அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, April 21, 2010

வேண்டுகோள்! செம்மொழி மாநாட்டில்!!!

செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
கிடைக்கவேண்டும்..
இதுபோன்ற உழைப்புகளுக்கும் கண்டுப்பிடிப்புகளுக்கும்.
 நிச்சியம் அங்கீகாரம் வேண்டும்.
 நம்முடைய தளங்களில் வெளியாகும் சிறு படைப்புகளுக்கே அங்கீகாரமென்னும் கருத்துரைகள் பெறுவதில் எத்தனை திருப்தியடைகிறோம். மகிழ்கிறோம்.

அதேபோன்று.அதைவிடமேலாக நாம் இன்று உபயோகப்படுத்தும்.தமிழெழுத்துருக்களை நமக்கு கண்டுப்பிடித்து நமக்குதவிய இன்று நாம் வலைத்தளங்களில் தமிழின் உதவியோடு வலம் வர காரணகர்த்தாவக இருந்த ஒருவரை கெளவுரவிப்பது சிறந்தல்லவா?



தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://www.pudhucherry.com/

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேடல்களுக்கு உதவியாக இருக்கும்.

SOURCE THIS ARTICLE : அதிரைக்காரன்


இவ்வளவு பெரிய அனைவருக்கும் உபயோகமானவைகளை கணினிக்குள் கண்டுபிடித்து  செயலாற்றிய உமர்தம்பி அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் நியாயமானதுதானே!

ஆதலால் அனைவரும் தங்கள் கருத்துக்களின்மூலம் தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இதுபோன்று நீங்கள் செய்யும், கொடுக்கும் ஆதரவு நாளை உங்களின் ஆக்கங்களுக்கே நற்பயனை தேடித்தரும். இன்ஷா அல்லாஹ்.

கெளரவிக்கப்படவேண்டியவர்கள்  நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.
உங்கள் ஆதரவை கருத்துக்களாக எதிர்ப்பார்க்கும்..

என்றும்
அன்புடன் மலிக்கா  

36 comments:

ஜெய்லானி said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்.//

முதல் வருகைக்கு முதலில் மகிழ்ச்சி.

கிடைக்கபடவேண்டிய அங்கீகாரம் கிடைக்கபெற்றால். அதைவிட மகிழ்வா வேண்டும் கடின உழைப்புக்கு.

மிக்க நன்றி ஜெய்லானி..

நாடோடி said...

க‌ண்டிப்பாக‌ க‌வுர‌விக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்..... அது ந‌ட‌க்க‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

தேடும்மனம். said...

கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

நிச்சியமாக கெளரவிக்கப்படவேண்டும்.
அரசு அதற்கு மனது வைக்கவேண்டும்
கட்டாயம் அரசு அங்கீரம் வழங்கும் என்ற நம்பிக்கையிருக்கு.

தேடும்மனம். said...

இதுபோன்ற உழைப்புகளுக்கும் கண்டுப்பிடிப்புகளுக்கும்.
நிச்சியம் அங்கீகாரம் வேண்டும்//

நிச்சியம்வேண்டும்
நிச்சியம் வேண்டும்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யூனிகோட் உமர்தம்பி அவர்களை பற்றி செய்தி வெளியிட்டதற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் சகோதரி.மலிக்கா

சைவகொத்துப்பரோட்டா said...

அங்கீகாரம் கிடைக்க வேண்டும்,
வாழ்த்துக்கள்.

பாத்திமா ஜொஹ்ரா said...

சரியான செய்தி அக்கா

did you see my email

Ahamed irshad said...

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்..சகோதரி மல்லிகா கட்டுரை வெளியிட்டமைக்கு ரொம்ப நன்றி.வாழ்த்துக்கள்.

காஞ்சி முரளி said...

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...
இதில் இருவேறு கருத்துக்களோ - மாறுபாடானக் கருத்துக்களோ யாருக்கும் இருக்க முடியாது...

இந்த கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு நாள் 'இணையதள'த்திற்க்கென ''தமிழ் இணையதள மாநாடு ' நடக்க இருப்பதாக அறிகிறேன்..

