அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, November 1, 2009

மீன் சினை நெட்டிக்கூட்டு



தேவையானபொருட்கள்



பல்லாரி -1[வெங்காயம்]
தக்காளி -1
நாட்டு கத்தரிக்காய் -8
ப,மிளகாய் - 3
சீரகசோம்புத்தூள் -2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1ஸ்பூன்
கருவேப்பில்லை
இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
பொறியரிசி கொஞ்சம்
தேங்காய்பால் 1 கப்
முழுசீரகம்
பூண்டுபல்3உப்பு
ஆயில்



மீன்சினை[பெரியமீன்களில் இதுபோல்இருக்கும்]


சினைநெட்டியை உடைந்துவிடாமல் நன்றாக உப்பு மஞ்சள்தூள்போட்டு கழுவிக்கொள்ளவும்.
பின்பு பல்லாரி தக்காளி கத்தரிக்காய் ப,மிளகாய் அனைத்தும் கட்செய்து ஒரு பவுல்போலுள்ள பாத்திரத்தில் இவையனைத்தையும் போடவும்


அதனுடன் கழுவிய சினைநெட்டிபோடவும்
சீரகசோம்புதூள் மஞ்சள்தூள் உப்பு போட்டு கூட்டு வைக்கும் அளவு தண்ணீர்வைத்து எல்லாம் சேர்வதுபோல் கிளரி


மூடிவைத்து அடுப்பில் வைக்கவும்


மசாலாவாசனை போனது அப்போது திறந்து பொறியரிசி 3 ஸ்பூன்போடவும் போட்டு கிளரிவிடவும்

 
நன்கு கட்டியில்லாமல் கிளரி விடவும்



அதனையையும் 5நிமிடங்கள்கொதிக்கவிடவும்


தேங்காய்பாலை ஊற்றவும் ஊற்றிகிளரவும்


பின் ஆயில் விட்டு முழுசீரம் சிறியவெங்காயம் கருவேப்பில்லை பூண்டுபல் சிறு மிளகாய்தூள் போட்டு தாளித்து போடவும்


இப்போது சூப்பரான மீன்சினைநெட்டிகூட்டு ரெடி.


இது வெறும் சாதம் ரசத்துடன் சாப்பிடவும், இடியம்பம், ரொட்டி, புரோட்டா, சப்பாத்தி கூட, சாப்பிட |”சும்மா செம டேஸ்ட்டாக இருக்கும்

17 comments:

GEETHA ACHAL said...

எப்படி தான் இவ்வளவு பொறுமையாக படங்கள் எடுத்தீங்களோ...படங்கள் அனைத்து அருமை..

சூப்பர்ப்

பாவா ஷரீப் said...

நாந்தான் பர்ஸ்ட்டோய் !
மீன்சினை இந்த மேரி எல்லாம் கடலாண்ட கீரவங்கோ செஞ்சுகினு நீங்களா தும்ப்பீங்கோ
நாங்க எங்க போறதுக்கா... அக்காங்...

(பார்த்த உடனே வாயில் ஜலம் ஊரிடுத்து...., ரொம்ப நன்னா இருக்கு)

பித்தனின் வாக்கு said...

i am absent today. looking good. i am vegitarian. thanks.

அன்புடன் மலிக்கா said...

/Geetha Achal said...
எப்படி தான் இவ்வளவு பொறுமையாக படங்கள் எடுத்தீங்களோ...படங்கள் அனைத்து அருமை..

சூப்பர்ப்/

எல்லாம் உங்களமாதரி ஆளுங்ககிட்டயிருந்து கத்துகிட்டதுதான் கீத்து,,

மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
நாந்தான் பர்ஸ்ட்டோய் !
மீன்சினை இந்த மேரி எல்லாம் கடலாண்ட கீரவங்கோ செஞ்சுகினு நீங்களா தும்ப்பீங்கோ
நாங்க எங்க போறதுக்கா... அக்காங்.../

கடலாண்ட மாத்ரமல்ல தம்பி இப்ப அல்லா எடத்துலயும் கெடக்கீதுபா,
தம்பிக்கு எந்த ஊரு?

(பார்த்த உடனே வாயில் ஜலம் ஊரிடுத்து...., ரொம்ப நன்னா இருக்கு/

பின்னே நன்ன ருசியாக்கும் இந்த மீன்சினைக்கூட்டு,
ரொம்ப தேங்ஸ்ங்க அம்பி..

அன்புடன் மலிக்கா said...

/பித்தனின் வாக்கு said...
i am absent today. looking good. i am vegitarian. thanks/

நோ நோ பிரஸ்ஸண்ட் ஆயிட்டேள்
பின்னூட்டத்தில்,

ரொம்ப நன்றி பித்தனின் வாக்கு..

பாவா ஷரீப் said...

//கடலாண்ட மாத்ரமல்ல தம்பி இப்ப அல்லா எடத்துலயும் கெடக்கீதுபா,
தம்பிக்கு எந்த ஊரு?//

திருப்பூர் தான் நேக்கு,

ஆத்துல, குளத்தில எல்லாம் நன்னா இருக்கேளா

எங்க ஆத்துக்கும் அடிக்கடி வந்துட்டு ஒரு டிக்ரீ காபி குடிச்சிட்டு போங்கோ

பாவா ஷரீப் said...

