அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, October 15, 2010

ஒத்தையாளா நின்னு எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்!

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்




30 கோடி மாநில அரசு பணியாளர்கள்

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்


1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்


15 கோடி வேலை தேடுவோர்


1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்



ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்.


மிச்சம் இருப்பது நீயும் நானும். நீ எப்ப பார்த்தாலும் மெயில் அனுப்பறது/ படிக்கிறதுலேயுமே பிஸியாயிருக்கே!

அச்சோ நான் மட்டும் ஒத்தையாளா இருந்து  எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்.
[இந்த போட்டோ மட்டும் நம்ம தேர்வு ஹி ஹி]

இது எனக்கு மெயிலில் வந்த மெசேஜ்.
சிரிக்கும்படியாக இருந்தாலும் சிந்திக்கும்படியும் இருக்கு.



டிஸ்கி// எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பு எததுக்கோ விருது கொடுக்குறாக இதப்போல சிந்திக்கும் சங்கத்துக்குன்னு ஓரு விருதுகொடுக்கமாட்டேங்குறாங்களே!!!!!!!!!!!!!

அன்புடன் மலிக்கா

26 comments:

ஸாதிகா said...

இப்படி இருந்துகொண்டே நம் இந்தியா இந்தளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் இப்படி இல்லாமல் இருந்தால் எப்பவே வல்லரசாகி இருக்கும்.?மல்லி..மல்லி..நீங்களே இப்படி சொல்லலாமோ?//1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
//

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
இப்படி இருந்துகொண்டே நம் இந்தியா இந்தளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் இப்படி இல்லாமல் இருந்தால் எப்பவே வல்லரசாகி இருக்கும்.?
//

ஆமாம் அக்கா. எப்பவோ ஆகியிருக்கும். எப்ப ஆகனுமுன்னு இருக்கோ அப்ப ஆகும் அப்படின்னு அனைவரும் இருக்கோமோ:{{{

//மல்லி..மல்லி..நீங்களே இப்படி சொல்லலாமோ?//1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)//

நான் சொல்லைக்கா இது மெயிலில் வந்தது. ஆனாலும். அத்தனைபேரையும் சொல்லக்கூடாதுதான் இல்லையாக்கா..

Jayadev Das said...

இதையே எத்தனை பேர்தான் காப்பியடிச்சு போட்டுகிட்டே இருக்கப் போறீங்க?

சுதர்ஷன் said...

ஹி ஹி ஹி நீங்க நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க .... இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க ..

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

வெங்கடேஸ் குமார் said...

என்னோட பழைய இடுகையிலிருந்து எடுக்கவில்லையே ?

http://venkatposts.blogspot.com/

வெங்கடேஸ் குமார் said...

http://venkatposts.blogspot.com/

என்னோட இடுகையிலிருந்து எடுக்கவில்லையே ?

ஜெய்லானி said...

என்னது...!! காந்தி செத்துட்டாரா..?

Chitra said...

:-))

அன்புடன் மலிக்கா said...

Jayadeva said...
இதையே எத்தனை பேர்தான் காப்பியடிச்சு போட்டுகிட்டே இருக்கப் போறீங்க.//

ஆகா ஏற்கனவே போட்டுட்டாங்களா:{{{{{ எனக்குதெரியாது தேவ். இருந்தாலும் என்பங்குக்கு நானும் போட்டுட்டேன். போனாபோகுதுன்னு படிச்சிட்டு போனீங்களே.. ரொம்ப நன்றிங்கோ..

அன்புடன் மலிக்கா said...

S.Sudharshan said...
ஹி ஹி ஹி நீங்க நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க .... இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க ..

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
//

அச்சோ இத நான் சொல்லலீங்க மெயிலில் வந்தது ரெண்டே ரெண்டு போட்டோமட்டும் நான் போட்டேன் அவ்வளவுதான்.

இதோ வந்து பார்கிறேன்..

மிக்க நன்றிங்கோ..

அன்புடன் மலிக்கா said...

வெங்கடேசு said...
என்னோட பழைய இடுகையிலிருந்து எடுக்கவில்லையே ?

http://venkatposts.blogspot.com
//

என்ன வெங்கடேஷ் இப்புடி கேட்டுபுட்டீங்க. நாந்தான் மேலே சொல்லியிருக்கேனுல்ல இது எனக்கு மெயில்வழியா வந்ததுன்னு.

என் சொந்த ஆக்கங்களும் என் மெயிலுக்கு வரும் சில சுவாரஸ்யங்களும் மட்டுதான் எந்தளத்தில் வெளியிடுவேன் பிறரின் படைப்புகளை வெளியிட நான் ஏன் தளம் திறக்கவேண்டும்.ஓகேவா நான் உங்க பக்கம் இதுவரை வந்ததுகூட இல்லையே.

இதோ இப்பவந்து பார்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
என்னது...!! காந்தி செத்துட்டாரா..?//

அச்சோ அப்படியா{{{{{{{{{:}}}}}}}}
என்னாமா கெளப்புறாங்க பீதிய..ஆத்தாடி..

Chitra said...
:-)).//

என்னதிது சித்து அக்காமேடம்..

வார்த்தை said...

//...[இந்த போட்டோ மட்டும் நம்ம தேர்வு ஹி ஹி]...//

அடுத்தவங்க படைப்ப அப்படியே போடாம....
உங்களோட திறமையையும் சேர்த்து போட்டீங்க பாருங்க.... :)
இதுக்கே இந்தியாவுக்கு இன்னும் 1000 வருசத்துக்கு ஒண்ணும் ஆகாது...‌

அன்புடன் மலிக்கா said...

