அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, March 17, 2010

ஸ்பெசல் தைரிய சாதம்


என்னடா இது தைரிய சாதமுன்னு போட்டுயிருக்கேன்னு ஓடிவந்தீகளா
ஹா ஹா
இது

முந்திரி சோசேஜ் சாதம்

தேவையானவைகள்

பாஸ்மதி அரிசி 3  கப்
கீ [நெய்] தேவையான அளவு
தக்காளி 1 சிறியது
வெங்காயம் 1
சிக்கன் சோசேஜ் 1 பாக்கட்
[இதை சிக்கன்ஃபிராங், ஹாட்dடாக் என ஏதேதோ சொல்லுராக மொத்ததில் சிக்கன் அரைத்து பாக்கட்டில் அவ்வளவுதான்]
இஞ்சிபூண்டு 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
ப, மிளகாய் 3
முந்திரி 10
ஆயில், உப்பு. தேவையான அளவு
கொ.மல்லி அலங்கரிக்க.
பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளிக்க.

[தக்காளி,  ப,மிளகாய் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும் 
முந்திரியை நைசாக அரைத்துக்கொள்ளவும்]

அரிசியை கழுவிவிட்டு, 10 நிமிடம் ஜில்தண்ணீரில் ஊறவைக்கவும் .
அடுப்பில் சட்டிவைத்து காய்ந்ததும் நெய்விட்டு பட்டை, லவங்கம்,
பிரிஞ்சி இலை போட்டு தாளித்து. பின்பு வெட்டிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளி ப மிளகாய்.அதில்போட்டு வாசனைவரும்வரை கிளரவும்.
வாசனைவந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்டைபோட்டுகிளரவும்
அதுவும் வாசனைவந்ததும். 1 க்கு 1.1/2 என தண்ணீர்வைத்து அதனுடன் அரைத்தமுந்திரியையும்சேர்த்து தாளித்துடன் ஊற்றவும். உப்புப்போட்டு மூடிவைத்து சிறுகொதிவந்ததும் ஊறிய அரிசியை அதில் போட்டு மூடவும் அடுப்பை லேசாக வைக்கவும்.

10 ,15 நிமிடம்தான் வெந்துவிடும் அதற்குமுன்
சிக்கன் சோசேஜை வட்டவட்டமாக கட்செய்து இஞ்சிபூண்டு மிளகாய்தூள் உப்புபோட்டு அதை ஆயிலில் பொரித்தெடுக்கொள்ளவும்.

அதற்குள் மணமணக்க சாதம் வெந்துவிடும் அதை கிளறிவிட்டு பாதி சாதத்தை அள்ளிக்கொண்டு பொரித்துவைத்திருக்கும் சோசேஜை
இரண்டு அடுக்கு மூன்று அடுகுகளாக போடவும்கடைசியாக கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி அதன்மேல்தூவி [இன்னும் சத்துக்கு 10 முந்திரியையும் வறுத்து அதன்மேல் தூவலாம்]ஆவிபறக்க டைனிங் டேபிளுக்கு கொண்டுவரவும்.
இதற்கு சைடிஸாக வறுத்தரைத்த மட்டன் கறிகுழம்பு ம்ம்ம் செம டேஸ்டாக இருக்கும் ஒருபுடி பிடித்துவிட்டு 2 மணிநேரம்கழித்து சின்னக்குட்டிதூக்கம் போடுங்க.
சீக்கிரம் பசிக்கும் மீண்டும் சாப்பிட ஹாஹாஹா

[டிஸ்கி]  ஸ்டெப்பென் ஸ்டெப்பாக இன்றைக்கு எடுக்க முடியவில்லைங்கோ
மறுநாள் செய்தா இதில் இணைச்சிவிடுறேங்கோ]

அன்புடன் மலிக்கா

18 comments:

ப.கந்தசாமி said...

அது சரி மலிக்கா, சாப்டுட்டு ரெண்டு மணி நேரம் எப்படி முழிச்சுட்டு இருக்கிறது. அந்த நேரம்தான் சம்மா தூக்கம் சொக்கும்! :-)

Menaga Sathia said...

நல்லாயிருக்கு மலிக்கா.இதில் சாண்ட்விச் தான் செய்திருக்கேன்.

ஸாதிகா said...

வாவ்..சாசேஜ் சேர்த்து சாதம் ஆஹா..புது முயற்சிதான்.கல்யாண நாள் ஸ்பெஷலோ?மலிக்காவுக்கு என் அன்பான திருமணதின வாழ்த்துக்களும்,அன்பான துஆக்களும்.

ஜெய்லானி said...

///ம்ம்ம் செம டேஸ்டாக இருக்கும் ஒருபுடி பிடித்துவிட்டு 2 மணிநேரம்கழித்து சின்னக்குட்டிதூக்கம் போடுங்க.///

வர்ணனை யப்பா என்ன அழகு!!!

சசிகுமார் said...

//சின்னக்குட்டிதூக்கம் போடுங்க//

முதலில் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடட்டுமா, தூக்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Malar Gandhi said...

