தேங்காய் துருவியது 1 கப்
நாக்கடுகு
[இதை இங்கிலீஸில் எப்படி சொல்வாங்கன்னு தெரியலை ஹா ஹா]
கருவேப்பில்லை
நார்தங்காய் ஊறுகாய்
சிகப்பு மிளகாய் காரத்திற்கேற்ப
சின்ன வெங்காயம்
உப்பு
நாக்கடுவையும் சிகப்புமிளகாவையும். வெறும் சட்டியை சூடாக்கி அதில் வறுக்கவும் மணம் வரும் அப்போது தேங்காயுடன் மற்றபொருளையும் சேர்த்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
அவ்வளவுதான் மிக ஈசியான சம்பல்.அதேசமயம் ரசம் சாதம் இறால்சாதம். தேங்காய் சாதம் இவைகளுக்கு நல்ல காம்பினேஷன். சும்ம படு சோக்க இருக்கும். சுட சுட சோறுவைத்து அதில் இதைசேர்த்து பிசைந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் தெரியுமா. அதெல்லாம் சொன்னாத்தெரியாது. சாப்பிட்டு பாருங்க..
இதுதானுங்க நாக்கடுகு
அதுக்குமேல தெரியாதுங்கோ வேணுமுன்ன கிஸ்ட்ரி எடுத்து பார்க்கலாம் எனக்குதான் தெரியாதே ஹி ஹி ஹி
அன்புடன் மலிக்கா
28 comments:
enna dish ithu ???
அடடா.. சூப்பர் ரெசிபி சொல்லிட்டு...
நாக்கடுகு எப்படி இருக்கும்பா..
அதையும் சொல்லுங்களேன்..
நீங்க சொல்லும் போதே சாப்டிடனும் போல இருக்கு :-))
LK said...
enna dish ithu ???//
இது ஒருவகை சம்பல். எங்க பகுதிபக்கம் தொட்டுக்கறி அதாவது சைடிஸ் என்பார்கள் கார்த்தி.
உங்கபக்கம் எப்படி சொல்லுவாங்கன்னு தெரியலையே:{
Ananthi said...
அடடா.. சூப்பர் ரெசிபி சொல்லிட்டு...
நாக்கடுகு எப்படி இருக்கும்பா..
அதையும் சொல்லுங்களேன்..
நீங்க சொல்லும் போதே சாப்டிடனும் போல இருக்கு :-))//
ஆனந்தி இதுவும் ஒருவகை கடுகு. கடுகைவிட மிக மிக சிறிதாக இருக்கும். கடுகுபோலவே கருப்பாக அதெசமயம் சற்று உற்றுப்பார்தால் இளம் கலரில் தெரியும் இது வறுக்கும்போது வாசனை செம தூளாக இருக்கும்.
7. மாதம் 9 மாத கர்ப்பினிகளுக்கு பலவகைகளில் சம்பல் செய்வார்கள் இதில் மெயினாக இதுவும் ஒன்னு..
கடுகை வறுத்தும் இதுபோல் செய்யலாம் அந்தவாசம் சற்று குறைவாக இருக்கும்..
கட்டி துவையல் - சூப்பர்! நன்றிங்க...
நாக்கடுகு பார்த்தது இல்லை , கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்கிறேன் , இது மாதிரி ,துவையல் எல்லாம் சுடு சாதத்தில் போட்டு சாப்பிடும் ருசி வாவ்......
என்னப்பாம் மலிக்கா அறியாத பெயரை எல்லாம் போட்டு சம்பல் பண்ணுறீங்கோ?நாக்கடுகு படத்தையாவது கண்ணில் காட்டி இருக்கலாமே?
கண்ணால் காண்பது பொய் , காதால் கேட்பது பொய் , சாப்பிட்டு டேஸ்ட் பார்பதே மெய்.....!!!! பார்ஸ்ல் பிளீஸ்..!!
நாக் கடுகை வச்சி ஒரு பதிவே போட்டுட்டேன் முன்னமே ஹா..ஹா...!!
////ஆனந்தி இதுவும் ஒருவகை கடுகு. கடுகைவிட மிக மிக சிறிதாக இருக்கும். கடுகுபோலவே கருப்பாக அதெசமயம் சற்று உற்றுப்பார்தால் இளம் கலரில் தெரியும் இது வறுக்கும்போது வாசனை செம தூளாக இருக்கும்/////
ஓ.. புரியுதுப்பா..
