1/2கிலோ கோழி
3 பல்லாரி
2 தக்காளி [பெரியது]
2 உருலைக்கிழங்கு
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
2 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
3 டேபிள்ஸ்பூன் சீரகசோம்புத்தூள்
1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
ஆயில் தேவைக்கேற்ப
பட்டை லவங்கம் பிரிஞ்சிலை
குங்குமப்பூ சிறிதளவு
கொத்தமல்லி
லெமன் ஜூஸ்
ரைன்போ மில்க் கொஞ்சம்
உப்பு
அதன்கூடநறுக்கியவைத்துள்ள பல்லாரி தக்காளிசேர்க்கவும்
அதனுடன் கட்செய்த உருலையையும்சேர்க்கவும்
பின் மசாலாக்களை தண்ணீர்விட்டு கரைத்து அதனுடன் உப்பும் சேர்த்துகலக்கவும்
அதனை 2 நிமிடம் மூடி வேக விடவும்
கோழியை நன்றாக கழுவிவிட்டு உப்பு. பாதி இஞ்சிபூண்டு விழுது குங்குமப்பூ.லெமன் ஜூஸ் சேர்த்து கால்மணிநேரம் ஊறவைக்கவும்
பின்பு நான்ஸ்டிக் ஃபேனில் பொரித்தெடுக்கவும்
அதில் சேர்க்கவும்
மீண்டும் 2 நிமிடம் மைக்ரோஓவனில்வைத்து எடுக்கவும்
அதன்கூட கொஞ்சம் ரைன்போபால் ஊற்றவும்
பின்பு 1 நிமிடம் ஓவனில்வைத்துவிட்டு
கடைசியில் கொத்தமல்லி நறுக்கி போடவும்
இந்த டிஷ் ரைஸ். பரோட்டா. சப்பாத்தி. இடியாப்பம். இதற்கெல்லாம் மிகவும் ஏற்றது.
அன்புடன் மலிக்கா
18 comments:
செஞ்சு பாக்க சொல்றேங்க, நம்ம வீட்டு அம்மணிய...
தமிழ்மணத்துல உங்க ஓட்டையும் போடுங்களேன்...
பிரபாகர்.
அருமையான ரெஸிப்பி.//அதன்கூட கொஞ்சம் ரைன்போபால் ஊற்றவும் //
ரைன் போபால் என்றால் என்ன?விளக்கம் பிளீஸ்?
'கோழி பொறியல் கறி' பொதுவா நல்லாத்தான் இருக்கும்.ஆனா உங்க செய்முறையும்,படமும் நாக்குல உச்சு கொட்ட வைக்குதுங்க.ஏங்க இப்படி என்னை அழ வைக்கறீங்க தோழி???
என்ன இன்றைக்கு கவித்தோழி கறித்தோழியாய்!ஓ..வாரவிடுமுறை.
உண்மையில் நல்லாத்தான் இருக்கும்.இந்த மல்லாரி ஒவ்வொரு முறையும் குழப்பம் மல்லிக்கா.
உங்கள் கோழி சமையல் முறை நல்லா இருக்கு. ஒரு சிறிய தவறு பொறியல் அல்ல பொரியல் என்று வரணும்.
ஏலே.... அண்ணாச்சி ஏய் இங்க பாரு எங்கக்கா எப்பிடியெல்லாம் கலக்குறாங்கனு
பொரிச்ச கோழிக்கறி சூப்பர்தான்.
அட இது நல்ல இருக்கே! இன்ஷா அல்லாஹ் முயற்சி பண்றேன்.. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் ஆனம், பொறிகிறது, பருப்புன்னு வைக்க கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா உண்மையாவே வாய் ஊறுதுங்க.
/செஞ்சு பாக்க சொல்றேங்க, நம்ம வீட்டு அம்மணிய.../
ஓ பேஷா செய்யச்சொல்லுங்க
தமிழ்மணத்துல உங்க ஓட்டையும் போடுங்களேன்...