ஆனால்.... இந்த கோரிக்கைகள் தமிழக அரசின் - தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போனால்... அதனை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு......

நட்புடன்...
காஞ்சி முரளி...

Jaleela Kamal said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்//


நிச்சயமாக கவுரவிக்க படவேண்டும்.

சசிகுமார் said...

கண்டிப்பாக கௌரவிக்க படவேண்டியவர் கவுரவிக்கபடுவார் .

எல் கே said...

இது வெறும் பதிவுகளில் மட்டும் இல்லாமல். அரசின் கவனத்திற்கு செல்வது எவ்வாறு? யாருக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்? vazhi unda

சுப்பையா said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்.

தாங்களின் இந்த முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் மலிக்கா

தி கிரேட் நீங்க.....

சத்ரியன் said...

இதற்கு வாக்கெடுப்பு போல் எதுவும் வடிவமைத்து வலைப்பதிவர்களின் எண்ணங்களைச் சேகரித்து உரியவர்களுக்கு தெரியப்படுத்தலாமே.

பனித்துளி சங்கர் said...

உங்களின் எண்ணமும் சரிதான் புதுமையான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

சாருஸ்ரீராஜ் said...

அங்கீகாரம் கிடைக்க பெற வாழ்த்துக்கள்

Trichy Syed said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

இவர் கெளரவிக்கப்பட வேண்டியவர். தமிழக அரசு இவர் நினைவை போற்றுவதோடு மட்டுமல்லாமல் இவரது குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை!

கல்விக்கோயில் said...

நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியவர்.
அவரின் தமிழ்ப் பணியை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது.

அன்புடன் மலிக்கா said...

தாங்கள் அனைவரின் ஆதரவையும் கருத்துக்களாக தந்தமைக்கு. மிகுந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும்.

இறைவனின் உதவியால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். கிடைக்கவேண்டுமென அனைவரும் வேண்டிக்கொள்வோம்..

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...
இதில் இருவேறு கருத்துக்களோ - மாறுபாடானக் கருத்துக்களோ யாருக்கும் இருக்க முடியாது...

இந்த கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு நாள் 'இணையதள'த்திற்க்கென ''தமிழ் இணையதள மாநாடு ' நடக்க இருப்பதாக அறிகிறேன்..

ஆனால்.... இந்த கோரிக்கைகள் தமிழக அரசின் - தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போனால்... அதனை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு......

நட்புடன்...
காஞ்சி முரளி...

எப்படி முரளி முதலமைச்சரின் கவனத்திற்க்கு இதை கொண்டு செல்வது.ஆலோசனை வழங்கவும்..

தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

LK said...
இது வெறும் பதிவுகளில் மட்டும் இல்லாமல். அரசின் கவனத்திற்கு செல்வது எவ்வாறு? யாருக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்? vazhi unda..//

தெரியவில்லையே எல் கே.
நாம் நமதின் ஆதரவை தெரிவிக்கிறோம் எங்கு எப்படி செயல்படவேண்டும் என்பதை தெரிந்தவர்கள் செய்தால் நன்மையாக இருக்கும்..

அன்புடன் மலிக்கா said...

சத்ரியன் said...
இதற்கு வாக்கெடுப்பு போல் எதுவும் வடிவமைத்து வலைப்பதிவர்களின் எண்ணங்களைச் சேகரித்து உரியவர்களுக்கு தெரியப்படுத்தலாமே!

அப்படியும் செய்யலாம்தான் சத்ரியன்.

மிக்க நன்றி தாங்களீன் கருத்துக்களுக்கு..

அன்புடன் மலிக்கா said...