வார்த்தை said...
//...[இந்த போட்டோ மட்டும் நம்ம தேர்வு ஹி ஹி]...//

அடுத்தவங்க படைப்ப அப்படியே போடாம....
உங்களோட திறமையையும் சேர்த்து போட்டீங்க பாருங்க.... :)
இதுக்கே இந்தியாவுக்கு இன்னும் 1000 வருசத்துக்கு ஒண்ணும் ஆகாது
//
இதில் மூன்று படம் நம்ம தேர்வு அது ஒன்னுக்குமட்டும் போட்டுகிட்டேன்.

கடைசியா யோசிக்கிறதும் நாந்தான்.. ஹா ஹா ஹா.

1000 . வருசம் சூப்பர் இத இததான் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன் என்னையும் சேர்த்து..

மிக்க நன்றி வார்தை.
ஒரு வார்த்தையின்னாலும் திருவார்த்தை

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

நாடோடி said...

ப‌டித்த‌தாக‌ இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சிரித்து கொண்டேன்.. :)

Jaleela Kamal said...

ஏன் ஒத்தய ஆளா நானும் வரேன் கூட் ஜோடி போட்டுக்குட்டு போவோம்.

ஹா ஹா மெசேஜுக்கு ஏற்ற படங்கள் சூப்பர்

விஷாலி said...

வாருங்கள் நண்பரே. இப்படியே தனி ஆளா வருந்தவேண்டாம் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

Eeva said...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை .//

தங்களீன் வருகைக்கு மிக்க நன்றி.
எனக்கு தமிழில்மட்டுமே எழுதத்தெரியும் நண்பரே ஆகையால்
தமிழ்வலையாகயிருந்தால் நிச்சயம்போய் பதிகிறேன்..

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
ப‌டித்த‌தாக‌ இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சிரித்து கொண்டேன்..//

சிரித்தீங்கள் அப்பாடா அதுபோதும் அப்படியே கொஞ்சம் சிந்திச்சிட்டும்போனீங்களா ஸ்டீபன்..

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...
ஏன் ஒத்தய ஆளா நானும் வரேன் கூட் ஜோடி போட்டுக்குட்டு போவோம்.//

ஆகா பலத்த கரகோஷம் எழுப்புங்க எங்கக்காவும் கூடவராக அப்பாடா நிம்மதிபெருமூச்சி தவிச்சிக்கிட்டு நின்னேன் ஒத்தையாளா எப்புடிடான்னு.. தேங்ஸ்கா..

ஹா ஹா மெசேஜுக்கு ஏற்ற படங்கள் சூப்பர்..

அதில் 3 தான் நம்மோடத்து மத்தவைகளெல்லாம் இத சிந்திச்சவகளோடத்துக்கா..

அன்புடன் மலிக்கா said...

மனசாட்சியே நண்பன் said...
வாருங்கள் நண்பரே. இப்படியே தனி ஆளா வருந்தவேண்டாம் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்..//

நல்ல நண்பன். நண்பனா இப்படிதான் இருக்கோனும். கஷ்டமுன்னாலும் நஸ்டமுன்னாலும். இன்பமுன்னாலும். அனைத்திலும் பங்குகொள்ள நண்பந்தான் முன்வருவான். அதிலும் மனசாட்சியின் நண்பனென்றால் கேட்கவே வேண்டாம்.

தாளாரமாம தூக்கி நிப்பாட்டிடலாம்.

நண்பனுக்கு மனதார நன்றி..

ஹுஸைனம்மா said...

தனியா ஒத்தையாளா நிக்குறீகளே, துணைக்கு வரலாம்னு நினைச்சா, நீங்க அல்-அய்ன் ஃபன் சிட்டி மாதிரி தலைகீழா தொங்க விட்டுடுவீங்களோன்னு நினைச்சு பயமாருக்கு; நான் வரலைப்பா... :-))))

'பரிவை' சே.குமார் said...

enakkum mailil vanthu padiththirukkirean akka.

அந்நியன் 2 said...

இவ்வளவு புள்ளி விவரமா சொல்லியிருக்கியலே நீங்கள் கற்பனையாக எழுதியதா அல்லது உண்மையாகவா அக்காள் ?

இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற எங்களை போன்ற இழைஞர்கள் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அக்காள்.

எங்களைப் போன்ற படித்த பட்டாதாரிகளுக்கு அரசியலில் வேலை தந்தால் முதல் வேலையாக படித்த பட்டாதாரிகளுக்கு வேலை கொடுப்போம்.
போலி படிப்பு சான்றிதழ்களை வைத்துகொண்டு அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேலைப் பார்க்கும் இந்தியர்களைப் பிடித்து சிறையில் அடைத்து உண்மையான பட்டாதாரிகளுக்கு வேலை கொடுக்கும் படி மற்ற நாட்டினிடம் வேண்டுகோள் வைப்போம்.

ஊழல்,லஞ்சம்,ஹவாலா,ஏமாற்று செய்பவர்களுக்கு குறைந்த பட்ச்ச தண்டனையாக மரணத் தண்டனை கொடுப்போம்.

மதவேசம் போடும் அரசியல் வாதிகளின் முகத்திரையை கிழித்து நாடு கடத்துவோம்.

கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக பணத்தின் மதிப்பை பாதிக்குப் பாதியாக குறைப்போம்.

இப்படிலாம் நிறையா செய்யனும்னு ஆசையா இருக்கு அக்காள் ஏதாவது சிபாரிசு கடிதம் இருந்தால் தாங்களேன் அரசியலில் குதிக்க.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.