அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, December 15, 2009

ஆச்சர்யம்

பார்க்கவே அதிசயமாக இருந்தது மனிதர்கள் எதிலெதில் எப்படியெப்படியெல்லாம் வாழ்க்கிறார்கள்.
என்னிலையிலும் காக்கக்கூடியவன் இறைவன் என்பதால் கல்லான குகைகளுக்குள்ளும் மலைகளுக்குள்ளும் வீடுகளை அமைத்து வாழ்க்கிறார்கள்.

நம்மைவிட மேன்மையானவர்களை கண்டு அதேபோல்வாழ்வேண்டும் என்றெண்ணி உள்ளதையும் பறிகொடுத்துவிடாமல்

நமக்கு கிடைத்த வாழ்க்கையெண்ணி நாள்பொழுதில் நொடிக்கொடி இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.











இது எனக்கு மெயிலில் வந்தது

அன்புடன் மலிக்கா

25 comments:

அண்ணாமலையான் said...

"நம்மைவிட மேன்மையானவர்களை கண்டு அதேபோல்வாழ்வேண்டும் என்றெண்ணி உள்ளதையும் பறிகொடுத்துவிடாமல்" சத்தியமான வார்த்தை..

அது ஒரு கனாக் காலம் said...

//நமக்கு கிடைத்த வாழ்க்கையெண்ணி நாள்பொழுதில் நொடிக்கொடி இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்// Golden words - Thanks to you too.

S.A. நவாஸுதீன் said...

நல்ல கலெக்‌ஷன் நல்ல மொழியுடன் நல்ல பகிர்வு.

கருணையூரான் said...

நல்ல தேடல்.... அழகான தமிழில் தந்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு , நீங்க எப்படி இருக்கிங்க பசங்க நல்லா இருக்காங்களா

விக்னேஷ்வரி said...

ம், நல்லாருக்குங்க.

பித்தனின் வாக்கு said...

நல்ல படங்கள், அற்புதமான கருத்துக்கள். பகிர்தலுக்கு நன்றி மலிக்கா(இப்படி அழைக்கலாமா? நீங்கள் பெரியவரா,அல்லது என்னை வீட சிறியவரா எனத் தெரியாது).

அன்புடன் மலிக்கா said...

பித்தனின் வாக்கு said...
நல்ல படங்கள், அற்புதமான கருத்துக்கள். பகிர்தலுக்கு நன்றி மலிக்கா(இப்படி அழைக்கலாமா? நீங்கள் பெரியவரா,அல்லது என்னை வீட சிறியவரா எனத் தெரியாது).

மிக்க நன்றி பித்தனின் வாக்கு.
மலிக்கான்னே அழைக்கலாம் நான் உங்களைவிட 12 வயது. சிறியவள்..

எம்.எம்.அப்துல்லா said...

இறைவனுக்கு நன்றி.

divyahari said...

nice one mam..

ஆரூரன் விசுவநாதன் said...

பிரியம் சமைகிற கூடுகளை பார்த்ததும் ஆச்சரியம் ஒருபுறம், மகிழ்ச்சி ஒரு புறம்.......

படங்கள் அருமை.....

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையான் said...
"நம்மைவிட மேன்மையானவர்களை கண்டு அதேபோல்வாழ்வேண்டும் என்றெண்ணி உள்ளதையும் பறிகொடுத்துவிடாமல்" சத்தியமான வார்த்தை../

மிக்க நன்றி அண்ணாமலையாரே,,,

அன்புடன் மலிக்கா said...

/அது ஒரு கனாக் காலம் said...
//நமக்கு கிடைத்த வாழ்க்கையெண்ணி நாள்பொழுதில் நொடிக்கொடி இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்// Golden words - Thanks to you too./

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.. கனாக்காலம்..

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
நல்ல கலெக்‌ஷன் நல்ல மொழியுடன் நல்ல பகிர்வு./

மிக்க நன்றி நவாஸண்ணா..

அன்புடன் மலிக்கா said...

/கருணையூரான் said...
நல்ல தேடல்.... அழகான தமிழில் தந்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்/

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கருணையூரான்..

அன்புடன் மலிக்கா said...

sarusriraj said...
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு , நீங்க எப்படி இருக்கிங்க பசங்க நல்லா இருக்காங்களா//

எல்லாரும் நலம் சாருக்கா. நீங்க சுகமா, பசங்க அண்ணாத்தே, எப்படியிருக்காங்க..


விக்னேஷ்வரி said...
ம், நல்லாருக்குங்க.

மிக்க நன்றி விக்னேஸ்வரி..

அன்புடன் மலிக்கா said...

எம்.எம்.அப்துல்லா said...
இறைவனுக்கு நன்றி.

நிச்சியம் அவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும் அற்புதபடைப்புகளை தந்த ஆச்சர்யத்தில் மூழ்கவைப்பவன் இறைவந்தானே.. நன்றி அப்துல்லா..


divyahari said...
nice one mam..

அன்புடன் மலிக்கா said...

