இவருக்கு வரைவதும்.கிராஃப்ட் செய்வதும் ரொம்பப்பிடிக்கும். எதையும் பார்த்த நிமிசத்தில் அதைபோலவே வரைந்துவிடனும்.
முயற்ச்சி செய்து வெற்றியும் பெறுவார்.
அப்பப்ப அவர் வரைவதை கிளிக் செய்வது என் வேலை. அப்படி எடுத்த போட்டோக்களில் சில.
இவரின் குறும்பு ரொம்ப பிடிக்கும்.
இரவில் எப்போதும் உறங்குமுன் மூன்று முத்தம் கொடுப்பதும் பெறுவது வழக்கம் என்னிடம். கொஞ்சநேரம்
கதை சொல்வேன் ஆன்மீகம் ரொம்ப பிடிக்கும் எல்லாவற்றையும்கேட்டு கேட்டுத்தெரிந்துகொள்வதில் ஆர்வம்அதிகம்.
அப்படி போனவாரம் கதைசொல்லும்போது,இரவு மணி 11, லேட்டாயிடுச்சி.தூங்கு என்றேன். சரி சரி முத்தம் தாங்க மம்மி [அம்மான்னு சொல்லச்சொன்னா அது பெரியவனா போனதும் இப்ப மம்மிதான்]
நல்லபிள்ளையா நடந்துகிட்டாதான். லீவ் விட்டாச்சி நிறைய நேரம் விளையடாமல் டைப்பிங் ஸ்பீட் கத்துக்கோ மற்றதிலும் கவனம் செலுத்து நல்லபிள்ளையா நடந்துகிட்டா நிறைய முத்தம் தருவேன் என்றேன்.
உடனே சட்டென எழுந்து ஸ்டைலாக நடந்துவிட்டு திரும்பிப்பார்த்து என்ன மம்மி சூப்பராக நடந்தேனா என்று சொன்னாரே பார்க்கனும். என்னத்தச்சொல்ல இக்காலத்து பிள்ளைங்கள ரொம்பவே ஸ்மார்ட்டா இருக்குதுங்க. அப்படியே அள்ளியணைத்து முத்துமிட்டுவிட்டு படுக்கச்சென்றேன்.
சொன்னதையே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்றேன். [அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லை நம்ம
பெற்றபிள்ளையின் அறிவுத்தளத்தைக்கண்டு..]எதவும் புதுசா முயற்சி செய்துவிட்டால்
அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எப்படி நான் என் அறிவுத்தளத்தை வளர்த்துக்கொண்டேன்னு..
சொல்வது..இன்னும் இருக்கு அப்பப சொல்கிறேன்..
அன்புடன் மலிக்கா
35 comments:
அன்பு மகனின் ஆர்ட் அருமை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
அழகு நடை போட்டு உங்களைக் கவிழ்த்து விட்டாரா:)))?
இந்த அறிவு (பார்ததும் வரையும்)சயன்ஸ் குருப்பில் சேரும்பொது நிறைய உதவும். அதில்தான் வரையக்கூடிய நான்கு சப்ஜெக்ட்+மார்க்ஸ் உண்டு. வாழ்த்துக்கள்
போட்டோக்கள அழகா, தெளிவா இருக்கு,
அப்படியே கலர், கருப்பு வெள்ளை புகை படத்தையும் கொடுத்து வரைய பழக்குங்கள். வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
//ராமலக்ஷ்மி said...
அன்பு மகனின் ஆர்ட் அருமை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
அழகு நடை போட்டு உங்களைக் கவிழ்த்து விட்டாரா:)))?//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிமேடம்.
அதேயேன் கேட்டிங்க கவுந்துபோயிட்டேன் கலக்கிட்டார் !
வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி மேடம்
//ஜெய்லானி said...
இந்த அறிவு (பார்ததும் வரையும்)சயன்ஸ் குருப்பில் சேரும்பொது நிறைய உதவும். அதில்தான் வரையக்கூடிய நான்கு சப்ஜெக்ட்+மார்க்ஸ் உண்டு. வாழ்த்துக்கள்//
ஆமாம் ஜெய்லானி. பார்த்தும் சரி பார்க்காமலும் சரி வரைவதை பலகிக்கொண்டுவருகிறார்.
மிக்க மகிழ்ழ்சி அருமையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்..
ஜெய்லானி said...
போட்டோக்கள அழகா, தெளிவா இருக்கு,//
மலிக்கா உனக்கு சபாஷ் போட்டுக்கோ
தெளிவா சொல்லிட்டாங்க நீ ஒரு நல்ல கேமாரா உனன் என்று ஹா ஹா ஹா ஆ
/அப்படியே கலர், கருப்பு வெள்ளை புகை படத்தையும் கொடுத்து வரைய பழக்குங்கள். வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!//
இன்ஷாஅல்லாஹ் செய்யச்சொல்கிறேன் ஜெய்லானி.
