அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, April 24, 2010

சங்குசிப்பியில் கைவண்ணம்.


கடல்களில்

பீச்சுக்கு போனால் அங்கே மணல்மேல் கி[டை]டக்கும் சிப்பிகளையும் சங்குகளையும் கொண்டு நாம ஒரு அழகுப்பொருளை உண்டாக்கலாம்.

/இது தொங்கவிடும் ஸ்டைலுக்கு/

தேவையான பொருட்கள்


லேஸ்
கம் [பெபிக்கால்]
சிப்பிக்கள்.சங்குகள்.
ஒரு நீடோ டின்  மூடி சிறியது அல்லது
அமுல்ஸ்பிரே டின் மூடியோ ஒன்று
[அச்சோ ஜெய்லானி இதையும்கேட்டுடாதீங்க.
அதனுள் ஒட்ட கொஞ்சம் கலர்பேப்பர்.

எந்தகலரில் லேஸ் எடுக்கிறோமோ அதே கலரில் அந்தமூடியின் உள்பகுதிக்கு ஒட்டவும்

சிப்பிகள் சிறு சிறுசங்குகள் எடுத்து நம் எண்ணத்திற்க்கேற்ப வடிவமைக்கலாம்.

லேஸில்சிறிது இடைவெளி விட்டு சிப்பிக்களை ஒட்டவும்.


சிப்பியில் ஹோல்[ஓட்டை] போடுவதெல்லாம் சற்றுசிரமம் அதனால்
ஃபெபிக்கால் வைத்துஒட்டுவது மிகசுலபம்

இதுபோல் பல மாடல்கள் செய்யலாம்


டைனிங் டேபிளில் வைக்க

ஷோகேஸில் வைக்க,

வரவேற்பறையில்,தொங்க விடலாம்.

சிப்பியில் பெயிண்டிங் செய்து
அதை எந்தஷேப்பிலும் பூவாக முயலாக இப்படி எதுவேண்டுமென்றாலும்
செய்து மாட்டலாம்.

.
//நாங்க பீச்சிக்கு[கடலுக்கு] போகும்

நேரத்தில் இதுபோல் எடுத்துக்கொண்டு வருவோம் சும்மா கிடைக்கும் இயற்கை அழகைவிட்டுவைப்போமா அதேன் அதைக்கொண்டுவந்து இப்படியெல்லாம் அழகு படுத்தி, அழகுக்கு அழக்கு சேர்த்துருவோமுல்ல//


இது நாங்க ஏற்கனவே தங்கியிருந்த வீட்டின்[துபையில்] வரவேற்பறை எப்படியிருக்கு.


கிடைக்கும் பொருளைவத்து அதை அழகுபொருளாக மாற்றக்கற்றுக்கொள்ள பழகிக்கொள்ளனும்.
வீட்டில் நேரமேபோகலை என சும்மா அடுத்தாத்தைப்பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதைவிட இதுபோன்ற நமக்குள் இருக்கும் சிறு சிறு திறமைகளை நாமே வெளிக்கொண்டுவர முயற்சித்தால் நமக்கும் நல்லது.
 நம்மால் பிறருக்கும் நல்லது [கண்ணும் அழகு]..

அன்புடன் மலிக்கா


20 comments:

Madumitha said...

அழகுணர்ச்சி
இருந்தால்
காலில் இடறும்
சிப்பியும்
கலைப் பொருளாகும்.
நன்றி.

நாடோடி said...

என்னுடைய‌ சொந்த‌ ஊர்(க‌ன்னியாகும‌ரி) ப‌க்க‌ம் வ‌ந்த‌து ஊண்டா?.... இல்லையென்றால் ஒருமுறை வ‌ர‌வும்... இந்த‌ மாதிரி சிப்பியில் செய்த‌ பொருட்க‌ள் ரெம்ப‌ பேம‌ஸ்.... அடுத்த‌ முறை ஊருக்கு போனால் சில‌ போட்டோக்க‌ள் எடுத்து வ‌ர‌ முய‌ற்ச்சிக்கிறேன்‌....என்னுடைய‌ அம்மாவும் செய்வார்க‌ள்...

எல் கே said...

அருமை மலிக்கா . நல்லா இருக்கு

(பி.கு ரெண்டுலயும் ஓட்டு போட்டாச்சு )

ஜெய்லானி said...

