அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, January 9, 2011

நடந்தால் உடம்பு கூடவே வருதா?



உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்


1. குளிர்பானம் கூடவே கூடாது

2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்

3. பகல் தூக்கம் கூடாது

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்

5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்

6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது

7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்

8. வாழைப்பழம் உண்ணக் கூடாது

9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்

10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்

11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்

12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்

13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது

16. புளி சேர்க்கக் கூடாது

17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது

18. நிறைய நீர் அருந்த வேண்டும்

19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

20. மது அருந்தக் கூடாது

21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது

22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது

23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்.

இது நம்மளோடது
24.
சாப்பாடு ருசியாக இருக்கேன்னு கொஞ்சமா வச்சிறாதீங்க கொஞ்சமா வச்சிறாதீங்கன்னு தட்டை நீட்டக்கூடாது.

25. அடுத்தாத்து சாப்பாடு நான்னாயிருக்குமேன்னு அவாவீட்டுக்குபோயிருக்கிறச்சே ஒரு வெட்டு வெட்டக்கூடாது..


இது பார்க்கமட்டும்தான்..அதாவது எனக்குமட்டும்]

என்ன எல்லாதையும் படிச்சாச்சா. அப்படியே ஃபாலோபண்ணுங்க.
என்னங்க எல்லாமே கூடாதுன்னுசொன்னா எதை சாப்பிடுவதுன்னெல்லாம் எடக்குமடக்கா கேட்கக்கூடாது. நடந்தா உடம்பு கூட வரவேண்டாமுன்னு நினைக்கிறவங்க இதை ஃபாலோபண்ணலாம்.

இது என் சொந்த கதையல்ல சுட்டகதை.
ஆசானிடமிருந்து மெயிலில் வந்தது அதை நாமமட்டும் வாசித்துவிட்டு வச்சிருந்தா எப்புடி அதான் உங்களாண்டையும் சொல்லிக்கலாமுன்னு ..

அன்புடன் மலிக்கா

27 comments:

pichaikaaran said...

useful.

மதுரை சரவணன் said...

சுட்டு சாப்பிட்டா ஒண்ணும் ஆகாதுங்க... சுட்டது நல்லாதான் ஆரோக்கியமா இருக்கு... வாழ்த்துக்கள்

புல்லாங்குழல் said...

நல்ல யோசனை தான் ஆனால் இவ்வளவும் செய்யனுமா? ம்.ம்..

குண்டு பையனை வேற போட்டு பயமுறுத்துறீங்க????

ராஜவம்சம் said...

ஹா ஹா ஹா....

ப.கந்தசாமி said...

நடந்தா உடம்பு கூட வரல்லைன்னா ஏடாகூடமா ஆகிப்போயிடுமுங்களே? எங்காச்சும் போய்ட்டு திரும்பி வரப்போ உடம்பை எங்கேயோ கொண்டு போயிடுவாங்களே?

Vikis Kitchen said...

Tips superb. But how can I stay in diet after seeing that beautiful plate full of fries:)

Anonymous said...

கண்டிப்பா பாலோ பண்றோமுங்க..ஆனால் நான் கொஞ்சமா தின்னு கூட 70கிலோ இருக்கேனே?

காஞ்சி முரளி said...

யாருங்க அந்த ஆசான்..?

அட்வைஸ் நல்லாத்தான் இருக்கு...!
சரி...! இந்த பதிவ "மலிக்காஆஆஆஆஆஆ" போட்டிருக்காங்களாம்..!

நான் சொன்னாலாவது எதோ பரவாயில்லை...!

சாந்தி மாரியப்பன் said...

சுட்டது ருசியாத்தான் இருக்கு..

எல்லாத்தையும் சொல்லிட்டு, தட்டையும் காமிக்கிறீங்களே நியாயமா :-))))

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள பகிர்வு...

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் அனுமதி இல்லாமல் 2 பதிவுகளை தோட்டத்தில் பதித்துவிட்டேன் மன்னிக்கவும்.. மின்னஞ்சலை தேடிப்பார்த்தேன் காணாததால் எனக்கு பிடித்த பதிவை பதிவு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்..