மிக்க நன்றி..
மலிக்கா மஹ்ரூப்புக்கு வாழ்த்துகள்.
சூப்பரா அம்மா மாதிரியே வரைவரா
என் பெயரை சொல்லி அவருக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுஙக்
சேம் பின்ச், நேற்று தான் என் பையனும் என்ன உங்கள் சமையலே போடுறீக்னக் ,நான் வரைந்த டிராயிங்கும் நெட்டில் போடுக்னக்ல் என்றான்.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முகமது மரூஃப்புக்கு வாழ்த்துக்கள்.
நல்ல திறமை.. அவருக்கு என் வாழ்த்துக்கள்..
"புலிக்கு பிறந்தது பூனையாகாது..!
'முகமது மரூஃப்'
தங்கள் வார்ப்பல்லவா...!
தங்கள் வளர்ப்பல்லவா....!
புகழோடு
பல சாதனை படைத்திட...
அவருக்கு வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி........
படங்கள் அனைத்தும் அருமை.. உங்களுடைய அன்பு மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. என்னுடைய வலைப்பூ எனக்கு ஓபன் ஆகும் போது நல்லா இருக்கு மேடம்.. நீங்கள் சொல்லிய பிரச்சனையை இன்னும் ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்..உங்களுக்கு ஏதாவது ஐடியா தெரிந்தால் சொல்லவும். என் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. ஸ்டீபன்(நாடோடி)
art superb ...!
/Jaleela said...
மலிக்கா மஹ்ரூப்புக்கு வாழ்த்துகள்.
சூப்பரா அம்மா மாதிரியே வரைவரா
என் பெயரை சொல்லி அவருக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுஙக்//
உம்ஹூம் நீங்கதான் வாங்கிக்கொடுக்கனும் இப்படியா ஒரு பெரியம்மா சொல்லுறது ஹா ஹா ஹா. வாழ்த்துக்கு மகிழ்ச்சிக்கா.
//சேம் பின்ச், நேற்று தான் என் பையனும் என்ன உங்கள் சமையலே போடுறீக்னக் ,நான் வரைந்த டிராயிங்கும் நெட்டில் போடுக்னக்ல் என்றான்//
சொல்லப்போனால் மரூஃபுக்காகத்தான் இந்த கலைச்சாரலே ஆரம்பித்தேன். அவரின் சின்ன குறும்புகளோடு அவரின் இதுபோன்ற ஆர்ட் அண்ட் கிராஃப்டை போடவும் இடையிடையே நாமளும் புகுந்துக்கொள்ளலாமேன்னு.
பேஷா போடுங்கக்கா. அவர்களுக்கும் ஊக்கம் கொடுப்பதுபோல் இருக்கும்..
//மன்னார்குடி said...
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முகமது மரூஃப்புக்கு வாழ்த்துக்கள்//
வாங்க மன்னார்குடி வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
படங்கள் அழகாக வரைந்திருக்கிறார். மஹ்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்
அவன் கைவண்ணமும் அவனும் அழகோ அழகு ..மேலும் ஊக்கம் கொடுத்து வளர்த்து விடுங்கள்.
உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்...படங்கள் எல்லாம் அருமை...அவருடை திறமைக்கு அனனவரும் ஊக்கம் அளிப்போம்...
மஹ்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்!!படங்கள் அழகாயிருக்கு....
மரூப்பிற்கு வாழ்த்துக்கள் நல்லா வரைந்து இருக்காப்ல , ஸ்கூல் லீவ் விட்டாச்சா , இங்கு நாளை தான் தேர்வு ஆரம்பம்.
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர் - குறள்.
குழைந்தைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர் - குறள்.
அன்பு மகனின் ஆர்ட் அருமை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
மகனுக்கு வாழ்த்துக்கள்.மாஷாஅல்லாஹ்
திவ்யாஹரி said...
நல்ல திறமை.. அவருக்கு என் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி. திவ்யா..
//நாடோடி said...
படங்கள் அனைத்தும் அருமை.. உங்களுடைய அன்பு மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. என்னுடைய வலைப்பூ எனக்கு ஓபன் ஆகும் போது நல்லா இருக்கு மேடம்.. நீங்கள் சொல்லிய பிரச்சனையை இன்னும் ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்..உங்களுக்கு ஏதாவது ஐடியா தெரிந்தால் சொல்லவும். என் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. ஸ்டீபன்(நாடோடி//
மிக்க நன்றி ஸ்டீபன் உங்கள் தளத்தில் சொல்லியிருக்கேன் அதேபோல் செய்துபாருங்கள்.
