அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, November 10, 2010

மரக்கட்டை மனிதர்களால் மானத்திற்கு ஆபத்து.


கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு... ""சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி... அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.


அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.

மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்... திருமணமாகாத இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய... பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க... அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் ""சரிங்க... நீங்க வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ... என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே... ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்' என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற... நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்... மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.

""ஹலோ வணக்கம்... டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?''
""ம்...?''
""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''
""சரி...''

""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.''
""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''

""கேமரா இருக்குங்களே மேடம்?''

""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)

""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா... வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.

""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.

""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?''.

""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்... அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல... ஆனா... இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல... திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண் இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.

""கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த செய்தி எனக்கு மெயில் வந்தது
படித்ததும் அதிர்ந்துபோனேன் தேகம் முழுவதும் ஏதோ
ஊர்ந்து செல்வது போலிருந்தது..அச்சோ இது உண்மையாக இருக்ககூடாதுன்னு நினைத்தேன். ஏனெனில் இது எவ்வளவு பெரியகாரியம் தாய்மையடைந்து அதை தக்கவைக்க போராடி உயிரைக்கொடுத்து உயிரை வெளியாக்கும் இடமாச்சேன்னு..

பெண்ணுக்கு பெண்ணே எதிரியாவதா?மகப்பேறு மருத்துவர்கள் தாயைப் போலவல்லவா?தன் தாயிடம் ஒளிமறைவில்லாமல் இருக்கும் குழந்தையைபோல்.தன்னை நம்பிவரும் குழந்தையின் மானத்தை சீரழிப்பதா ? உயிரை காக்கவேண்டியவர்களே அவ்வுயிர் பலியாவதற்கும் .அவ்வுயிரின் மானம் குலைவதற்கும் உடந்தையாக மாறுகிறார்களே இதை நினைதால்தான் உள்ளமே நடுங்குகிறது.
எதை நம்பி நாம் மருத்துவமனைகளுக்கு செல்வது நம்பிக்கையில்தானே அதிலேயும் மண்விழுந்தால் எப்படி?.

பணம் என்றால் பிணமும் எழும் என்பார்கள் ஆனால் இவர்களைபோன்றவர்கள் பணத்துக்காக பிறர் மானத்தை போக்கி அதில் குளிர்காய்ந்து பிணமாக நடமாடுகிறார்கள்.

கவனம் இனி நம்மில்தான் இருக்கிறது எங்கு நோக்கினும் நம்மை நோக்கித்தாக்கும் எதிர்கனைகளை முறியடிக்க கவனம் நம்மில்தான் இருக்கிறது.எத்தனை பட்டாலும் திருந்தாத மனிதர்களைபோல்
எத்தனை கற்றாலும் மனிதமிழந்த ஜென்மங்களாக இருப்போரிடம் அதிஜாக்கிரைதையாக இருக்கவேண்டும்.

காலம் கலிகாலம் ஆகிபோச்சுங்கோ
கேமராக்கள் காலமாக மாறிப்போச்சுங்கோ

கண்ட கண்ட இடத்தில் கேமிராக்கள் பொருந்தப்படுகிறது கண்கானிகிறேன் என்ற பெயரில்.அது பலரில் மானத்தை காற்றில் பறக்கவைக்கிறது என்று தெரிந்தும். நல்லவைகளுக்காக பயன்படுத கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தையும் தீவைகளுக்காகவே கையாளப்படுவதுதான் வேதனையும் வேதனை.எல்லாம் கம்பியூட்டர் காலத்தின் சோதனை.

தொண்டை கிழிய கத்தினாலும் கைவலிக்க எழுதினாலும் திருந்தமாட்டேன் என்ற மனித மரக்கட்டைகளை என்ன செய்வது.
கண்ணுக்குத்தெரியா தீங்கிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள அவசியம் வேண்டும் வேண்டும்
”விழி ப்புணவு வேண்டும்.

