அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, March 21, 2010

அவரைக்காயிலும் வைத்தியம் ..



கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய்.


மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருவது அவரை.
புரதம், சுண்ணாம்புசத்து,இரும்பு,வைட்டமின்சத்துக்கள் ஒருங்கே உள்ளன.
மிக எளிதில் செரிமானமாகக்கூடியது அவரை
பலவீனமான குடல் உடையவர்களும் இரவு நேரத்திலும்
பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.
முற்றிய அவரையயைவிட பிஞ்சு அவரை நல்லது.

வெண்ணிற அவரைகாய் வாயு, பித்தம்,இவற்றைக்கண்டிக்கும். உள்ளுறுப்புக்களின் அலர்ஜியைப்போக்கும்:
எரிச்சலை அடக்கும்.

நீரளிவுநோய்,பேதித்தொல்லை,அடிக்கடி தலைநோய்வருதல், ஜீரணக்கோளறாரு.

சீதபேதி,இவற்றிற்கு அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பலனுண்டு.


அஸ்ஸாமில் காதுவலிக்கும், தொண்டைவலிக்கும். அவரையின் சாற்றை பயன்படுத்துகிறார்கள். [யாரும் ரொம்பப்பேசி காதில் ரத்தம் வந்தாலும் இதை ஊற்றலாமோ ஆராயனும்]]

இரத்தக்கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது
அண்மைய கண்டுப்பிடிப்பாம்.[

இரத்தத்தை கொதிக்கவிடாதிங்கோ அப்புறம் கொதித்தபடியே இருபீர்கள் இது நம்ம கண்டுபிடிப்பு]

அவரையைப்பற்றிய பழைய வைத்திய நூல்குறிப்பு கிடைத்துள்ளது.
”கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும்
பொங்குதிரி தோடாதோர் புண்சுரத்தோர்-
கண்முதிரைப் பில்லநோய்க்காரர்களுக்குங்
காழுறையா வண்முதிரைப் பிஞ்சாம் விதி.”//

[விளக்கிடுச்சா, விளங்காட்டி என்ன குத்தம் சொல்லக்கூடாது ஓகே]




படித்தை பதிந்திருக்கிறேன் - நீங்களும் தெரிந்துகொண்டு பயன்பெறவே இதைபதிக்கிறேன்.

நொடியில் அவரைக்கூட்டு 


//இதை அழகாய் நறுக்கி சிறியவெங்காயம் கடுகு கருவேப்பில்லை உளுந்துபோட்டு கொஞ்சம் ஆயில்விட்டு அதில் தாளித்து
நறுக்கிய அவரையை அதில்போட்டு சிறு உப்பிட்டு லேசாய் தண்ணீர் தெளித்து 3 நிமிடம் மூடி பின் திறந்து ஒருகிண்டுகிண்டி [வேணுமுன்னா தேங்காய்பூபோட்டு] அப்படியே சிறிய
[இல்லன்னா பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய] பவுலில் ரெடியான அவரைகூட்டைஎடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போட்டு[ இல்லன்னா கையாலே] ரசித்து ரசித்து அள்ளி துண்ணா எப்படியிருக்கும்..


என்ன இப்போதே அவரைக்காய் வாங்க புறப்பட்டதுபோல் தெரிகிறது.
எப்படியோ அவரைக்காய் துண்ணாசரிதான்..


அன்புடன் மலிக்கா









21 comments:

திவாகர் said...

ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..

சூப்பர் தகவல்

ஜெய்லானி said...

அவரைக்காயில் இரண்டு இருக்கே!! படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க.

ப.கந்தசாமி said...

ஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.

நல்ல தகவல்.

அண்ணாமலையான் said...

நல்ல டிப்ஸ்தான்

பிரோஷா said...

நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா
இதுபோல்.

அன்புடன் மலிக்கா said...

திவாகர் said...
ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..//

அப்படியே கொஞ்சம் மெயில் ஐடி அனுப்பிவச்சா சொல்லமாட்டமுல்ல திவாகர்..

/சூப்பர் தகவல்//

நன்றி நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
அவரைக்காயில் இரண்டு இருக்கே!! படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க/

டாக்டர் சொல்வதுபோல் பலரகமிருக்கு அவரையில்.

எல்லாத்திலும் இளம்பிஞ்சு அவரைகாயில் இதுபோல் செய்யலாம்.

அன்புடன் மலிக்கா said...

/படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய்/

கூகிளில் தேடியபோது பளிச்சென்று இந்த அவரை கண்ணில் பட்டது ..

அன்புடன் மலிக்கா said...

/Dr.P.Kandaswamy said...
ஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.

நல்ல தகவல்/

மிக்க நன்றி டாக்டர். இனி தைரியமாக டிப்ஸ்கள்போடலாம் நம்ம டாக்டர்தான் இருக்காங்கல்ல அப்பாடா
சந்தேகமுன்னா அவங்ககிட்ட கேட்டுக்கல்லாம் இல்லையா டாக்டர்..

அன்புடன் மலிக்கா said...

/அண்ணாமலையான் said...
நல்ல டிப்ஸ்தான்/

மிக்க நன்றி அண்ணாமலையாரே...

அன்புடன் மலிக்கா said...

/பிரோஷா said...
நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா
இதுபோல்//

ஆம்மாம்பா மொத்தத்தில் வைத்தியத்திற்க்கு பிஞ்சாக இருக்கனுமாம் அவரைக்காய்..

Jaleela Kamal said...

அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.

நாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்

காஞ்சி முரளி said...

நீரோடையில் "அவரைக்காயிலும் வைத்தியம்"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்....! எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும்? ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..?) .
அவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றியும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).

நல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த "அவரைக்காயிலும் வைத்தியம்" ...

வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி......

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.

நாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்/

ஆமாக்கா அவரைக்காய்கூட [செம்மீன்] இரால் சேர்த்துகுழம்புவைத்தால் ம்ம்ம்ம்ம்

நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
நீரோடையில் "அவரைக்காயிலும் வைத்தியம்"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்....! எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும்? ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..?) .
அவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றியும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).//

”கலைச்சாரல் யுனிவர்சிட்டி” முரளி
இப்போதுதான் முதலாம் ஆண்டு
அறுவை, டெஸ்ட், எல்லாம் முதலில் மத்தவங்களிடம் செய்துவிட்டு தானே முழு டாக்டராக வெளிவரனும் அதான்
தொடங்கியிருக்கேன் டெஸ்டுகளைஹா ஹா ஹா..

உங்க:பாதியிடம்: சமைத்துதரச்சொல்லுங்க இல்லன்னா பரயில்லை தாளாரமா நீங்க ட்ரைப்பண்ணுங்க ஒருகை பாத்துரலாம்.

//நல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த "அவரைக்காயிலும் வைத்தியம்" ...

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் அன்பானகருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி முரளி

prabhadamu said...

நல்ல பதிவு மல்லிகா. நானும் அடுத்து இதை போடலாம் என்று தேடி டைப்பன்னி வெச்சு இருக்கேன்.


நல்ல தகவல் தோழி. வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள பதிவு மல்லிகா , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு உங்கள் குறிப்பு அவரக்காய் உடன் சிறிது சிறு பருப்பும் சேர்த்து பொரியல் செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்

Menaga Sathia said...

நல்ல பயனுள்ள பதிவு!!

Dr. Srjith. said...

சமையல் முறையிலும் வைத்தியமா... பயனுள்ள தகவல்கள்.

தாராபுரத்தான் said...

இன்னைக்கு எங்க வீட்டிலே அவரைக்காய் பொரியல்...சூப்பர்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.