/divyahari said...
nice one mam../


மிக்க நன்றி திவ்யாஹரி

அன்புடன் மலிக்கா said...

/ஆரூரன் விசுவநாதன் said...
பிரியம் சமைகிற கூடுகளை பார்த்ததும் ஆச்சரியம் ஒருபுறம், மகிழ்ச்சி ஒரு புறம்.......

படங்கள் அருமை.....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. விசு...

Jaleela Kamal said...

ரொம்ப ஆச்சரியாமாகவும் அபூர்வமாகவும் இருக்கு மலிக்கா/

Vikis Kitchen said...

Very nice thoughts Malikka.

இனியன் பாலாஜி said...

பிடிக்காமல் எனன மல்லிகா ஜி

ஒரு உண்மையை சொல்கிறேன். இது வரை நான் பார்த்த அத்தனை ப்ளாக்கிலும்
எனக்கு மிகவும் பிடித்தது உங்களுடையதுதான்.
அதுவும் இன்னும் நான் எதுவும் படிக்காமலேயெ. ஏன் தெரியுமா?

ஏன் என்று வேறொரு பின்னூட்டத்தில் கூறுகிறேன்.
சற்று யோசியுங்களேன்
வாழ்த்துக்கள்
ந் ண்பன்
இனியன் பாலாஜி

அன்புடன் மலிக்கா said...

வாங்க பாலாஜி, ஜீ அவர்களே.
தாங்களின் முதல்வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி தொடர்ந்து வாருங்கள்..

என்னை யோசிக்கவைச்சிட்டீங்களே அம்மாடியோ சீக்கிரம் சொல்லிடுங்க
இல்லன்னா !!!!!!!!! குழம்பிடும். ஹ ஹா

அன்பான வேண்டுகோள் மற்றுமுள்ள என் இரு தளங்களையும்
http://niroodai.blogspot.com/

http://fmalikka.blogspot.com/


பார்த்து தங்களின் கருத்துக்களைச்சொல்லவும்.
மிக்க நன்றி...

இனியன் பாலாஜி said...

ஒன்றுமில்லை மல்லிஜி
." இறைவனை நேசி இன்பம் பெறுவாய்" என்ற உங்களது வாசகம் தான்
இதை பார்த்ததும் என் கண்களில் நீ ர் வந்து விட்டது.
இறைவனிடம் இத்தனை நேசமா?
யாருக்கெல்லாம் இறைவனை மிகவும் பிடிக்குமோ
அவர்களை யெல்லாம் எனக்கு
இறைவனை காட்டிலும் மிகவும் பிடிக்கும்.துன்பம் வரும் நேரத்தில் மட்டும் இறைவனை

நினைக்காமல் இன்பம் வரும் நேரத்திலும் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்க‌
வேண்டும் / என்று கபீர் தாசர் கூறுகிறார்.

நான் ஒரு ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன். ஆயினும்
எல்லா புனித மத நூல்களிலும் இறைவனை பற்றி என்ன
சொல்லியிருக்கிறார்கள்என்று எனது சிறு வயதிலிருந்தே
படிப்பது வழக்கம். ஒரு ஹதீஸில் எப்போதோ படித்த ஞாபகம்.
நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு பெரியார் வந்து கேட்கிறார்
"நம்முடைய எந்த துவா அல்லாவை சேருகிறது என்பதை எப்படி தெரிந்து
கொள்வது.? "என்று. அதற்கு நம் மதிப்பிற்குரிய நபிகள் அவர்கள் கூறுகிறார்கள்.

"எந்த துவா செய்யும்போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ ,
எந்த துவா செய்யும் போது நம் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதோ
அந்த துவா இறைவனை சென்று சேர்கிறது "என்கிறார்
இதில் பிழையேதும் இருந்தால் மன்னித்து விடுங்கள். எப்போதோ படித்தது.
உங்களை மாதிரியான அன்பர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜாதி மதஙகளுக்கு
அப்பாற்பட்டு இந்த உலகில்
வாழும் எல்லோருக்காகவும் எல்லாம் வல்லஇறைவன் அல்லாவிடம்
பிரார்த்திதுக் கொள்ளுங்கள்
எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். ஆனால் எனக்கு


எப்படி தொடங்குவது படஙகளை எப்படி இணைப்பது என்றெல்லாம் தெரியவில்லை

சென்னையில் யாராவது சில அன்பர்கள் சொல்லிக் கொடுத்தால் நாளையே
ஆரம்பித்து விடுவேன்சரி நீண்ட பின்னூட்டதிற்கு மன்னிக்கவும் பிறகு சந்திப்போம்.
தங்களின் படைப்புக்ளை யெல்லாம் படித்துவிட்டு விமர்சிக்கின்றேன்
நன்றி
இனியன் பாலாஜி.

ஹேமா said...

மல்லிக்கா எங்கே இது?கறையான் கூடுகள்போல அழகாயிருக்கிறது.
ஆபத்திருக்குமோ இல்லையோ சுவாத்தியமாயிருக்கும்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.