அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, October 24, 2009

ஸ்பெஷல் சிக்கன்



தேவையானவை

சிக்கன் ½ கிலோ

பல்லாரி 2

தக்காளி 2

பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,

சீரகம் சோம்புப்பொடி 2

ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

பொட்டுக்கடலை கொஞ்சம்

தேங்காய் கால் கப்

முந்திரி 15

இடியப்பமாவு 2ஸ்பூன்

ஆயில், உப்பு.


சிக்கனை நன்றாக சுத்தம்செய்துகொண்டு,  மீடியமான அளவில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்

ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை, ஏலம், கிராம்பு, போட்டு வாசனை வந்ததும்

 நீளவாக்கில் நறுக்கிய பல்லாரி தக்காளி, மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி[கீரை] போட்டு நன்றாக வதக்கவும்

மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி [அடுப்பை சிம்மில் வைத்து விடவும்]

மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு

சிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதையும் இடியப்பாமவையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்துக்கொண்டு அதனுடன் சேர்த்துகிளரவும்
[அடுப்பை சிம்மில் வைத்தபடியே அத்தைனையும் செய்யவும்]
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

இப்போது சூடான சுவையான சிக்கன் ஸ்பெஷல் ரெடி

இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்
ரசம் சாதத்துக்கும், புரோட்டா, சப்பாத்தி, நாண்,
இவைகளுக்கு ஏற்ற ரெஸிபி...

அன்புடன் மலிக்கா

8 comments:

ஹேமா said...

சண்டே ஸ்பெசலா இண்ணைக்கே செய்து பாத்திட்டாப் போச்சு.

நாஸியா said...

அட! இது உங்க ஊரு special aa?

Jaleela Kamal said...

கலக்கல் மலிக்கா சூப்பரோ சூப்பர், சிக்கன்

அன்புடன் மலிக்கா said...

/ஹேமா said...
சண்டே ஸ்பெசலா இண்ணைக்கே செய்து பாத்திட்டாப் போச்சு//

செய்துபாருங்க ஹேமா, சாப்பிட டேஸ்டா இருக்கும்..

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
அட! இது உங்க ஊரு special aa?/

இல்லைங்கோ இது இங்கவந்து நாமா கத்துக்கிட்டதுங்கோ..

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
கலக்கல் மலிக்கா சூப்பரோ சூப்பர், சிக்கன்/

அட்டகாச சமையல்ராணியே,
தேங்ஸோ தேங்ஸ்ங்க..

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அப்படியே சாப்பிட வேண்டும் போல இருக்கின்றது...

sabeeca said...

nalla irukku

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.