக்காயி கதைய கேட்டியா
 இங்கே இட்லி சுடவே நேரமில்லையாம் இதில் சுட்ட இட்லியைவேறு மீண்டும் சுடனுமாம் என்ன கொடுவினைடியிது.
அவுக அவுக நின்ன நிலையிலேயே கிடைத்ததை பிச்சி மேஞ்சிக்கிட்டு போயிகின்னேயிருக்காக இவுகவேற.
இல்லாதததையும் பொல்லாததையும் சொல்லிக்கிட்டு.
இவுகளபோல வேலையில்லாதவுக செய்துக்குன்னு கிடக்கட்டும் நாம ஃபாஸ்ட்ஃபுட்டு  வாங்கி துண்ணுக்குவோம் இல்லடி]






அன்புடன்மலிக்கா

38 comments:

அண்ணாமலையான் said...

நன்றி

நாடோடி said...

//இடியப்பமாவு சேர்த்துக்கொண்டால் மொறுமொறுப்பு கூடுதல் கிடைக்கும் .//
இடியாப்ப‌ மாவு என்றால் ப‌ச்ச‌ரிசி மாவு தானே சொல்லுறீங்க‌..

//நாம ஃபாஸ்ட்ஃபுட்டு வாங்கி துண்ணுக்குவோம் இல்லடி//

இது ரைட்டு!!!!!!!!!!!!!!

ஜெய்லானி said...

//ஃபிரிஜ் அதில் மூன்று நான்கு நாளைக்கு வைத்துவிட்டு அப்புறம் கச்சடாவில் போடுவதற்கு இதபோல செய்து சாப்பிடலாமுன்னு சொல்லவந்தேன்//

அப்ப உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இதுமாதிரி நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க!!

ஜெய்லானி said...

குஷ்பு இட்லி ,தேவையானி இட்லி, இந்த தொடரில் புதியதாக மலீக்கா இட்லி பேஷ்...பேஷ்...ரொம்ப நன்னா இருக்கு...

சபி said...

ரெசிபி சூப்பர். வேஸ்ட் ஆகாமல் செய்துவிடுவற்க்கு நல்ல டிப்ஸ்.

அதென்ன பிச்சக்காரபொட்டி ஓ ஃபிரிஜ்

என்ன ஒரு நக்கலு செமகலக்கல்.

ஜெய்லானி said...

பாட்டி இட்லி சுட்ட கதை பழசு!!
மலீக்கா இட்லி சுட்ட கதை புதுசு !!

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையான் said...
நன்றி.

மிக்க நன்றி அண்ணாமலையாரே!

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
//இடியப்பமாவு சேர்த்துக்கொண்டால் மொறுமொறுப்பு கூடுதல் கிடைக்கும் .//
இடியாப்ப‌ மாவு என்றால் ப‌ச்ச‌ரிசி மாவு தானே சொல்லுறீங்க‌..//

ஆமா ஸ்டீபன். பச்சரிதான் ஆனால் இது இடியப்பமாவுக்கு நாங்க இடித்து வருத்துவிடுவோம். பச்சரிமாவு வருக்காமல் இருக்கும்.

//நாம ஃபாஸ்ட்ஃபுட்டு வாங்கி துண்ணுக்குவோம் இல்லடி//

இது ரைட்டு..

ஆகா அவுகளா நீங்க ஓகே ஓகே.
உங்க அவுக வருகிற வரைக்கும் ஓகே.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//ஃபிரிஜ் அதில் மூன்று நான்கு நாளைக்கு வைத்துவிட்டு அப்புறம் கச்சடாவில் போடுவதற்கு இதபோல செய்து சாப்பிடலாமுன்னு சொல்லவந்தேன்//

அப்ப உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இதுமாதிரி நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க//

பின்னே இதவிட புளிச்ச இட்லியிலும் செய்துகொடுப்போமுல்ல அதிலும் ஜெய்லானிவந்தா ஸ்பெசலாக நொந்த இட்லி ஃப்ரை. ஓகே

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
குஷ்பு இட்லி ,தேவையானி இட்லி, இந்த தொடரில் புதியதாக மலீக்கா இட்லி பேஷ்...பேஷ்...ரொம்ப நன்னா இருக்கு/

ஆகா கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க.
நாளைக்கு அதுக்கு சட்னி ரெடிபண்ணிட்டுவாரேன்ன்ன்ன்

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல ஐடியா நகைச்சுவையுடன், பாஸ் புட்டு அது தானே இபப் உள்ள யுத் களுக்கெல்லாம் அமுதம்.
இட்லியில் ஒரு வித்தியாசமான ரெசிபி உங்கள் மூலமா கத்து கொண்டேன். நன்றி மலிக்கா/

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
பாட்டி இட்லி சுட்ட கதை பழசு!!
மலீக்கா இட்லி சுட்ட கதை புதுசு !!//

நம்ம ஜெய்லானி சுட்ட கதையும் வருமுல்ல.