விரும்பினால் தாங்களே நமது தோட்டத்திலும் பதிவு செய்யலாம்...

அல்லது பதிவு செய்ய அனுமதி கொடுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

பார்வையாளன் said...
useful.

நன்றி பார்வையான்..


//மதுரை சரவணன் said...
சுட்டு சாப்பிட்டா ஒண்ணும் ஆகாதுங்க... சுட்டது நல்லாதான் ஆரோக்கியமா இருக்கு... வாழ்த்துக்கள்..//

ஆக சுடலாம் அப்பசரி.. வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்..

அன்புடன் மலிக்கா said...

ஒ.நூருல் அமீன் said...
நல்ல யோசனை தான் ஆனால் இவ்வளவும் செய்யனுமா? ம்.ம்..

குண்டு பையனை வேற போட்டு பயமுறுத்துறீங்க????//

பாவம் அந்த குண்டுபையன் நம்மளை கண்டு அல்லாரும் கண்ணு வக்கிறாங்கன்னு உடல் இளைத்துபோகப்போறான். ஹா ஹா

நன்றி அமீன்..

//ராஜவம்சம் said...
ஹா ஹா ஹா....//

இதென்ன ஓ சிரிப்பாஆஆஆஆஆஅ

அன்புடன் மலிக்கா said...

DrPKandaswamyPhD said...
நடந்தா உடம்பு கூட வரல்லைன்னா ஏடாகூடமா ஆகிப்போயிடுமுங்களே? எங்காச்சும் போய்ட்டு திரும்பி வரப்போ உடம்பை எங்கேயோ கொண்டு போயிடுவாங்களே?//

அடடா அப்படியொன்னு இருக்குள்ள டாக்டர் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க நீங்க.

கொண்டுபோய் வச்சி மூச்சுவாங்கட்டும் முடியாம மூச்சுமுட்டட்டுமே. அப்புறம் தன்னால வந்து திருப்பி தந்துடுவாங்க.. எப்புடி..

//Viki's Kitchen said...
Tips superb. But how can I stay in diet after seeing that beautiful plate full of fries://

விஜி உங்களுக்கில்லாததா அப்படியே தூக்கிக்கோங்க ஆனா ஒன்னு பங்க தந்துவிட்டு ஓகே.. மிக்க நன்றி விஜி..)

அன்புடன் மலிக்கா said...

தமிழரசி said...
கண்டிப்பா பாலோ பண்றோமுங்க..ஆனால் நான் கொஞ்சமா தின்னு கூட 70கிலோ இருக்கேனே?//

வாங்கக்கா நலமா. கொஞ்சமான்னு சொன்னா எவ்ளோக்கா இல்ல ஏன்னா சிலர் தட்டை நீட்டியும் நீடாமலும் கொஞ்சமா வச்சிறாதீங்க கொஞ்சமா வச்சிறாதீங்கன்னு சொல்லுவாக அப்படியில்லையில்ல..
70 தானே அப்ப சரி.. மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்துக்கும்..


//காஞ்சி முரளி said...
யாருங்க அந்த ஆசான்..?//

அவுகளா அன்புடன் புகாரி அவர்களைதான் சொன்னேன் சகோ..

அட்வைஸ் நல்லாத்தான் இருக்கு...!
சரி...! இந்த பதிவ "மலிக்காஆஆஆஆஆஆ" போட்டிருக்காங்களாம்..! //

அதானே தமிழரசியக்கா சொன்னதில் ஒரு 5 கிலோதான் கம்மி இருந்தாலும் நான் சொல்லியிருக்ககூடாதுதான்..ஆனாலும் நான் சொன்னதுசரிதான் எப்புடீஈஈஇ

//நான் சொன்னாலாவது எதோ பரவாயில்லை...!//

அது நிசம் உங்களைபோல் அல்லாரும் இருக்கமுடியுமா.
அண்ணி பாருங்க உங்களை அண்ணா என்ன சொல்லுறாருன்னு . நீங்க இதெல்லாம் பாக்குறதில்லையின்னு அண்ணாக்கு தைரியம் அதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

அன்புடன் மலிக்கா said...