பல தளங்களிலும் இது வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா

35 comments:

LK said...

என்ன சகோ ?? காலையில் இவ்வளவு அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி .. யாரை நம்புவது இந்தக் காலத்தில் ? துணிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் கேமரா ,ஹோட்டல்கில் குளியல் அறையில் ,இப்பொழுது மருத்துவமனையில் ???? அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா

Jaleela Kamal said...

அட பாவமே இப்படி அனியாயம் நடக்குதே, படித்துட்டு பக்குன்னு இருக்கு.
அட இப்படி பட்ட ஜென்மஙக்ள் திருந்தாத ஜென்மங்கள்.

Chitra said...

என்ன கொடுமைங்க, இது? :-(

சே.குமார் said...

அதிர்ச்சித் தகவல் அக்கா...

என்ன ஒரு கேவலமான செயல்...
தன் மானங்கெட்ட கணவனுக்காகவா இப்படி ஒரு கேவலச் செயலை செய்கிறார் இந்த கேவலப்பட்ட டாக்டர்.

புனிதமான தொழிலை இது போல அற்ப பிறவிகள் கேவலப்படுத்துவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள்.

அன்புடன் மலிக்கா said...

LK said...
என்ன சகோ ?? காலையில் இவ்வளவு அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி .. யாரை நம்புவது இந்தக் காலத்தில் ? துணிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் கேமரா ,ஹோட்டல்கில் குளியல் அறையில் ,இப்பொழுது மருத்துவமனையில் ???? அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா.//

ஆமாம் சகோ. எப்படியெல்லாம் பெண்களை மனபங்கப்படுதனுமோ அப்படியெல்லாம் படுத்துகிறார்கள்.

கூடப்பிறந்தவர்களையோ தன் தாய்மார்களையோ இப்பாதசெயல்களில் இணைத்துபார்க்கமுடியுமா இவர்களால்?

நம்பிக்கையில்தானே செல்கிறோம்
அந்த நம்பிக்கையில் மண்ணள்ளிப்போடுவதுபோல்.
உயிரோடு வைத்து வதைசெய்யும் இவர்களைபோலுள்ளவர்களை என்ன செய்வது..சே என்ன மனிதர்கள் இவர்கள்.
இவர்களும் மனித ஜென்மங்கள்தானே.இல்லை வேறெதுவுமா.

மொத்ததில் காலம் கெட்டுபோய்விட்டது
மனிதமனங்கள் சாக்கடையைவிட கேவளமாகி வருகிறது..

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...
அட பாவமே இப்படி அனியாயம் நடக்குதே, படித்துட்டு பக்குன்னு இருக்கு.
அட இப்படி பட்ட ஜென்மஙக்ள் திருந்தாத ஜென்மங்கள்.//

நிஜம்தான் அக்கா
இட்ப்படிபட்டவர்களுக்கு மனசட்சியென்பதேது. இருந்தால் செய்வார்களா இதுபோன்ற இழிச்செயலை..

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
என்ன கொடுமைங்க, இது? :-(//

கொடுமையோ கொடுமைங்க.

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
அதிர்ச்சித் தகவல் அக்கா...

என்ன ஒரு கேவலமான செயல்...
தன் மானங்கெட்ட கணவனுக்காகவா இப்படி ஒரு கேவலச் செயலை செய்கிறார் இந்த கேவலப்பட்ட டாக்டர்.

புனிதமான தொழிலை இது போல அற்ப பிறவிகள் கேவலப்படுத்துவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள்..//

ஆமாம் குமார் படித்ததும் பகீரென்றது.
புனிதத்தை புலக்கடையில் விடும் மனிதர்கள்.
புண்ணியத்தொழிலை கண்ணியம் செய்யதவறும் பிறவிகள்.

இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது மனதின் உணர்வும் மனித உணவும்..

dineshkumar said...