Oi, sariyaana vaalu neengha...I really thought something to do with thairiyam' you know. Comeon, you lured me:( he he.

Although I am a big chicken freak, never had this sausage, is it good? The fancy pack somehow fails to tempt me. Now after seeing ur dish, gonna try this for sure:)Will pack some chk hot-dogs home:):)

'பரிவை' சே.குமார் said...

புடது முயற்சிதான். நாளை வார விடுமுறைதான். ஒரு கை பார்க்கலாம்

'பரிவை' சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

Anonymous said...

பெரிய இவளாட்டம் பேசறாளேனு நினைக்காதீர்கள் பிளீஸ். கொஞ்சம் இதை படியுங்களேன்.http://reap-and-quip.blogspot.com/2010/03/recipe-blogs.html

ஆங்கில சமயல் புளொக்கை விட தரமானதான படங்களை எங்க ஆளுங்கள் குடுக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியதே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனக்கு.

அன்புடன் மலிக்கா said...

Mrs.Menagasathia said...
நல்லாயிருக்கு மலிக்கா.இதில் சாண்ட்விச் தான் செய்திருக்கேன்.//

இதையும் செய்துபாருங்க மேனகா..

அன்புடன் மலிக்கா said...

/Dr.P.Kandaswamy said...
அது சரி மலிக்கா, சாப்டுட்டு ரெண்டு மணி நேரம் எப்படி முழிச்சுட்டு இருக்கிறது. அந்த நேரம்தான் சம்மா தூக்கம் சொக்கும்! :-)//

அதுக்குத்தான் 2 மணிநேரம்கழித்து தூங்கச்சொன்னேன் டாக்டர். சாப்பிட்டதும் தூங்கினா
அப்புறம் தொப்பை விழுந்ததுன்னா என்னக்கேக்கக்கூடாது சரியா:-}

அன்புடன் மலிக்கா said...

/ஸாதிகா said...
வாவ்..சாசேஜ் சேர்த்து சாதம் ஆஹா..புது முயற்சிதான்.கல்யாண நாள் ஸ்பெஷலோ?மலிக்காவுக்கு என் அன்பான திருமணதின வாழ்த்துக்களும்,அன்பான துஆக்களும்/

புதுசா செய்வோமேன்னுதான்க்கா. துஆக்காளுக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
///ம்ம்ம் செம டேஸ்டாக இருக்கும் ஒருபுடி பிடித்துவிட்டு 2 மணிநேரம்கழித்து சின்னக்குட்டிதூக்கம் போடுங்க.///

வர்ணனை யப்பா என்ன அழகு!!!/

வர்ணையையோ சொன்னா கொஞ்சம் அழகுகூடுமுன்னுதான் எப்புடி..

அன்புடன் மலிக்கா said...

சசிகுமார் said...
//சின்னக்குட்டிதூக்கம் போடுங்க//

முதலில் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடட்டுமா, தூக்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

சாப்பாட்டுக்குமுன்னும் பின்னும் தூக்கம்போட்டாலும் தப்பில்லை சசி.
உடம்பையும் கவனிக்கோனுமுல்ல..

வாழ்த்துக்கு மிக்க நன்றி சசி..

அன்புடன் மலிக்கா said...

Malar Gandhi said...
Oi, sariyaana vaalu neengha...I really thought something to do with thairiyam' you know. Comeon, you lured me:( he he.//

அச்சோ எனக்கு வால் இருக்குன்னு தெரிஞ்சிபோச்சா மலர் போச்சுடா..


Although I am a big chicken freak, never had this sausage, is it good? The fancy pack somehow fails to tempt me. Now after seeing ur dish, gonna try this for sure:)Will pack some chk hot-dogs home:):)//

செய்து பார்துவிட்டு சொல்லுங்கோ மலர் முதல் வருகைக்கும் வாலான கருதுக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
புடது முயற்சிதான். நாளை வார விடுமுறைதான். ஒரு கை பார்க்கலாம்

என்னது ஒருகைய்ய பாக்குறதா குமார்
வாரவிடுமுறைன்னுவேற சொல்லுதீக பாத்து பாத்து. நன்றி குமார்

அன்புடன் மலிக்கா said...

அனாமிகா துவாரகன் said...
பெரிய இவளாட்டம் பேசறாளேனு நினைக்காதீர்கள் பிளீஸ். கொஞ்சம் இதை படியுங்களேன்.http://reap-and-quip.blogspot.com/2010/03/recipe-blogs.html

ஆங்கில சமயல் புளொக்கை விட தரமானதான படங்களை எங்க ஆளுங்கள் குடுக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியதே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனக்கு//

பாத்துட்டம் பின்னூட்டம் போட்டுடம்
நன்றி அனாமிகா..

Jaleela Kamal said...

சாசேஜ் என்றாலே பிடிக்காத பிள்ளைகள் கிடையாது.

ஹா ஹா ஜி தண்ணியில ஊறவைக்கனும்.

அப இத சாப்பிட்டா ரொமப் தைரியம் வருமா? > ? ஹிஹி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.