அமைதிச்சாரல் said...
சுட்டது ருசியாத்தான் இருக்கு..

எல்லாத்தையும் சொல்லிட்டு, தட்டையும் காமிக்கிறீங்களே நியாயமா :-))))//

நியாமில்லைதான் என்ன செய்வது நம்ம நாக்கை கட்டமுடியலையே இதை பார்ததும் சரி துண்ணதான் இப்போதைக்கு முடியாது மத்தவா கண்ணுக்காவது தெரியட்டுமேன்னுதான் இப்படியொரு நியாயமில்லா நியாயம் செய்துவிட்டேன்..
நன்றி அமைதிச்சாரல்..


//தமிழ்த்தோட்டம் said...
மிகவும் பயனுள்ள பகிர்வு//

மிக்க நன்றி தமிழ்தோட்டம்..

அன்புடன் மலிக்கா said...

தமிழ்த்தோட்டம் said...
உங்கள் அனுமதி இல்லாமல் 2 பதிவுகளை தோட்டத்தில் பதித்துவிட்டேன் மன்னிக்கவும்.. மின்னஞ்சலை தேடிப்பார்த்தேன் காணாததால் எனக்கு பிடித்த பதிவை பதிவு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்..

விரும்பினால் தாங்களே நமது தோட்டத்திலும் பதிவு செய்யலாம்...

அல்லது பதிவு செய்ய அனுமதி கொடுங்கள்
//

அப்படியா. பதிந்தமைக்கு மகிழ்ச்சி. இனி சமயம் கிடைக்கும்போது நானே வந்து பதிகிறேன் மிக்க நன்றி..

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரி அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிகவும் பயனுள்ள பகிர்வு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உடம்பைக் குறைக்க தாங்கள் கொடுத்த அறிவுரைகள் படிக்க நன்றாக்த் தான் உள்ளன.

பின் பற்றத் தான் மிகவும் கஷ்டமாக உள்ளது.

இது சம்பந்தமாக நான் என் அனுபவத்தை ஒரு சிறுகதையாக எழுதியுள்ளேன்.
தங்கள் e mail id கொடுத்தால் அனுப்பி வைப்பேன்.

படத்தில் உள்ள குண்டுப் பையன் நல்ல அழகாக இருக்கிறான்.

MANO நாஞ்சில் மனோ said...

நடக்குற காரியமாய்யா இது.....அவ்வவ்வ்வ்வ்....

ஆர்வா said...

அட்வைஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கடைசியில பலகாரத்தை காட்டி அட்வைஸை காப்பாத்த முடியாம பண்ணிட்டீங்க.. ஹி..ஹி..

தமிழ்த்தோட்டம் said...

//அப்படியா. பதிந்தமைக்கு மகிழ்ச்சி. இனி சமயம் கிடைக்கும்போது நானே வந்து பதிகிறேன் மிக்க நன்றி.. //


தாங்கள் வந்து பதிகிறேன் என்று சொன்னது ரொம்ப மகிழ்ச்சி

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. தோட்டத்தில்

www.tamilthottam.in

apsara-illam said...

மலிக்கா...,23 வரைக்கும் படிச்சப்போ கூட ஒண்ணும் தெரியல அடுத்து ரெண்டு படிச்சேன் பாருங்க.... வாய்விட்டே சிரிச்சுட்டேன்....என்னமா யோசிக்கிறீங்கப்பா.....
ஹூம்... எல்லாம் சரிதான்
யாரும் இதெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடியா சாப்பாட்டுக்கு பின்னாடியான்னு கேக்க போறாங்க...

அன்புடன்,
அப்சரா.

shalihazubair said...

இவ்ளோ குறிப்பு வகையா கொடுத்துட்டு

அதை திங்கபடாது இதை திங்கபடாதுன்னா
இது உங்களுக்கே நியாயமா சேச்சி.

Jaleela Kamal said...

hihi
இத்தனையும் கண்ணில் காம்பித்தால் சாப்பிட இருக்க முடியுமோ

Unknown said...

பயனுள்ள தகவல் .நன்றி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.