எனக்கே எனக்கா?
மிக்கநன்றி பிரபாகர் வருகைக்கும் கருத்திற்க்கும்
தொடர்ந்து வாருங்கள்.
பிரபாகர்
/ஸாதிகா said...
அருமையான ரெஸிப்பி.
மிக்க நன்றி
//அதன்கூட கொஞ்சம் ரைன்போபால் ஊற்றவும் //
ரைன் போபால் என்றால் என்ன?விளக்கம் பிளீஸ்..
ரைன்போ பால்னா டின்னில் கிடைக்கும் இங்கு அந்த பாலில் காபி டீ போடுவார்கள், நல்ல திக்காக இருக்கும் சுவையும் சூப்பராக இருக்கும்.
குழம்புவகைகளுக்கு தேய்ங்காய்பாலுக்கு பதிலாக இதைதான் அதிகம் உபயோகப்படுத்துவேன் ஸாதிகா
ஸாதிகா நீங்க எம்ங்கு இருக்கீங்க..
'கோழி பொறியல் கறி' பொதுவா நல்லாத்தான் இருக்கும்.ஆனா உங்க செய்முறையும்,படமும் நாக்குல உச்சு கொட்ட வைக்குதுங்க.ஏங்க இப்படி என்னை அழ வைக்கறீங்க தோழி???
அழாதீங்க தோழா.. வீட்டுக்கு போனதும் அம்மணிக்கிட்டசொல்லி செய்து போடச்சொல்லுங்க..
/ஹேமா said...
என்ன இன்றைக்கு கவித்தோழி கறித்தோழியாய்!ஓ..வாரவிடுமுறை.
உண்மையில் நல்லாத்தான் இருக்கும்.இந்த மல்லாரி ஒவ்வொரு முறையும் குழப்பம் மல்லிக்கா/
கவிதோழி வீட்டில் கறிக்கோழி கூவிடுத்து ஹேமா.
இனி பல்லாரின்னு எழுதாமா வெங்காமுன்னே எழுதுகிறேன் தோழி சரியா! நன்றி ஹேமா
seri enakku oru santhegam...ithelam seiyumpothu yaru photo edukkarathu???assistant yaravathu irukangala???
ஆகா கோழி நான் காலி. இது நமக்கு இல்லை. நன்றி மாலிக்கா.
/Anonymous said...
உங்கள் கோழி சமையல் முறை நல்லா இருக்கு. ஒரு சிறிய தவறு பொறியல் அல்ல பொரியல் என்று வரணும்/
அவசரத்தில் டைப்பண்ணியதில் தவறு வந்துவிட்டது மிக்க நன்றி தோழமையெ திருத்திவிட்டேன்,
முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி Anonymous...
/கருவாச்சி said...
ஏலே.... அண்ணாச்சி ஏய் இங்க பாரு எங்கக்கா எப்பிடியெல்லாம் கலக்குறாங்கனு/
எந்த அண்ணாச்சிய கூப்பிடுறீங்க கருவாச்சி..
கருவாச்சி நான் அக்காவா? அச்சோஓஓஓஓஓஓஒ..
உங்கள் தோழி கிருத்திகா said...
seri enakku oru santhegam...ithelam seiyumpothu yaru photo edukkarathu???assistant yaravathu irukangala???
எல்லாம் நானும் நம்மாளுதான் தோழி.. முதல்வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி.. கிருத்திக்கா.. தொடர்ந்துவாருங்கள்..
/பித்தனின் வாக்கு said...
ஆகா கோழி நான் காலி. இது நமக்கு இல்லை. நன்றி மாலிக்கா./
காலிப்ளவர் செய்துட்டு கூப்பிடுகிறேன் பித்தன்.. சரியா. வருகைக்கும் காலியாகமல் போனதற்க்கும் மிக்க நன்றி...
Post a Comment