சூறையாடும் இத்தகைய கொடூர மருத்துவர்கள் இருந்தென்ன பயன் கொயம்போத்தூரில் காம அரக்கனை தொலைத்த துப்பாக்கி குண்டுகளே இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டும்

யுகம் மாற வதம் வர வேண்டும்

சாருஸ்ரீராஜ் said...

வேதனையான விசயம் படிக்கும் போதே பகீர்னு இருக்கு, அனுபவிச்சவுங்க நிலைமை ..

ஹுஸைனம்மா said...

ம்.. மெயில்ல வந்துது.. படிச்சு அதிர்ச்சியா இருந்துது.. பத்திரிகையில் இது வந்தபின் அவர்கள் தரப்பு பதில் என்ன, காவல்துறை என்ன ந்டவடிக்கை எடுத்தது(!!) என்று தெரிந்தால் நிம்மதியாருக்கும்...

வெறும்பய said...

,மனிதனின் உயிரை காக்கும் ஒரு புனிதமான தொழிலை இப்படி முறைகேடாக பயன்படுத்துகிறார்களே... ஈனப்பிறவிகள்..

ஸாதிகா said...

அஸ்தஃபிருல்லாஹ்..படிக்கவே பயமாக உள்ளது.தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.இது போல் பல வருடங்களுக்கு முன் நாகர்கோவிலில் பிரபல ,மருத்துவமனையில் பிரபல மருத்துவரின் பெயர் பரபரப்பாக பேசப்பட்டு அடங்கிப்போனது.அப்படி இராமல் உடனே தகுந்த நடவடிக்கையும்,தணடனையும் வாங்கித்தரவேண்டும்

அரபுத்தமிழன் said...

பெண்கள் எல்லா இடத்திலும் உஷாராகவே இருக்க வேண்டும். உடை கழற்றும் முன் அல்லது மாற்றுமுன் ஒரு முறைக்கு இரு தடவை நன்றாக செக்கிங் செய்து கொள்ளவும். மெயிலில் வந்தாலும் பதிவேற்றியமைக்கு நன்றி சகோதரி.

kavisiva said...

இப்பதான் ஆமினாவின் பதிவில் இத்தகவலைப் படித்தேன் . பகீர்னு இருந்திச்சு. உங்கள் பதிவில் முழுதகவலும் தெரிந்தது. கொடுமை!

இந்த ஈனப்பிறவிகளுக்கு என்கவுண்டர் கிடையாதா :(

kavisiva said...

இப்பதான் ஆமினாவின் பதிவில் இத்தகவலைப் படித்தேன் . பகீர்னு இருந்திச்சு. உங்கள் பதிவில் முழுதகவலும் தெரிந்தது. கொடுமை!

இந்த ஈனப்பிறவிகளுக்கு என்கவுண்டர் கிடையாதா :(

ஜெய்லானி said...

http://kjailani.blogspot.com/2010/03/blog-post.html

இந்த லிங்க்கில் நான் ஏற்கனவே சொன்னதுதான் ..!! இதில் உஷாராக இருப்பது அவரவர்களின் திறமை :-(
வேற என்ன சொல்றது கொடுமையை பத்தி..!!

அஸ்மா said...

அரசாங்க நடவடிக்கையை எதிர்ப்பார்த்து சும்மா பேசிக்கொண்டிருக்காமல், மக்களே இறங்கி நடுத் தெருவில் இந்த ஜென்மங்களை இழுத்துப் போட்டு தப்போ தப்புன்னு நல்லா தப்பணும். இல்லாவிட்டால் அங்கங்கே காசு பணம் அந்த பாவிகளை காவல் காத்துக்கொள்ளும். இந்த மாதிரி டாக்டர்கள் இருந்தா என்ன? தொலைந்தா என்ன..?

அமைதிச்சாரல் said...

நாம வைக்குற முழு நம்பிக்கையை பாழாக்குற இவங்களை என்ன செஞ்சா தகும்....

