அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, June 1, 2011

எப்பபாத்தாலும் பதிவு பதிவுன்னுகிண்ணு..

என்ன கோடைவெயில் கொளுத்துதா!

கொஞ்சம் சில்லுன்னு ஏதாவது குடிக்கனும்போல் தோணுதா.
என்ன தேடுறீங்க! என்ன குடிக்கலாமுன்னா! இதோ இதபோல் செய்து குடிங்க.
சும்மா சூ சு

[3பேருக்கு]
 வாழைப்பழம் 1
 ஐஸ் கட்டி 1 கப்
 ஆரஞ்ச் குல்கோஸ் 5 ஸ்பூன்
  ஜீனி 3 ஸ்பூன்
பிரஷ் பால் 2 கிளாஸ்

மிக்சியில் வாழைப்பழத்தையும் ஐஸையும்போட்டு ஒரு சுற்று.பின்பு அதில் பால். குல்கோஸ் ஜீனி அனைத்தையும்போடு ஒரு சுற்று. அவ்வளவுதான்.அப்படியே சில்லுன்னு குளு குளுன்னு குடிக்கலாம்.
இருங்க அப்படியேன்னதும் மிக்ஸியோடு தூக்கி குடிக்காதீங்க .ஒரு கிளாஸில் ஊற்றி குடிங்க  ஹ்கி ஹி ஹி..

அட இது என்ன யேன் தெரியாத மாங்காய். 
ஆமாப்பு அடிக்கிர வெயிலில் மனிதனே காயும்போது தம்மாதுண்டு மாங்கா காயாதா! பச்சமாங்க வாங்கி அதை சிறிய துண்டாக போட்டு அதில் உப்பும் பச்சைமிளகாயும் போட்டு வெயிலில் ஒரு 3 மணிநேரம் வச்சிஞ்டு அப்பால துண்ணா சும்மா சூப்பரா இருக்குமுல்ல..

அடடா இந்த பெரிய மனுசன் என்ன துண்ணுறார். ”ஓ அதுவா” அதாங்க! சிக்கன் [ப]பெர்கராம். என்னாது எங்களுக்கு இல்லையா! பாத்துப்பு தொண்டையில் சிக்கன் கூவிறபோகுது..
ஹா ஹா இதாரு.என்ன தெரியலையா!  நல்லா உத்துபாருங்கப்பு. இருட்டுல கண்ணுதெரியாமதான் நானே எடுத்தேன்..நல்லாவுல்ல சிளீப்புறாரு. நாங்க பொறத்துபோயி சுத்திட்டு நைடு 12. 1/2 வந்தா! கார்பார்க்கிங்கில் நம்ம காரு பேக்குல சும்மா சோக்கா சிளீபிகின்னு இருந்தாரு  விடுவோமா! அதான் நம்ம ”செல்”லுல சிறைபிட்ச்சிட்டோம் ..



எப்பபாத்தாலும் பதிவு பதிவுன்னு யின்னாத போடுறது. இந்த கம்பிபிட்டர் பொட்டியில் எம்மா பதிவு குவிஞ்சிக்கிடக்கு. ஆனாலும். எத்த போடுறதுன்னு ஒரே கன்பிஷாச்ச்ங்கப்பு அதே இப்புடி..

15 comments:

Raj suga said...

அக்கா கவிதையில மட்டுமில்ல சமையலிலும் கலக்கிறீங்க போங்க.......... வாழ்த்துக்கள் அக்கா எல்லாமே சூப்பர்

முனைவர் இரா.குணசீலன் said...

வயிறு நிறைந்து விட்டது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன பதிவு போடுறதுன்னு நினைத்து வித்தியாசம ஒரு பதிவு...

எப்படியோ பதிவு போட்டாச்சி மேடம்...

ஷர்புதீன் said...

:)

குணசேகரன்... said...

மிக்க நன்றி.வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்
..

மதுரை சரவணன் said...

படம் அதனை தொடர்ந்து ஒரு அற்புதமான கமண்டு ... அப்புறம் மாண்க்கா மேட்டர் ஒர்க் அவுட் ஆகும்.. நல்லா வந்து இருக்கு.. வாழ்த்துக்கள்

நிரூபன் said...

அடடா, கோடை வெயிலுக்கேற்ற பழச்சாறு ரெசிப்பி.... பகிர்விற்கு நன்றிகள் சகோ.

Mahan.Thamesh said...

அக்கா காலத்துக்கேற்ற பதிவு நன்றிகள்

அப்பாதுரை said...

வெளிச்சம் குறைவானாலும் செல்போன் படம் நல்லா வந்திருக்குங்களே? நாய்க்குட்டி தானே? :)

க்ளூகோஸ் சீனி சாப்பிட்டு வருடக்கணக்காகிறது! ம்ம்ம்.

அன்புடன் மலிக்கா said...

வாங்க வாங்க இந்த கொளுத்தும் வெயிலிலும் குடையோடு வந்தவுங்களுக்கும். குளு குளுன்னு கருத்தை அன்பா தந்தவுங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/அப்பாதுரை said...

வெளிச்சம் குறைவானாலும் செல்போன் படம் நல்லா வந்திருக்குங்களே? நாய்க்குட்டி தானே?//

கி ஹி ஹி ஹி கி . உங்களுக்கு கண்ணு நல்லாவே தெரியுது ஒத்துகிறேன் அய்யா. ஆனாலும் ஒரு சின்ன மிஸ்டேக் அது நாய்குட்டியல்ல நாய்குட்டி பெத்த குரங்குட்டி எப்புடி :)

//க்ளூகோஸ் சீனி சாப்பிட்டு வருடக்கணக்காகிறது! ம்ம்ம்.//

அதுசரி க்ளுகோஸ் சீனி தான் சாப்பிடக்கூடாது குளுகோஸ் .ஜீனி சாப்பிடலாமுல்ல. ஆத்தாடி அடிக்க வந்துடாதீக..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

கார்த்தி said...

என்ன சமையல் பதிவு மட்டுமில்ல போல?

மாலதி said...

அடடா, கோடை வெயிலுக்கேற்ற பழச்சாறு ரெசிப்பி.... பகிர்விற்கு நன்றிகள்

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

கீதமஞ்சரி said...

பழச்சாறு நல்ல ரெசிப்பி. செய்து பார்க்கணும். அந்தப் பச்சை மாங்கா....ஸ்ஸ்ஸ்.... பார்க்கும்போதே நாக்கு சப்புக் கொட்டுது. எப்பத்தான் சாப்பிடப்போறேனோ? :(

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.