நா பார்த்து இருக்கேன்.
ரொம்ப நன்றி.. விளக்கம் தந்ததுக்கு.. :-))
ஐயோ பச்ச மிளகாவா .....
கடுகு இல்லையா இது?
செஞ்சு பாத்துடவேண்டியதுதான்!
மலிக்கா நல்லா இருக்கு சம்பல். ஸாதிகா அவங்க சொல்வது போல் அந்த படமும் கிடைத்தால் போடுங்க.
நல்ல ரெசிப்ப்பி.
சகோதரி, நீங்க செய்றது பெரும் பாவம்...இப்படி சின்ன வயசிலே நம் அதிராம்பட்டினத்து பக்கம் சாப்பிட்ட நாக்கடுகு தொட்டுக்கறி எல்லாம் ஞாபகப்படுத்தி ...உங்கள் சமயல் திறமையும் இன்டெர்னெட்டில் காண்பித்து பசியை உண்டாக்குவது பாவம்தானே...
மல்லி அனைத்திலும் உங்கள் கைவண்ணம் அப்ப்பா சொல்லவார்தைகளில்லை. சூப்பர் நாவில் நீர் ஊறுது..
ராஜராஜன்
மல்லி அனைத்திலும் உங்கள் கைவண்ணம் அப்ப்பா சொல்லவார்தைகளில்லை. சூப்பர் நாவில் நீர் ஊறுது..
ராஜராஜன்
நாவில் நீர் சுரக்கிறது. அதுசரி மல்லி
இது உங்க ஊர்பக்க ஸ்டெய்லா. நான் வந்தா சூடாசோற்றில்போட்டு பிசைந்துதருவீகளா..
Chitra said...
கட்டி துவையல் - சூப்பர்! நன்றிங்க...//
எல்லாம் உங்களுக்குதான் சித்து..
//சாருஸ்ரீராஜ் said...
நாக்கடுகு பார்த்தது இல்லை , கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்கிறேன் , இது மாதிரி ,துவையல் எல்லாம் சுடு சாதத்தில் போட்டு சாப்பிடும் ருசி வாவ்......//
ஆமாம் சாரூக்கா. சுடசுட சாப்பிடும் ருசியே தனிதான்..
கிடைக்கும்கா தஞ்சைவரும்போது அம்மாவிடம் கேட்டுப்பாருங்க..
ஸாதிகா said...
என்னப்பாம் மலிக்கா அறியாத பெயரை எல்லாம் போட்டு சம்பல் பண்ணுறீங்கோ?நாக்கடுகு படத்தையாவது கண்ணில் காட்டி இருக்கலாமே
//
என்னக்கா இப்படி சொல்லிப்புட்டிய அதுக்கு பெயர்தான் நாக்குக்கு ருசியா இருப்பதால அதுக்கு நாக்கடுகுன்னு வச்சிருக்காங்கபோல. ஹி ஹி ஹி.
படத்தையும் போட்டுடோமுல்ல. பாருங்க பாருங்க..
ஜெய்லானி said...
கண்ணால் காண்பது பொய் , காதால் கேட்பது பொய் , சாப்பிட்டு டேஸ்ட் பார்பதே மெய்.....!!!! பார்ஸ்ல் பிளீஸ்..!!//
வெள்ளைக்காக்கா மட்டும் வந்து ருசிபாத்தது.
கிண்ணத்தோடு தூக்கிவந்ததே தரலையா. அச்சச்சோ..
//நாக் கடுகை வச்சி ஒரு பதிவே போட்டுட்டேன் முன்னமே ஹா..ஹா...!!//
அதெப்போ..
// Ananthi said...
////ஆனந்தி இதுவும் ஒருவகை கடுகு. கடுகைவிட மிக மிக சிறிதாக இருக்கும். கடுகுபோலவே கருப்பாக அதெசமயம் சற்று உற்றுப்பார்தால் இளம் கலரில் தெரியும் இது வறுக்கும்போது வாசனை செம தூளாக இருக்கும்/////
ஓ.. புரியுதுப்பா..
நா பார்த்து இருக்கேன்.