அன்புடன் மலிக்கா said...

dineshkumar said...
சூறையாடும் இத்தகைய கொடூர மருத்துவர்கள் இருந்தென்ன பயன் கொயம்போத்தூரில் காம அரக்கனை தொலைத்த துப்பாக்கி குண்டுகளே இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டும்

யுகம் மாற வதம் வர வேண்டும்..//

படிக்கும்போதே சிலிர்கிறது என்ன செய்ய காலத்தில் கொடுமையா? இல்லை மனசாட்சியை மறந்ததின் விளைவா? எதுவென்ற போதும் கொடுமைதான்..

மனிதர்கள் மனிதத்தோடு வாழ பிராத்திப்போம்..

அன்புடன் மலிக்கா said...

சாருஸ்ரீராஜ் said...
வேதனையான விசயம் படிக்கும் போதே பகீர்னு இருக்கு, அனுபவிச்சவுங்க நிலைமை..//

ஆமாக்கா அவங்க நிலமையை யோசிச்சாலே அச்சோ ந்னு வருதுக்கா..

பாரத்... பாரதி... said...

//என்ன ஒரு கேவலமான செயல்...
தன் மானங்கெட்ட கணவனுக்காகவா இப்படி ஒரு கேவலச் செயலை செய்கிறார் இந்த கேவலப்பட்ட டாக்டர்.//

இது போன்ற மனச்சாட்சி இல்லாத மனிதர்களால் மானுடத்திற்கே அவமானம்.

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ம்.. மெயில்ல வந்துது.. படிச்சு அதிர்ச்சியா இருந்துது.. பத்திரிகையில் இது வந்தபின் அவர்கள் தரப்பு பதில் என்ன, காவல்துறை என்ன ந்டவடிக்கை எடுத்தது(!!) என்று தெரிந்தால் நிம்மதியாருக்கும்...//

எங்கும் இதே செய்திதான் என்பதைபோல் தினந்தோறும் ஒரு அதர்ச்சி ரிப்போட் வந்துகொண்டேயுள்ளது.
நிறைய .காமில் இதே செய்திதான் ஹுஸைனம்மா


மக்கள் விழிப்புணவோடிருந்தும் சில சமயங்கள் ஆபத்துகள் தன்னையறியாமல் வருகிறது.

நீங்கள் சொல்வதுபோல் பார்ப்போம் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களென்று..

இனி இதுபோன்றவைகள் நடக்காத அளவுக்கு இறைவன்தான் காக்கவேண்டும்..

baba said...

Dears

pls bring this issue to all blogers knowledge and publish it all over India through Website and all New paper + Channel.

Please send the copy to Chennai Police commisioner.

Hope you can understand my request.

As i can, i will copy and paste this link & message in all other blogs .

And i will send this message to all my friends through my email.

thanks & regards
Anand
Bamako,Mali.

ரோஸ்விக் said...

என்ன ஒரு வக்கிரமான செயல்.... :-(

Mohamed Ayoub K said...

மருத்தவப் படிப்பு படித்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்யப் போறோம்னு கிளம்பிய டாக்டர்களில், இந்த பைத்தியகார டாக்டரும் ஒருத்தன்.
நோயாளி பரிசோதனை அறையில் கேமரா வைத்தது, சிந்திக்கக் கூடிய விஷயம்.கேமரா பொதுவாக இப்போ எதுக்கு பயன் படுத்துகிறார்கள் என்றால், பெரிய, பெரிய அங்காடி கடைகளில் திருட்டு குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காகவே பயன் படுத்துகிறார்கள்,மற்றும் பொது இடங்கள்,விமான நிலையங்களிலும் பயன் படுத்துகிறார்கள் பாதுகாப்பிற்காக,நோயாளிகள் வந்து போகும் மருத்துவமனைக்கு கேமரா ஏன் வந்துச்சு? அதுவும் பரிசோதனை அறையில் !!!
தவறு செய்த அந்த டாக்டரை பிடித்து, அரசிடம் ஒப்படைத்தால் அந்த அயோக்கியன் அஞ்சே நிமிசத்தில் வெளியே வந்துவிடுவான்,காரணம் சொசைட்டியில் அவன் ஒரு விஐபி.