//தம்பிக்கு எந்த ஊரு?//

ரஜினி படம் தானே
எப்புடீ.....

பாவா ஷரீப் said...

//தம்பிக்கு எந்த ஊரு?//

யக்கா புல் அட்ரஸ் நோட் பண்ணிக்க
no 6. விவேகானந்தர் தெரு,
திருப்பூர் முட்டு சந்து,
திருப்பூர் மெயின் ரோடு,
திருப்பூர் ( பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்)

யக்கா வூட்டுக்கு வந்து காபி தண்ணி குடிச்சிட்டு போக்கா ..... அக்காங் வர்ர்ட்டா

அன்புடன் மலிக்கா said...

/திருப்பூர் தான் நேக்கு,
ஆத்துல, குளத்தில எல்லாம் நன்னா இருக்கேளா

ஓ பேஷா இருக்கோம்

எங்க ஆத்துக்கும் அடிக்கடி வந்துட்டு ஒரு டிக்ரீ காபி குடிச்சிட்டு போங்கோ/

நிச்சியம் வருகிறேன்,

//தம்பிக்கு எந்த ஊரு?//

ரஜினி படம் தானே
எப்புடீ...

எந்த ரஜினி இது எப்புடீ..

யக்கா புல் அட்ரஸ் நோட் பண்ணிக்க
no 6. விவேகானந்தர் தெரு,
திருப்பூர் முட்டு சந்து,
திருப்பூர் மெயின் ரோடு,
திருப்பூர் ( பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்)

ஓ.. இந்த சனியன்கள் உற்பத்தியாகுமே [அச்சோ] பனியன்கள் அங்கேயா?????

யக்கா வூட்டுக்கு வந்து காபி தண்ணி குடிச்சிட்டு போக்கா ..... அக்காங் வர்ர்ட்டா..

வாரோமுங்க,
யக்காவா?????ஒரே ஏஜ்ன்னு நினைக்கேன் அம்பி..

sabeeca said...

nalla irukku malikka ratta romba kasttappattu ulluka vandurukken pattu badil podunga yellam ungalukkahattan saalakala villi sorry valli

sabeeca said...

tamilla yeppadi tipe pannu vadunu teriyala yekkov

sabeeca said...

yemmadi yevaladu kastta pattu poitten yellam namma ooru ponnugaradu nalatan aamasdef

அன்புடன் மலிக்கா said...

அம்மாடி சபீகா வந்துட்டீங்களா வாங்க வாங்க, வாங்கரத்துக்கு வாங்க,
நம் ஊர்காரவகளே எப்படி இருக்கீங்க நலமா, பசங்கயெல்லாம் நலமா,

ரொம்ப ரொம்ப சந்தோஷமுங்கபா நீங்க கஷ்டப்பட்டு எனக்காக உள்ளே வந்ததற்க்கு தொடர்ந்து வாங்கோ, வாரேளா?

அன்புடன் மலிக்கா said...

தமிழில் டைப்பண்ண உங்க கம்பியூட்டரில் /NHM WRITER DOWNLOAD/ ரைட்டர் டவுன்லோட் செய்யுங்க ரொம்ப ஈசியா தமிழ் எழுதலாம் பேசுவதுபோல் எழுதினால்போதும் இங்லீஸை,தானே தமிழில் வரும் முயன்றுபாருங்கள்..சபீ

மிக்க மகிழ்ச்சிபா

பாவா ஷரீப் said...

//ஓ.. இந்த சனியன்கள் உற்பத்தியாகுமே [அச்சோ] பனியன்கள் அங்கேயா?????//

ஏனுங் அம்மணி,
என்னங் பொசுக்னு இப்பிடி சொல்லிபோட்டிங்

நாங்க உற்பத்தி பண்ற சனியன்கள் (ஐயோ) பனியன்கள் நாங்க இங்கேயே வைச்சுக்கிரதில்லங்

உங்கள மேரீ (ரொம்ப) நல்லவங்க கீர நாட்டுக்கு அனுபிச்சுகினுவோம்....

இதெப்படி கீது......... ஆக்காங்

பாவா ஷரீப் said...

மொதல்ல நம்ப கம்பனி பத்தி சொல்லணும் அக்காங் கேட்டுக்கோ !!
==========================================================================
அகில உலக காமெடி கம்பனி
==========================================================================

1) கம்பனி உறுப்பினர் பதிவு போட்டாக்கா , (நல்லா கீதோ இல்லியோ ) ஆஹா ஓஹோ இன்னு சொல்லணும் .

2) யாரு இன்னா சொன்னாலும் பேப்படக் கூடாது .

3) கம்பனி சந்தா கட்டனும் (எவ்வளோ செலவு கீது) (பொருளாளர் நாந்தாம்பா )

இது தான் கம்பனி கண்டீசனு
அக்காங் !! ஒயுங்கா நல்ல புள்ளையா ( இதுங்க கூட சேந்தா எங்கேர்ந்து உருப்படறது ? )

கம்பனில வந்து சேருங்.....

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.