விரைவில் எதிர்பாருங்கள்.
ஜெய்லானியின்
சுடமுடியாதை சுட்ட சுருள்..

'பரிவை' சே.குமார் said...

அப்ப உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இதுமாதிரி நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க!!

simply superb

'பரிவை' சே.குமார் said...

அப்ப உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இதுமாதிரி நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க!!

simply superb

Mohamed G said...

பிச்சைகார பிரிட்ஜ்,
என்றால் என்ன?
விளக்கம் தேவை..

ப.கந்தசாமி said...

கோயமுத்தூரில் ஒரு பிரபல ஓட்டலில் காலை இட்லியை நீளவாக்கில் வெட்டி, உப்பு மிளகாய்ப்பொடி தூவி சூடு பண்ணி, மாலை டிபனாகக் கொடுக்கிறார்கள்.

கவிதன் said...

உங்க வலைப்பூ அழகா இருக்கு மலிக்கா!
கடைக்காரன் சுட்ட இட்லிய நீங்க சுட்டுடீங்கலோனு நெனச்சேன்....!

ரொம்ப நகைச்"சுவை"யா செஞ்சிருக்கீங்க! அருமை! வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

சரவணபவனில் “கைமா இட்லி” கிடைக்கும்; இட்லியை துண்டுதுண்டா வெட்டி, பொறிச்சு, “சில்லி பரோட்டா” மாதிரி செஞ்சுருப்பாங்க. அதுவும் நல்லாருக்கும்.

இட்லி பஜ்ஜி பாத்திருக்கேன். இட்லி வடை (!!) புதுசு.

GEETHA ACHAL said...

இட்லியினை சூப்பராக மாற்றி செய்து இருக்கின்றிங்க...அருமை...சூப்பர்ப்...

காஞ்சி முரளி said...

ஏங்கோ...
இந்த சமையல் விவகாரமெல்லாம் நமக்கு தெரியாது....

என்வீட்டு உணவமைச்சரிடம்... அதாவது என் வீட்டாம்மாவிடம் printout கொண்டுபோய் கொடுக்கிறேன்...

அவங்க என்ன சொல்றாங்களோ....

அதுதாங்கோ... என் commentsம்...

//பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ்///

அப்படீன்னா... "பிச்சக்கார தட்டு சோறு" மாதிரியா..?
ஓர் புதிய கண்டுபிடிப்பு....

நட்புடன்....
காஞ்சி முரளி.........

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமைதான் . அதிலும் இது சுவை மிகுந்த புதுமை . தொடருங்கள் .

நாஸியா said...

இப்ப நான் அந்த இட்லிய உங்க கிட்சன்ல இருந்து சுட போறேன் ஆமா

ஸாதிகா said...

அட புதுசா இருக்கே??//பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ் //என்னங்க மலிக்கா இப்படி சொல்லிவிட்டீர்கள்?பெண்களின் அட்சயபாத்திரமல்லவா அது?

ஹுஸைனம்மா said...

ஆமா மலிக்கா, ஃப்ரிஜை பிச்சைக்கார பெட்டி என்று நீங்க சொன்னதில் எனக்கும் வருத்தம்தான். உணவுகள் வீணடிக்கப்படாமல் இருப்பதில் ஃப்ரிட்ஜின் பங்கு இன்றியமையாதது. அதுவும் வறியவர்களோ, பிச்சைக்காரர்களோ அல்லது மிஞ்சிய உணவைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள்/ உறவினர்கள் அக்கம்பக்கம் இல்லாத இவ்வூரில் ஃபிரிட்ஜ்தான் கைகொடுக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மலிக்கா .. ராக்காயி பேசுறது சூப்பர்

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
ரொம்ப நல்ல ஐடியா நகைச்சுவையுடன், பாஸ் புட்டு அது தானே இபப் உள்ள யுத் களுக்கெல்லாம் அமுதம்.
இட்லியில் ஒரு வித்தியாசமான ரெசிபி உங்கள் மூலமா கத்து கொண்டேன். நன்றி மலிக்கா//

உங்களவிடவாக்கா ஏதோ பச்சப்புள்ள
கோலம்போட்டதுபோல் அப்பப்ப இப்படி ஏதாச்சும்.