ரொம்ப நன்றி.. விளக்கம் தந்ததுக்கு.. :-))//
மகிழ்ச்சி ஆனந்தி..
Mohamed Ayoub K said...
ஐயோ பச்ச மிளகாவா .....//
அதில் வைத்து அரைதது சிகப்பு மிளகாய். பயமுறுத வைத்தது பச்சைமிளகாய்.
ஏன் அய்யூஃப் இந்த அலறல்
//தெய்வசுகந்தி said...
கடுகு இல்லையா இது?//
இல்லை சுகந்தி இது நாக்கடுகு..
DrPKandaswamyPhD said...
செஞ்சு பாத்துடவேண்டியதுதான்!//
செய்துபாருங்க டாக்டர். அப்புறம் நல்ல ருசியாயிருக்கேன்னு சாப்பிட்டுகிட்டே இருக்கப்போறீங்க. கொலஸ்டால் ஏறிடபோகுது. ஏன்னா அதில் மெயினா தேங்காய் இருகுல்ல.
அட இதல்லாம் நம்மகு சாதாரணம்ப்பா. அப்படிங்கிறீங்க. ஒருபுடி புடிங்க..
// Vijiskitchen said...
மலிக்கா நல்லா இருக்கு சம்பல். ஸாதிகா அவங்க சொல்வது போல் அந்த படமும் கிடைத்தால் போடுங்க.
நல்ல ரெசிப்ப்பி./
நன்றி விஜி.
என்னப்பா ஒருபோட்டோவே போட்டுயிருக்கேன் அதற்குகீழ் விளக்கம்வேறு கொடுத்திருக்கேன் ஹூம்ம்ம் அழுவுறேன் விஜி..
ZAKIR HUSSAIN said...
சகோதரி, நீங்க செய்றது பெரும் பாவம்...இப்படி சின்ன வயசிலே நம் அதிராம்பட்டினத்து பக்கம் சாப்பிட்ட நாக்கடுகு தொட்டுக்கறி எல்லாம் ஞாபகப்படுத்தி ...உங்கள் சமயல் திறமையும் இன்டெர்னெட்டில் காண்பித்து பசியை உண்டாக்குவது பாவம்தானே...//
வாங்க வாங்க.
என்ன இப்படி சொல்லிபுட்டீங்க பாவமுன்னு.நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமேன்னு போட்டேன்.
ஆமாமா பாவந்தான் பிறரை பார்க்கவைத்து அதுவும் நாவில் நீர் ஊறவைத்து நாம்மட்டும் சாப்பிட்டால் அதுசரியல்லதான்.
மிக்க நன்றி வருகைக்கும் அன்பான கருதிற்க்கும்..
/ராஜராஜன் said...
மல்லி அனைத்திலும் உங்கள் கைவண்ணம் அப்ப்பா சொல்லவார்தைகளில்லை. சூப்பர் நாவில் நீர் ஊறுது..//
ராஜராஜன்//
வாங்க ராஜணண்ணா. ரொம்ப நன்றிண்ணா.
சூப்பர் ரெசிபி...........
நாக்கடுகு படத்தை சேர்த்த மல்லிக்கு ஒரு ஓஓஓஓ....இது தானியவகையைச்சேர்ந்ததா?யாரவது என் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.
வித்தியாசமான, சுவையான நாக்கடுகு சம்பல்!
ரொம்ப நாளாச்சு இந்த நாக்கடுகு பார்த்து! சின்ன வயதில் என் பாட்டி எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பது இது! இப்போது எங்கு கிடைக்கும் என்றே தெரியவில்லை!
துவையல் சூப்பர், எஅன்க்கும் இது எபப்டி இருக்குமுன்னு சரியா தெரியல.
எனக்கு நாக்க அடுக்கு என்று சொன்னது போல் நினைத்து கொண்டேன் ஹிஹி.
ஆனால் கடுகு போல் அதுட்டன் நார்த்தங்காய் சேர்த்து ஸ் இப்ப ஏ சப்பு கொட்டுது.
இன்று நான் கொள்ளு துவையல், இது வாங்கிய பாக்கெட்டில் என்ன பெயர் இருந்தது என்று பார்த்து சொல்லுங்கள்.
தேடி பார்க்கிறேன்
நாக்கடுகு எப்படியிருக்கும்?
இது புதுவகையா இருக்கு.
Post a Comment