அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, November 29, 2010

ஃபிரஞ்ச்ஃபிரை மிக்ஸ் சிக்கன்


தேவையானவை


வேகவைத்த சிக்கன் 2 கப்

ஃபிரஞ்ச்பிரை 1 கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
சிகப்பு காய்ந்தமிளகாய் 3 [லேசாய் பொடியாக்கியது]
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
பட்டை, லவங்கம்,
கிராம்பு 3 ,பிரிஞ்சியிலை
கொத்தமல்லி
ஆயில்
உப்பு

ஃபிரஞ்ச்பிரையை ஃபிரிஜரிலிருந்து சற்று வெளியில் எடுத்துவைத்துகொள்ளவும்ம் அதன் ஜில் போனதும் சேர்க்கனும்
வேகவைத்த சிக்கனை சிறிய பீசாக உதிர்த்து, வெங்காயம் தக்காளி
நீளவாக்கில் அரிந்துகொண்டு 

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 2 ஸ்பூன் ஆயில்விட்டு அது சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு

பிரிஞ்சியிலை.அனைத்தையும்போட்டு,பின் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு சற்று சிவந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்ட்மற்றும் சிகப்பு காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும் நல்லமணம் வரும் ,
அப்போது சிக்கன் மற்றும் ஃபிரஞ்ச்ஃபிரை சேர்த்து அதன்மேல் உப்புபோட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்
பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி கிளறிவிட்டு இறக்கவும்.
இப்போது ஃபிரஞ்ச்ஃபிரை மிக்ஸ் சிக்கன் ரெடி.

ருஸ்தி//என்ன பக்கத்திலிருக்கும் பையனைப் பார்த்து பயந்துட்டீங்களா வேறொன்னுமில்லை இதை சாப்பிட்டுவிட்டுதான் பறந்து பறந்து விளையாடுறேன், அடிக்கிறேன். மிதிக்கிறேன். அப்படின்னும் . அடுத்தவங்க தாக்கினா அவங்க கைகாலுதான் உடையுமுன்னு கையவேற தூக்கி காட்டுறான்போல இதை செய்து சாப்பிட்டு நல்ல தெம்பாயிருங்கன்னுமுன்னு அவன் சொல்லுறான் நல்ல காதுகொடுது கேளுங்கப்பு..

அன்புடன் மலிக்கா

18 comments:

எல் கே said...

சரி ரைட்டு வரட்டா

'பரிவை' சே.குமார் said...

பிரஞ்ச் பிரை படங்களுடன் அருமை அக்கா...

வேற சொல்ல சாப்பிட்டுப் பாத்தாத்தானே தெரியும்... அப்ப வரட்டா.

Jaleela Kamal said...

ஒரு வித்தியாசமான கலக்கல் தான் போங்க என் பசங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும் அப்படியே சாலட் சேர்த்து பரோட்டாவுடன் கொடுத்தால் ம்ம்ம்ம்ம்
சத்தமில்லாமல் உள்ளே போகும்.

www.samaiyalattakaasam.blogspot.com

Chitra said...

French fries with chicken - new recipe. Thank you!

ஹுஸைனம்மா said...

ஃப்ரெஞ் ஃப்ரைகளைப் பொறித்துப் போடணுமா இல்லை அப்படியே போடணுமா மலிக்கா?

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ஃப்ரெஞ் ஃப்ரைகளைப் பொறித்துப் போடணுமா இல்லை அப்படியே போடணுமா மலிக்கா.//

இல்லை ஹுசைனம்மா அப்படியேதான் போடனும்

அன்புடன் மலிக்கா said...

LK said...
சரி ரைட்டு வரட்டா

//

லெஃப்டால வாங்க சகோ. ஹா ஹா

pichaikaaran said...

சாப்பிட்டு பார்த்துட்டு கருத்து சொல்றேன்

GEETHA ACHAL said...

பார்க்கும் பொழுதே வித்தியசமாக இருக்கு...

இதுவரை ப்ரெஞ் ப்ரைகளை இப்படி செய்து பார்த்தில்லை...

இதனை சாலட் அல்லது சண்ட்விட்சுடன் சாப்பிட சுவையாக இருக்கும்...செய்து பார்க்கிறேன்...

ஜெய்லானி said...

//ஃபிரஞ்ச்பிரை 1 கப் //

அக்க்காஆஆஆஆஆ ..ஒரு சந்தேகம் ..!!
அதை ஃபிரை செய்தாதானே ஃபிரை...ஃபிரை செய்யாம எப்படி ஃபிரைன்னு சொல்றீங்க

ஜெய்லானி said...

//சிகப்பு காய்ந்தமிளகாய் 3 [லேசாய் பொடியாக்கியது] //

அதென்ன சிகப்பு காய்ந்த மிளகாய்..? காயாட்டி அது பச்சைமிளகாய்தானே ஹி..ஹி..

ஜெய்லானி said...

//பிரிஞ்சியிலை.அனைத்தையும்போட்டு,பின் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு சற்று சிவந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்ட்மற்றும் சிகப்பு காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும் நல்லமணம் வரும் ,//

ம்....படிக்கும் போதே பிரியாணி ஸ்மெல் வருது...!!

ஜெய்லானி said...

கொத்தமல்லிக்கு பதில் (அரபி பேர் மறந்துடுச்சி ) வேர இலைப்போட்டால் லெபனானி ஃபுட் இது..!! :-))

Menaga Sathia said...

வித்தியாசமா நல்லாயிருக்கு மலிக்கா..

ஆமினா said...

நல்ல குறிப்பு மலிக்கா!!!

ஒன்னு சொன்னா தப்பா நெனைக்காதீங்க. போட்டோக்கு டிசைன் கொடுக்க வேண்டாம் பா. செய்யும் போது பாக்க சரியாவே இல்ல!!!

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
பிரஞ்ச் பிரை படங்களுடன் அருமை அக்கா...//
நன்றி குமார்.

//வேற சொல்ல சாப்பிட்டுப் பாத்தாத்தானே தெரியும்... அப்ப வரட்டா//

சாப்பிட்டு பார்தாதான் தெரியும் செய்து சாப்பிட்டு பார்த்து ஓகே..சொல்லுங்க.. வாங்க வாங்க

பித்தனின் வாக்கு said...

நில்லுங்க, நான் மலைக்குப் போய்ட்டு வந்து உங்க சிக்கனை ஒரு கை பார்க்கின்றேன்.

pichaikaaran said...

சாப்பிட்ட பின் தான் கருத்து சொல்ல முடியும்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.