அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, November 3, 2009

நல்லெண்ணைசாதம்






நல்லெண்ணை 2 குழிக்கரண்டி

சிறிய வெங்காயம் 150 கிராம்

முட்டை 1

மிளகுதூள் கொஞ்சம்

உப்பு

வடித்த சோறு 2 கப்

கொத்தமல்லி[இலை] கொஞ்சம்


நல்லெண்ணையை சூடுவந்ததும் வெங்காயத்தை வதக்கவும்

வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளறவும் எண்ணையின் சத சதப்பிலேயே

மிளகுத்தூளை போட்டு ஒருகிண்டி கிண்டி சோற்றைப்போட்டு எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு

இறக்கி இளம்சூட்டோடு பிடித்து பிடித்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்ப்படும்

தொண்டைவலி, தலைச்சூடு, திடீர் வயிற்றுவலி, போகும் என
என் அம்மாவின் அம்மா
செய்து தருவார்கள்

நல்லபலனும் கிடைத்திருக்கு
இது சாப்பிடவும் ருசியாக இருக்கும்


அன்புடன் மலிக்கா

8 comments:

GEETHA ACHAL said...

நல்லெண்ணெய் சாதம் சூப்பர்ப்..
எங்கள் வீட்டில் எல்லாம் நல்லெண்ணெய் மயம் தான்...சாம்பார், குருமா என்றுசிலவற்றிக்கு மட்டும் கார்ன் ஆயில் உபயோகிப்பேன்...மற்ற எல்லாவற்றிக்கும் நல்லெண்ணெய் தான்...


அதன் சுவையினை என்ன என்று சொல்லுவது...உடலிற்கும் நல்லது என்பதால் அதனையே உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன்..

இந்த சாதம் நன்றாக இருக்கின்றது...இதனை தான் குழந்தை பிறந்த பிறகு தினமும் சாப்பிடுவேன்...இப்படி சாப்பிட்டால் குழந்தை பிறந்தவர்களுக்கு,கர்ப்பைபை, வயிறு எல்லாம் நன்றாக சுருங்கிவிடும் என்று கூறுவார்கள்.

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா நான் நேற்று இந்த சாதம் செய்தேன் ஆனால் நல்லெண்ணெய் இல்லை . செய்து பார்கிறேன்.

கீதா , நல்லெண்ணெய் புகையும் smell வராத நான் தோசை , புளிக்குழம்பு தாளிக்க தான் use பன்ன்னுவேன்.

S.A. நவாஸுதீன் said...

நீரோடையின் சாரல் இந்தப்பக்கம் அடிக்குதா. தெரியாமப்போச்சே. தமிழிஷ்ல பார்த்துட்டு வ்ர்ரேன்.

Menaga Sathia said...

இந்த சாதம் பார்ப்பதற்க்கு சூப்பராயிருக்கு.இதுவரை நான் இப்படி செய்ததில்லை.செய்து பார்க்கிறேன் மலிக்கா!!

பித்தனின் வாக்கு said...

நல்ல இருக்கும் போல இருக்கே. இது முட்டை போடாமல் காய்கள் போட்டுப் பண்ணினால் எப்படி இருக்கும்? நான் நீங்கள் கூறியது போல காய்கள் போட்டு பண்ணிப் பார்க்கின்றேன். நன்றி.

அன்புடன் மலிக்கா said...

கீத்து மிக்க நன்றி விளக்கமான கருத்துக்களுக்கு

சூப்பராக இருக்கிறது குழந்தை

அன்புடன் மலிக்கா said...

/மலிக்கா நான் நேற்று இந்த சாதம் செய்தேன் ஆனால் நல்லெண்ணெய் இல்லை . செய்து பார்கிறேன்./

நல்லெண்ணை சேர்த்துசெய்யுங்கள் சாருக்கா.

கீதா , நல்லெண்ணெய் புகையும் smell வராத நான் தோசை , புளிக்குழம்பு தாளிக்க தான் use பன்ன்னுவேன்..

அது சட்டியில் ஊற்றும்போதுமட்டும்வரும் மருந்துன்னா அப்படியும் இப்படியும்தான் என்ன கீத்து நான்சொல்ரதுசரியா:]

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
நீரோடையின் சாரல் இந்தப்பக்கம் அடிக்குதா. தெரியாமப்போச்சே. தமிழிஷ்ல பார்த்துட்டு வ்ர்ரேன்./

ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா,நீரோடையிலேயே கலை ஓடைன்னு போட்டிருக்கேனே,

இனிதொடர்ந்துவந்து குறைநிறைகளைச்சொல்லுங்கள்..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.