இந்த சங்கு,சிற்பி பிசினஸ் பெரிய அளவில் கடலூரில் நடக்குது. கலை ஆர்வம் இருப்பவர்கள் இதை ஒரு தடவை பாத்தாலே போதும் .ஆர்வம் தானே வந்து விடும் இதுதான் மஹாபலி புரத்திலும் கிடைக்குது.

சங்கில் ஓட்டை போட சின்ன சைஸ் டிரில்லும் இருக்குது.

Ahamed irshad said...

Looking Nice...

ஜெய்லானி said...

இந்த கொயந்தய மறக்காம அமுல் ஸ்பிரெ மூடிய போட்டதுக்கு நன்றிங்கோவ்.

Jaleela Kamal said...

சிப்பிய கொண்டு ஒரு அழகு தோரணமா?

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு, எடுத்து பேக் பண்ணி வையுங்கஓ வந்து வாங்கி கொள்கிறேன். செய்ய்தான் முடியல வாங்கியாவது மாட்டிக்கலாமே/ இது எப்பூடி?

அன்புடன் மலிக்கா said...

Madumitha said...
அழகுணர்ச்சி
இருந்தால்
காலில் இடறும்
சிப்பியும்
கலைப் பொருளாகும்.
நன்றி..//

முதல் வருகைக்கும் முத்தான கருதுக்கும் மிக்க நன்றி மதுமிதா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
இந்த சங்கு,சிற்பி பிசினஸ் பெரிய அளவில் கடலூரில் நடக்குது. கலை ஆர்வம் இருப்பவர்கள் இதை ஒரு தடவை பாத்தாலே போதும் .ஆர்வம் தானே வந்து விடும் இதுதான் மஹாபலி புரத்திலும் கிடைக்குது.//

ஆகா அதானே எங்கேயோ பாத்த எழுத்தாக்கீதேன்னு நெனச்சேன் நீங்க அங்கஅதான் மலமேலகீத மஹாபலி புரம் அதுகிட்ட உக்காந்துகீன்னு சங்குல எழுதி விக்கிற அமுல்தானே அண்ணாச்சி நீங்க. புரிஞ்சிபோச்சி நல்லபுரிஞ்சி போச்சி..

இருந்தாலும் இத்தன விளக்கம் கொடுத்ததுக்கு நன்றிங்கக்கோ செய்லானி..

//சங்கில் ஓட்டை போட சின்ன சைஸ் டிரில்லும் இருக்குது.//

இதவச்சிக்கின்னு கய்டப்படக்கூடாதேன்னு இப்புடி ஒரு ஈசியான ஐடியாவ கொடுத்தோமுங்க அமுல்ஸ்பிரே..

காஞ்சி முரளி said...

எங்க... எப்படி இப்படி...
தனியா.... உக்காந்து யோசிபிங்ளோ...!

செயல்முறை விளக்கம்... அதோடு photoக்களும் சூப்பர்..

நட்புடன்...
காஞ்சி முரளி....

ப.கந்தசாமி said...

அன்புடன் மலிக்கா சொன்னது:

//சும்மா அடுத்தாத்தைப்பற்றி பேசி//

என்ன இருந்தாலும் அந்த சொகமே தனிங்க.

Menaga Sathia said...

அழகா இருக்கு மலிக்கா!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படங்களோட செய்முறை விளக்கம் அருமை :)

சாருஸ்ரீராஜ் said...

உங்கள் கைவண்ணம் ரொம்ப நல்லா இருக்கு

Priya said...

என்னோட சின்ன வயசில இந்த மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன்.

மிக சுலபமா அழகா படங்களோடு விளக்கம் கொடுத்திருக்கிங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... அழகா இருக்கு... வல்லவனு(ளு)க்கு புல்லும் ஆயுதம்னு நிரூபிக்கறீங்க

சசிகுமார் said...

அய்யோ உங்கள் கைவண்ணம் நிறைய மேட்டர் வச்சிருக்கீங்க போல, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான கைத்தொழில் கற்றுகொடுத்து இருக்கிங்க. நன்றி. நான் சிறிய வயதில் கடலில் சிப்பி பொறுக்கியதோடு சரி.அதற்கு மேல் முயலவில்லை.

'பரிவை' சே.குமார் said...

செயல்முறை விளக்கம்... அதோடு photoக்களும் சூப்பர்..

Anonymous said...

கலக்குறீங்க சிஸ்டர்!! :)

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.