முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக்கொள்ளவும்
அதன் மேல் அளவுஜாக்கெட்டின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் தையலுக்கு விட்டு வெட்டவும்
வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்
மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்
அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு
அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,
வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்
அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ....
இதுகழுத்துக்கு.jpg)
இது கைகளுக்கு
தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்
தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்
முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்
அதேபோல் கைகளில் முன்பக்கத்தைவிட பின்பக்க அக்குள்பக்கம் சற்று பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
இப்போது வெட்டிய டிசைன்
இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு
கிராசாக வெட்டவும்
அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்
இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு
இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்
இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்
இதை நாம் தைய்பதில்தான் இருக்கிறது அதன் அழகே!!!!!
இது ஜாக்கட்டை வைத்து அளவெடுத்து தைக்கும் முறை
இதில் சந்தேகங்களிருந்தால் கேட்கவும்
அன்புடன் மலிக்கா