தேவையானவைகள்.
இறால் 1/2 கிலோ
புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் துருவியது 2 கப்
பாதம்பருப்பு 20 ,25
பசுநெய் 2 ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் காரத்திற்கேற்ப
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
சீரக சோம்புத்தூள் 2.ஸ்பூன்
கருவேப்பில்லை
கொத்தமல்லி
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப
அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊரவைத்துக்கொண்டு
இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும்.தேங்காய்ப்பூவையும் பாதமையும் ஒருசேர நன்றாக அரைத்துக்கொள்ளவும் மிகவும் நைசாக.1 கப் அரிசிக்கு 2 கப்தண்ணீர் என எடுத்து அதில் அரைத்துவைத்துள்ள தேங்காய் கலவை ஊற்றி
அதனுடம் மசாலாக்களை கலக்கிவிடவும் அதனுடன் உப்பும் போடவும்
ரைஸ்குக்கரில் அதன் பாத்திரத்தை சூடாகி ஆயில் விட்டு அது சூடானது. அதில் பட்டை நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாய், கருவேப்பில்லைப்போட்டு வதக்கி அதனுடன் இறாலையும் சேர்த்து சற்று வதக்கவும்
அதன் வாசம் வந்ததும் இந்த தேங்காய் கலவையை அதில் ஊற்றவும்
ஒரு கிளறு கிளறிவிட்டு
மூடி வைக்கவும்
10, நிமிடத்தற்கு பிறகு திறந்து கிளறி அதன்மேல் பசுநெயை ஊற்றி ஒரு கிளறு கிளறவும்
பின்பு கொத்தமல்லியிலை தூவவும்.
இப்போது பாதம் இறால் சாதம்ரெடி.
இதற்கு நாக்கடுகு [தொட்டுகறி] சம்பல். முட்டை அவித்து பொறியல். கருவாட்டுத்தொக்கு என நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றதுபோல் சைடிஸ் செய்துகொண்டு ஒரு பிடி பிடிச்சிறலாம்.
நல்ல சுவையும் மணமுடன் கூடிய ஹெல்தியான சாதம் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையேனும் செய்து தந்தால் நல்லது.
இந்த பீ பி .கொலஸ்டால். உள்ளவங்க மாதம் ஒருமுறை அனைத்திலும் சற்று கம்மியாக்கிவிட்டு சமைத்து செய்து சாப்பிடலாம்.
அன்புடன் மலிக்கா
11 comments:
/இந்த பி பி .கொலஸ்டால். உள்ளவங்க மாதம் ஒருமுறை அனைத்திலும் சற்று கம்மியாக்கிவிட்டு சமைத்து செய்து சாப்பிடலாம்.//
நல்லது.. நல்ல பகிர்வு சகோ
LK said...
/இந்த பி பி .கொலஸ்டால். உள்ளவங்க மாதம் ஒருமுறை அனைத்திலும் சற்று கம்மியாக்கிவிட்டு சமைத்து செய்து சாப்பிடலாம்.//
நல்லது.. நல்ல பகிர்வு சகோ
//
பதிந்துவிட்டு வருவதற்க்கு சகோவின் கருத்து மிக்க நன்றி சகோ..
Photos Super. Nice post.
Photos Super. Nice post.
அருமையா இருக்கு. ரால் சீப்பா கிடைக்கிரதோட சமைக்க சொல்லிடனும். பகிர்வுக்கு நன்றி மல்லிகாக்கா!!
பாதாம் இறால் சாதம் போடத் தெரிஞ்ச நீங்க, அதை நண்பர்களுக்கு எப்படி அனுப்பி வைக்கனும்னு தெரியாதா ?
இப்படி நீங்கள் செய்யும் தவறுகளுக்கு அந்நியன் சட்டத்தில் என்ன தண்டனைன்னு தெரியுமா ?
அந்நியன் :.
சே.குமார் said...
Photos Super. Nice post.
//
மிக்க நன்றி குமார்..
எம் அப்துல் காதர் said...
அருமையா இருக்கு. ரால் சீப்பா கிடைக்கிரதோட சமைக்க சொல்லிடனும். பகிர்வுக்கு நன்றி மல்லிகாக்கா.//
சொல்லுங்க சொல்லுங்க அப்படியே எனக்கும் அனுப்பச்சொல்லுங்க..
மிக்க நன்றி காதர்..
Mohamed Ayoub K said...
பாதாம் இறால் சாதம் போடத் தெரிஞ்ச நீங்க, அதை நண்பர்களுக்கு எப்படி அனுப்பி வைக்கனும்னு தெரியாதா ?
இப்படி நீங்கள் செய்யும் தவறுகளுக்கு அந்நியன் சட்டத்தில் என்ன தண்டனைன்னு தெரியுமா ?
அந்நியன் :.//
அந்த சட்டத்துல ஏதாவது ஓட்டையிருக்கும் நாங்க பூந்து வெளியாயிடுவோமுல்ல..ஹா ஹா ஹா. அந்த ---த நாவ] ஒங்களுக்கே தந்துடுவோம் பாத்துப்பு..
வித்தியாசமான குறிப்பு மலிக்கா!
செய்து பார்க்கணும்!
ஆஹா ஸீ ஃபுட் (இறால் ) லேண்ட் புட் (முட்டை) கலக்கலா இருக்கு .
நேரங்கெட்ட நேரத்துல இதுக்குதான் சமையல் பதிவுகளை பாக்குறதில்லை. ஓக்கே..ஓக்கே..நேரா சைனிஸ் ஹோட்டலா பாத்து மிக்ஸ்ட் ஃபிரைட் ரைஸா பிடிச்சிட வேண்டியதுதான் ..!! :-))
Post a Comment