அரசு,சட்டம்,நீதியரசர்கள்,போலீசுகள்,மற்றும் பல கிரிமினல் வக்கீல்களை, தமது பையில் வைத்திருக்கும் அந்த பச்சோந்தி பயலுக்கு, இதுவெல்லாம் கால் தூசு,நீங்களும் நானும் கோபப் பட்ரதுனாலே, இந்த அயோக்கியனை ஒன்னும் செய்து விட முடியாது,

என்னுடைய கேள்வி ?
ஏன் ?ஆண் மருத்தவரிடம் இளம்பெண் நோயாளி சோதனை அறைக்கு போக வேணும் ?
பெண் மறுத்தவர் இல்லையா ?
அப்படி பெண் மறுத்தவர் இல்லாதப் பட்ச்சத்தில் தம் கணவரையோ அல்லது தம் பெற்றோரையோ அழைத்துச் செல்லாதது ஏன் ?

தண்டனை :

குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அந்த அயோக்கிய டாக்டருக்கு அந்நியனின் தண்டனைப் பிரிவு 307எ, மற்றும் 307பி, பிரிவுகளின் படி அவனின் இரு கண்களையும் பழுக்க வைத்த கம்பியில் 16 நிமிடம் கண்ணில் வைத்து கட்டிவிட வேண்டும்,இது அவன் பார்த்து ரசித்ததற்கு.

தண்டனைப் பிரிவு 303, 309,301,பிரிவுகளின்படி அவனின் அங்கங்களை ஒவ்வொன்றாக வெட்டி, மக்கள் பார்வைக்காக பேருந்து நிலையத்திலோ, அல்லது ரயில் நிலையத்திலோ, கண்ணாடிப் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

குறிப்பு : இந்தப் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுக்கும் போது அவன் கண்டிப்பாக உயிருடன் இருக்க வேண்டும்.

ஜட்ஜ்மென்ட் இஸ் ஓவர்.

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

அந்நியன் :

dineshkumar said...

அன்புடன் மலிக்கா said...
dineshkumar said...
சூறையாடும் இத்தகைய கொடூர மருத்துவர்கள் இருந்தென்ன பயன் கொயம்போத்தூரில் காம அரக்கனை தொலைத்த துப்பாக்கி குண்டுகளே இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டும்

யுகம் மாற வதம் வர வேண்டும்..//

படிக்கும்போதே சிலிர்கிறது என்ன செய்ய காலத்தில் கொடுமையா? இல்லை மனசாட்சியை மறந்ததின் விளைவா? எதுவென்ற போதும் கொடுமைதான்..

மனிதர்கள் மனிதத்தோடு வாழ பிராத்திப்போம்..

கண் கெட்டப்பின் சூரியனமஷ்காரம்..

காலம் கடந்த்துவிட்டது சகோ .....

மனிதர்களில்
மனிதனைத் தேடு
பிழைத்துக்கொள்வான்
மனிதரில்
மாறாய் இனம்
காணப்பட்டவன்
வதைக்கபடுவான்............

எம் அப்துல் காதர் said...

இதை தட்டிக் கேட்க, தண்டிக்க ஒருவருமே இல்லையா??

Ananthi said...

இப்படி கூடவா செய்வாங்க?? ஹ்ம்ம்.. நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு..!!

நாம் தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.. வேற என்ன சொல்றது..!

வேண்டாம் வரதட்சணை said...

வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரி அவர்களுக்குநீங்க கோவிச்சுக்கிர மாட்டீக அப்புடியின்ன வெளிப்படையாக என்னுடைய கருத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன்
இந்த பதிவியுள்ள அந்த படம் ரோம்ப ஆபாசமாக உள்ளது
(இவ்வளவுக்கும் ஹஸ்பிட்டலில் நடந்த சம்பவத்திற்கும் அந்த படத்திலுள்ள பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)
சில நாலந்தர பத்திரிக்கைகள் விற்பனையை கூட்டுவதற்காக இது போன்ற படங்களை இட்டு பணம் செய்கின்ற உத்தி அவர்களை பொறுத்த வரை சமூக அக்கறை என்பதல்லாம் சும்மா
ஆனால் நீங்கள் சமூக அக்கறையோடு பாதிக்கப்பட்ட பெண் இனத்தை சேர்ந்தவர் என்ற முறையிலும் பதிவு இட்டுயிருக்கிறீர்கள் நீங்கள் அந்த படத்தை தவிர்த்து இருக்கலாம் அல்லவா?
முஹம்மது நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்
விபச்சாரத்தில் பல வகைகள் இருக்கின்றன அவைகளில் ஒன்று கண்களால் செய்யக்கூடிய விபச்சாரம்
இந்த படம் கண்களால் செய்யக்கூடிய விபச்சாரத்திற்கு வழி வகுத்து விடலாம்
அதனால் அடுத்த பதிவுகளில் கவனமாக இருங்கள்
உங்கள் மனதை புன்படுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்

சகோதரன்
ஹைதர் அலி

பின் குறிப்பு
இப்படி சகோதரி ஆமினா அவர்களின் பதிவில் நான் பின்னூட்டம் இட்டவுடன்
அந்த படத்தை தூக்கி விட்டார்கள்
உங்களுடய பிளாக்கில் இப்போது தான் பார்க்கிறேன்

அன்புடன் மலிக்கா said...

. யாரையும் நம் மனதளவில்கூட கெடவேண்டும் எனநினைக்கூடாது என்ற நல்லெண்ணைதிலும். அதெ சமயம் பெண்கள் எல்லாநேரமும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமென்ற எண்ணதுடனும்தான் எனக்கு வந்த மெயிலை இவ்வலையில் பதிந்தேன்..

கருத்துரைகளை பகிர்ந்துகொண்ட அனைவ்ருக்கும் என்மனமார்ந்த நன்றிகள்

அன்புடன் மலிக்கா said...

அன்புள்ள சகோதரர் ஹைதரி அவர்களுக்கு. வருகைக்கும் நல்லதொரு கருதுக்கும் மிக்க நன்றி.

//நீங்கள் அந்த படத்தை தவிர்த்து இருக்கலாம் அல்லவா//

அப்படத்தை போடவேண்டும் என்பது என் எண்ணமல்ல அதோடு கேமராவின்படத்தோடு அப்படதையும் இணைத்துள்ளார்கள் ஆதலால் எனக்கு வந்த செய்தியினை அப்படியே பதிந்தேன். இச்செய்தி எனக்கு அதோடு இச்செய்திமெயிலில் வந்தது.அப்புறம் யாரேனும் இதை நானாக வெளிட்டேனென அவதூறுகள் பரப்பிவிடுவார்கள் என்பதனாலும்தான் வந்த மெயிலை அப்படியே இதில் பதிந்தேன்.

நான் எழுதும் கவிதைகளின்கூட வார்தைகளில் கவனமாக இருக்கும் நான் இதில் கவனமில்லாமல் இருந்துவிடவில்லை.அதை தவிர்கமுடியா சூழல் வேறொன்றுமில்லை இருந்தபோதும். இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக

தாங்களின் அன்பான அக்கரையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா said...

அன்புள்ள சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு.

போட்டோவை நானே எடிட்செய்து போட்டுள்ளேன் இப்போது சரியா?

ஹைதர் அலி said...

சகோ மலிக்கா அவர்களுக்கு
//போட்டோவை நானே எடிட்செய்து போட்டுள்ளேன் இப்போது சரியா?//
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
(ஜஸக்கல்லாஹ் கைர்) அல்லாஹ் உங்களுக்கு நன்மையை செய்வானாக

உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.