மிக்க நன்றி ஜலீக்கா.

/சபி said...
ரெசிபி சூப்பர். வேஸ்ட் ஆகாமல் செய்துவிடுவற்க்கு நல்ல டிப்ஸ்.

அதென்ன பிச்சக்காரபொட்டி ஓ ஃபிரிஜ்

என்ன ஒரு நக்கலு செமகலக்கல்


அதுதான் கலக்கலு ஹி ஹி
மிக்க நன்றி சபீ

அன்புடன் மலிக்கா said...

/சே.குமார் said...
அப்ப உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இதுமாதிரி நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க!!

simply superb
//

சரி சரி ரொம்ப ஆசைப்படுறீங்க. உங்களுக்கும்.ஜெய்லானிக்குமட்டும் ஸ்பெசலா செய்து தாரேன்ன்ன்ன் குமார்..

அன்புடன் மலிக்கா said...

/Mohamed G said...
பிச்சைகார பிரிட்ஜ்,
என்றால் என்ன?
விளக்கம் தேவை../

அம்மாடி இதுக்கு விளக்கனுமுன்னா ஒரு இடுகையேவுல்ல போடனும்.
இருந்தாலும் சொல்லுறேன் கொஞ்சமா.

அளவுக்கு அதிகமாகிவிட்டாலோ அல்லது அதிகமாகவோ செய்து அக்கம்பக்கம் முன்மெல்லாம் கொடுப்போம்.
இல்லைன்னு சொல்லாமல் பசியோடு வருகிறவர்களுக்கு கொடுப்போம்.

இப்போதெல்லாம் அப்படியில்லை.
இன்று செய்தால் நாளையும் உதவும் நமக்கே என அந்த பொட்டிக்குள் வைத்துவிடுராங்க.

மாச்சல் அதாவது அலுப்பு ஏற்படுவதால் சீரியல்கள் பார்க்கத்தடை வந்துவிடுவதால் ஒருவாரத்திற்க்கூட செய்து வைத்துவிடுறாங்களாம்.[இது வெளிநாட்டிலிருப்பவங்களுக்கு பொறுந்தாது]

ஃபிரிட்ஜை திறந்தால் பலகறியும் சோறும் நேற்று உள்ளது முந்தாநாள் உள்ளது என பட்டியலிடுகிறர்கள்.

பிச்சையெடுப்பவர்கள் பாத்திரத்தில் பலவகைகளிலிருக்குமுல்ல அதுபோல

அதைதான் சிம்பாளிக்கா சொன்னேன்
பிச்சைக்காரப்பொட்டின்னு. அப்பட்டி விளக்கம் போதுமா முகம்மத்

அன்புடன் மலிக்கா said...

/Dr.P.Kandaswamy said...
கோயமுத்தூரில் ஒரு பிரபல ஓட்டலில் காலை இட்லியை நீளவாக்கில் வெட்டி, உப்பு மிளகாய்ப்பொடி தூவி சூடு பண்ணி, மாலை டிபனாகக் கொடுக்கிறார்கள்/

ஹை அப்படியா. முதலில் அப்படித்தான் செய்துபார்த்தேன் டாக்டர்
என்ன ஒன்னு கட்செய்து ஆயிலில் பொறிதெடுத்து பின் மிளாய்பொடி உப்பு போட்டு சாப்பிட்டேன் நல்லாதான் இருந்தது..நன்றி டாக்டர்.

அன்புடன் மலிக்கா said...

/கவிதன் said...
உங்க வலைப்பூ அழகா இருக்கு மலிக்கா!
கடைக்காரன் சுட்ட இட்லிய நீங்க சுட்டுடீங்கலோனு நெனச்சேன்....!/

மகிழ்ச்சி தாங்களின் வரவுக்கு
இனி அதிலும் சுட்டுடலாம் கவிதன்

//ரொம்ப நகைச்"சுவை"யா செஞ்சிருக்கீங்க! அருமை! வாழ்த்துக்கள்//

வாங்க வாங்க கவிதன் பெயரிலேயே கவியிருக்கு.
தொடர்ந்து வாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

//ஹுஸைனம்மா said...
சரவணபவனில் “கைமா இட்லி” கிடைக்கும்; இட்லியை துண்டுதுண்டா வெட்டி, பொறிச்சு, “சில்லி பரோட்டா” மாதிரி செஞ்சுருப்பாங்க. அதுவும் நல்லாருக்கும்.

