அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, November 17, 2009

இடியப்பசோறு



தேவையானவை

ரெடிமேட் இடியப்ப பாக்கட் 1

பெரிய வெங்காயம் 1

தக்காளி பாதி

கருவேப்பில்லை

பட்டை, பிரிஞ்சி இலை

கொத்தமல்லி

உப்பு

ஆயில்

முட்டை

சீரகத்தூள் 1 டீஸ்பூன்





செய்முறை

இடியப்ப பாக்கட்டை 2 நிமிடம் வெண்ணீரில் போட்டு வடித்துவிட்டு
 ஒரு கடாயில் ஆயில் விட்டு அதில் பட்டை பிரிஞ்சி இலைபோட்டு வாசம்வந்ததும் நறுக்கியவெங்காயம் தக்காளி கருவேப்பில்லையையும்போட்டு
வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளரவும் உப்பும் சீரத்தூளும்போட்டுசேர்த்துகிளரவும் அதுவதங்கி வரும்போது வடித்துவைத்துள்ள இடியப்பத்தை அதில் சேர்த்து கிளரவும் எல்லாம்சேர்வதுபோல் கிளரிவிட்டு கொத்தமல்லிதூவி பரிமாறவும்





[5 அல்லது 7 நிமிடத்தில் தயராகிவிடும்]
வீட்டில்சுட்ட இடியப்பத்துலும் 5 எடுத்து அதை தேங்காப்பாலில் நனைத்தும் இதுபோல் செய்யலாம்

17 comments:

க.பாலாசி said...

படத்தையெல்லாம் பார்த்தா நல்லாதானிருக்கு...ம்ம்ம்....ட்ரை பண்ணுவோம்....

பாத்திமா ஜொஹ்ரா said...

I like your all articles,very nice

S.A. நவாஸுதீன் said...

காலைப்பசியார ரொம்ப பிடிக்கும். நல்ல மணம் கூட.

Anonymous said...

அட! ரொம்ப எளிதா செய்துட்டீங்களே

ஹுஸைனம்மா said...

மலிக்கா, இதில சீரகத்தூள் மட்டும்தான் மசாலாவா?
இதுக்கு தொட்டுக்க/ ஊத்திக்க என்ன பண்ணுவீங்க நீங்க?

அன்புடன் மலிக்கா said...

/க.பாலாசி said...
படத்தையெல்லாம் பார்த்தா நல்லாதானிருக்கு...ம்ம்ம்....ட்ரை பண்ணுவோம்/

டிரைப்பண்ணிப்பாருங்க பாலாஜி. சாப்பிட நல்ல டேஸ்டாக இருக்கும்..

அன்புடன் மலிக்கா said...

/பாத்திமா ஜொஹ்ரா said...
I like your all articles,very nice/

தேங்ஸ், பாத்திமா. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா said...

/ S.A. நவாஸுதீன் said...
காலைப்பசியார ரொம்ப பிடிக்கும். நல்ல மணம் கூட./

ஆமாம் நவாஸண்ணா. இது நல்ல மணத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்..

இரவில் சப்பிடக்கூடாதா? சும்மா சும்மா...

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
அட! ரொம்ப எளிதா செய்துட்டீங்களே/

சமையல் செய்யத்தெரிந்துவிட்டாபோதும் நஸியா. எல்லாமே ஈசிதான்.
துபை வந்தாச்சில்ல இனி எல்லாம் எளிதாகிவிடும் ஹ ஹ ..

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
மலிக்கா, இதில சீரகத்தூள் மட்டும்தான் மசாலாவா?
இதுக்கு தொட்டுக்க/ ஊத்திக்க என்ன பண்ணுவீங்க நீங்க?/

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் செய்யமாட்டோம் காரமாக வேண்டுமானால் செய்து மேகிபோல் சாப்பிடலாம்.

வேணூமெண்றால் கறிக்குழம்பு வைத்து ஊத்திக்கொள்ளலாம். சுவையும் சூப்பராக இருக்கும்..

இதில் எங்க ஊர்பக்கம் ஜீனிபோட்டு சாப்பிடுவாங்க பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்...

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா நான் முட்டை ஊத்தி செய்தது இல்லை.செய்து விட்டு சொல்கிறேன்.

malar said...

நீங்களும் ஜலீலாவும் சமையலில் அசத்துங்க .

Malini's Signature said...

ஈசி இடியாப்பம் போல இருக்கே... நல்லா இருக்குங்க.

அன்புடன் மலிக்கா said...

/sarusriraj said...
மலிக்கா நான் முட்டை ஊத்தி செய்தது இல்லை.செய்து விட்டு சொல்கிறேன்.

/செய்து பாருங்கக்கா ரொம்ப சூப்பராக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

/malar said...
நீங்களும் ஜலீலாவும் சமையலில் அசத்துங்க /

ஜலீலாக்காவும் மலிக்காதங்கைக்கும் நல்ல ஒற்றுமைதான் நன்றி மலர்..

அன்புடன் மலிக்கா said...

/ஹர்ஷினி அம்மா said...
ஈசி இடியாப்பம் போல இருக்கே... நல்லா இருக்குங்க/

வாங்க வாங்க ஹர்ஷினி அம்மா. முதல் முறையா வந்திருக்கீங்க, என்ன சாப்பிடுறீங்க.

அடிக்கடிவாங்க..
மிக்க நன்றி...

Jaleela Kamal said...

காலை டிபனுக்கு அருமையான இடியாப்ப சோறு, இதை கீமா சேர்த்தும் செய்வோம், வெஜ்டேபுள்கள் சேர்த்தும் செய்யலாம்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.