கவியின் கவிகள் said...
நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியவர்.
அவரின் தமிழ்ப் பணியை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது.//

வாங்க ஆசிரியர் அவர்களே!
தங்களைபோன்றவர்களின் நினைவுகளால் வாழுவும் அவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைத்திடும் என்ற நம்பிக்கையிருக்கு.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

Trichy Syed said...
//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

இவர் கெளரவிக்கப்பட வேண்டியவர். தமிழக அரசு இவர் நினைவை போற்றுவதோடு மட்டுமல்லாமல் இவரது குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை..//

தாங்களின் நல்லெண்ணங்கள்போல் நிறைவேறட்டும் சையத்தண்ணா..மிக்க நன்றி..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரி மலிக்கா, தங்களின் இந்த பதிவு அதிக தமிழ் மக்களை சென்றடைதிருக்கிறத பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நம்பிக்கை பலமாக உள்ளது. மேலும் தமிழார்வ சகோதர்களால் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் மேலும் தகவல் அறிய வேண்டுமால் என் ஈமெயில் tjdn77@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம், மற்றும் தங்களின் அலோசனைகள் செல்லுங்கள்.

amalraja. said...

thi kireet malikkaa. ungka manathu nallavaikaLai maddum ninaikirathu.

suppr. nissayam verri kidaikkum

amalraja.

amalraja. said...

thi kireet malikkaa. ungka manathu nallavaikaLai maddum ninaikirathu.

suppr. nissayam verri kidaikkum

amalraja.

amalraja said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்.

amalraja said...

//கெளரவிக்கப்படவேண்டியவர்கள் நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.//

கண்டிப்பாக கெளரவிக்கப்படவேண்டும்.

singamla366 said...

தமிழ் தமிழ் என்று சொல்லும் அரசு மிக பெரிய பிழை செய்து கொண்டுதான் உள்ளது ..அதாவது,
தமிழ் செம்மொழி மாநாடு சூன் 23 முதல் 27 வரை
ஏன் சூன் என்று சொல்லணும் தமிழ் மாதம் என்று ஓன்று உள்ளதே
நினைவு இல்லையா ஆனிமாதம் 9 முதல் 13 வரை என்று சொல்ல வேண்டாமா ..........

அண்ணாமலை..!! said...

இவர்கள்தாம் உண்மையிலேயே தமிழுக்காய் உழைத்தவர்கள்!
கௌரவிக்கப்படவேண்டியர்களும் கூட!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழக அரசை எப்படி அனுகுவது என்பதை இங்கே யாரவாது சொன்னால் நன்றாக இருக்கும், திரு. அலாவுதீன், அல்லது தமிழக முதலமைச்சரின் மகள் கனிமொழிக்கு மின் அஞ்சல் தொடர்புகள் கொண்டால் அரசை அசைக்க முடியும்... முயற்சிகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்

Kavianban KALAM, Adirampattinam said...

அவர் பிறந்த மண்ணில் பிறந்தேன்;
அவர் படித்த பள்ளியில் பயின்றேன்;
அவர் வீட்டுக்கருகில் வசித்த்தேன் என்ற பெருமிதத்துடனே...
அவர் போட்ட பிச்சையில் இன்று ஒருங்குறியில் வாசித்தேன்
என்பது தான் என் மனதுக்குள் மத்தாப்பு;.
என்றென்றும் பெரும் களிப்பு....

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

Kavianban KALAM, Adirampattinam said...

அவர் பிறந்த மண்ணில் பிறந்தேன்;
அவர் படித்த பள்ளியில் பயின்றேன்;
அவர் வீட்டுக்கருகில் வசித்த்தேன் என்ற பெருமிதத்துடனே...
அவர் போட்ட பிச்சையில் இன்று ஒருங்குறியில் வாசித்தேன்
என்பது தான் என் மனதுக்குள் மத்தாப்பு;.
என்றென்றும் பெரும் களிப்பு....

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

காஞ்சி முரளி said...

தங்களின் இந்த பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டது...

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்.. தமிழ் இணைய மாநாட்டின் அரங்கில் ஒன்றுக்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டி.. தமிழக அரசு அவரை கௌரவித்துள்ளது...

இதற்காக... பதிவிட்டு... அனைவரின் ஆதரவைப் பெற்று.. இப்பதிவின் நோக்கில் வெற்றி பெற்ற "அன்புடன் மலிக்கா"வுக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

நட்புடன்..
காஞ்சி முரளி...

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.