Kanchi Murali said...
"புலிக்கு பிறந்தது பூனையாகாது..!//
பெண்புலியா அச்சோ சொல்லும்போதே பயமாயிருக்கு.
பாவம்நான் பூன்னுல்ல நினைத்திருக்கேன் புலியா..
/'முகமது மரூஃப்'
தங்கள் வார்ப்பல்லவா...!
தங்கள் வளர்ப்பல்லவா....!
புகழோடு
பல சாதனை படைத்திட...
அவருக்கு வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி........//
நிச்சியமாக பெரியவர்களின் ஆசியும் ஊக்கமும் அவருகு வேண்டும் தாங்களின் வாழ்த்தும் ஆசியும் இறைவன் ஏற்பானாக.
நன்றி முரளி.
Kanchi Murali said...
art superb ...!
தேங்க்ஸ்
kavisiva said...
படங்கள் அழகாக வரைந்திருக்கிறார். மஹ்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி கவி வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
நிலாமதி said...
அவன் கைவண்ணமும் அவனும் அழகோ அழகு ..மேலும் ஊக்கம் கொடுத்து வளர்த்து விடுங்கள்..
நிலா எப்படியிருக்கிங்க குணமாயிடுச்சா அண்ணாவுக்கு. தங்கை எப்படியிருக்காங்க.
தாங்களீன் ஊக்கமான கருத்துக்கு மிக்க நன்றி நிலா..
Geetha Achal said...
உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்...படங்கள் எல்லாம் அருமை...அவருடை திறமைக்கு அனனவரும் ஊக்கம் அளிப்போம்.../
இத இதத்தான் எதிர்பார்க்கிறேன் கீத்து.
அவருடைய முயர்ச்சிக்கு ஊக்கம்கொடுக்க கொடுக்க இன்னும் முன்னேறனும் என்ற தன்னைம்பிக்கை வரும்.
மிக்க நன்றி கீதா..
Mrs.Menagasathia said...
மஹ்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்!!படங்கள் அழகாயிருக்கு....//
மிக்க நன்றி மேனகா. வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
sarusriraj said...
மரூப்பிற்கு வாழ்த்துக்கள் நல்லா வரைந்து இருக்காப்ல , ஸ்கூல் லீவ் விட்டாச்சா , இங்கு நாளை தான் தேர்வு ஆரம்பம்.//
ஆமாம் சாரூக்கா லீவ் 20 நாளைக்குதான் வரும் ஏப்ரல் 11 ஓப்பன்.
பின்புதான் ஜூன் ஜூலையில் நம்ம ஊர்ல விடுவதுபோல் லீவ் 2 மாததுக்கு.
பசங்க நலமா ஆல்த பெஸ்ட் சொல்லுங்க தங்கங்ளுக்கு..
Dr.P.Kandaswamy said...
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர் - குறள்.
குழைந்தைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
டாக்டர்சார் தாங்கைப்போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் குழந்தைகு என்றும்வேண்டும்.
குறளைச்சொல்லி குழந்தையையும் அதன் அம்மாவையும் மகிழச்செய்துவிட்டீர்கள்.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்..
சே.குமார் said...
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர் - குறள்.
அன்பு மகனின் ஆர்ட் அருமை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.//
குறளுக்கும். அன்பான வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி சே.குமார்
ஸாதிகா said...
மகனுக்கு வாழ்த்துக்கள்.மாஷாஅல்லாஹ்//
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே. மிக்க நன்றி
ஸாதிக்காக்கா..
முகமதுவின் படைப்புகள் எல்லாமே அருமை.. வாழ்த்துக்கள்..
ஓவியங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு....! குட்டி ஹீரோ முகமது மரூஃப் கு வாழ்த்துக்கள்!!!
நல்லபிள்ளையா நடந்துகிட்டா நிறைய முத்தம் தருவேன் என்றேன்.
உடனே சட்டென எழுந்து ஸ்டைலாக நடந்துவிட்டு திரும்பிப்பார்த்து என்ன மம்மி சூப்பராக நடந்தேனா என்று சொன்னாரே பார்க்கனும்......ரொம்ப ஸ்மார்ட் தான்!கலக்குறாரே!
உங்கள் மகன் வரைந்த படங்கள் அருமை
ஆண்டவன் அருளை பூரணமாக பெற எனது
வாழ்த்துக்கள்
dear sis i give lots of stars for the budding artist.he could use his pictures as digi stamps and use it for greeting card making.
Post a Comment