அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, February 18, 2013

பெற்றோருக்கு கிடைக்கும் சந்தோஷம்.



பெற்றோருக்கு கிடைக்கும் சந்தோஷம் பெற்றெடுத்த பிள்ளைகளால்!
சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் குழந்தை பெறுவது, அதைவிட சந்தோஷம் அக்குழந்தைகளின்மூலம் கிடைக்கபெறும் ஒவ்வொன்றும்.பெற்றெடுத்த குழந்தைகளை பாதுகாத்து வளர்த்து அதனை பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்காக வாழ்க்கை வழிகாட்டுதலை அறியச்செய்யும் பெற்றோருக்கு, பள்ளியில் பயிலும் தன்குழந்தை எல்லாதிலும் சிறப்பாக வரவேண்டுமென விரும்புவது எல்லா பெற்றோரின் ஆத்மார்தமான விருப்பம், அப்படியான விருப்பங்கள் படிப்படியாக நிறைவேறும்போது ஆனந்தம் ஆன்மாவை குளிர்விப்பதோடு,அது பொங்கிவந்து பக்கதிலிருப்போரையும் தொற்றிக்கொள்ளுமளவுக்கு வழிந்தோடும், அந்நிலைதான் எனக்கும். 

எனது அன்பு மகன் ”குற்றாலம்”  சையத் ரெஸிடன்ஸ் பள்ளியில் 9 வகுப்பு படிக்கிறான். அவன் கடந்த டிசம்பர் மாதம் டேபில்  டென்னிஸ் விளையாட்டில் முதலிடம் பெற்றான்.

 அதற்காக கொடுக்கபட்ட சர்ட்பிகெட். [இதுபோல் 2010 வரை துபையில் படிக்கும்போதும் நிறைய வாங்கினான்]

மேலும்,தற்போது தமிழ்நாடு ஸ்டேட் லெவல் இங்லீஸ் Proficiency Test டில், ஸ்டேட் லெவலில் இரண்டாமிடமும். 

டிஸ்டிக் லெவலில் முதலிடம் பெற்ற,இரு கோல்ட் மெடல்களும், ஒரு சர்ட்பிகெட்டும், வாங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். இப்படியான சந்தோஷம் தந்த மகனை வாழ்த்தி,இந்த சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனை வேண்டி, இன்னுமின்னும் அவன் படிப்பிலும், வாழ்க்கையிலும், சிறந்து விளங்க மனப்பூர்வமாய் வேண்டிக்கொள்கிறோம்.




ஒவ்வொரு பிள்ளையும் படிப்பிலும், ஒழுக்கத்திலும், நல்லகுணத்திலும், சிறந்தவர்களாக விளங்கவேண்டும். சிறுவயதுமுதலே ஒழுக்கத்தையும், நற்சிந்தனைகளையும், படிப்பின் மகத்துவத்தையும்.,உழைப்பின் உந்துகோலையும், போதித்துவரும்போது,அதற்கான பலனாக படிப்பில் மட்டுமல்லாது அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுப்பதோடு நம் கடமை முடிவதில்லை, அதை கொடுக்கும்போது இது எப்படி வந்தது, இதற்காக எத்தனை சிலவானது, இது கிடைக்கப்பெற்ற வழியென்ன என்பதினையும் பிஞ்சிலேயே பதியவையுங்கள். கேட்பது தற்போது கிடைக்காது என்பதையும் தக்க காரணங்களோடு புரியவையுங்கள் அவர்களுக்கு புரியும்படி!

பெற்றோர்களின் அனுசரனைகள் மிக முக்கியம், அதனை அகலாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள், அன்பு செலுத்துங்கள், அரைமணிநேரமேனும் சிலசெய்து அவர்களைபற்றிப்பேசுங்கள் அவர்களோடும் பேசுங்கள். 

 குழந்தைகள் பெரியவர்களானதும் பெரிய ஞானிகளாக இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடையோர்களாக! நல்ல பழக்கவழக்கமுடையோராக! எதையும் யோசித்துச் செய்யக்கூடியவர்களாக! எதையும் சாதிக்ககூடியவர்களாக வளர்வார்கள், வளமாக வாழ்வார்கள்...
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்,

மேலும் நிறைய பரிசு அவார்டுகள் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆதிரா said...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் ...வாழ்த்துக்கள்..

Aashiq Ahamed said...

மாஷா அல்லாஹ்

'பரிவை' சே.குமார் said...

மகிழ்ச்சியான விஷயம் அக்கா....

மருமகனுக்கு வாழ்த்துக்கள்.

மாதேவி said...

வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.