இட்லி பஜ்ஜி பாத்திருக்கேன். இட்லி வடை (!!) புதுசு//

புதுசு ஹுசைன்னம்மா புதுசு

நீங்க டிரெங்குபெட்டிக்குள்ளே புதுசு புதுசா வச்சிறிக்கீங்க நானும் எதையாவது புதுசா செய்யலாமேன்னுதான் ஹுசைன்னம்மா

அன்புடன் மலிக்கா said...

/Geetha Achal said...
இட்லியினை சூப்பராக மாற்றி செய்து இருக்கின்றிங்க...அருமை...சூப்பர்ப்/

மிக்க நன்றி கீத்து.அசத்தல் ராணியே சொல்லியாச்சி பின்ன அப்பீலேது.

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
ஏங்கோ...
இந்த சமையல் விவகாரமெல்லாம் நமக்கு தெரியாது....

என்வீட்டு உணவமைச்சரிடம்... அதாவது என் வீட்டாம்மாவிடம் printout கொண்டுபோய் கொடுக்கிறேன்...

அவங்க என்ன சொல்றாங்களோ....

அதுதாங்கோ... என் commentsம்... //

என்னா ஒரு குடும்பப்பொறுப்பு
வாழ்க வளமுடன்

//பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ்///

அப்படீன்னா... "பிச்சக்கார தட்டு சோறு" மாதிரியா..?
ஓர் புதிய கண்டுபிடிப்பு....

நட்புடன்....
காஞ்சி முரளி....//

எப்புடி முரளி! எல்லாரும் என்னான்னு கேட்கும்போது நீங்கமட்டும் கண்டுபிடிச்சீங்க.. அதே அதேதான்..

மிக்க நன்றிங்கங்கோ..

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
ஆமா மலிக்கா, ஃப்ரிஜை பிச்சைக்கார பெட்டி என்று நீங்க சொன்னதில் எனக்கும் வருத்தம்தான். உணவுகள் வீணடிக்கப்படாமல் இருப்பதில் ஃப்ரிட்ஜின் பங்கு இன்றியமையாதது. அதுவும் வறியவர்களோ, பிச்சைக்காரர்களோ அல்லது மிஞ்சிய உணவைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள்/ உறவினர்கள் அக்கம்பக்கம் இல்லாத இவ்வூரில் ஃபிரிட்ஜ்தான் கைகொடுக்கும்//

வருத்தப்படாதீங்க ஹுசைன்னமா வருத்தப்படாதீங்க.
வேலைக்குபோற உங்களமாதரியாளுகளுக்கு சரி.

அதிகமாச்செய்து யாருமில்லாத இங்கே ஏன் பத்துநாளைக்கு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பின்ன எடுத்து கச்சடாவில் போடுறாங்க நிறையவீடுகளில் இது நடக்குது.

ஓரிருநாட்கள் அதில் வைத்து சாப்பிடுவதே உடல்நலத்திற்க்கு கேடுதானே!
அதில் வைத்து பின்பு சூடுசெய்து மீண்டும் அதில்வைத்து மீண்டும்சூடுசெய்து.

அதான் அளவோடு அன்றன்று செய்து சாப்பிட்டால் நல்லது சரிதானே!
வைக்கவேண்டிய பொருளுக்கு கட்டாயம் அந்தப்பொட்டிதேவைதான் மிதம்மிஞ்சிய உணவை ச்ய்வது மீந்துவிட்டதே என எடுத்துவைத்து மூன்றுநாள்கழித்து வயிறு என்னும் பொட்டிக்குள்போட்டால் பாவம்தானே அந்த சின்னவயிறு அதான் சொன்னேன்..

அன்புடன் மலிக்கா said...

sarusriraj said...
நல்லா இருக்கு மலிக்கா .. ராக்காயி பேசுறது சூப்பர்


அப்ப சுட்ட இட்லி நல்லாயில்லயா சாருக்கா

Anonymous said...

super.

Mohamed G said...

நன்றி...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இட்லி நல்லாருக்கு.. அருமையான ரெசிபி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.