Saturday, October 30, 2010
நல்லெண்ணை சாதமும், மருத்துவமும்..
தேவையானவைகள்..
நல்லெண்ணை 2 குழிக்கரண்டி
சிறிய வெங்காயம் 150 கிராம்
முட்டை 1
மிளகுதூள் 1 ஸ்பூன்
உப்பு
சோறு 2.கப்.
நல்லெண்ணையை சூடுவந்ததும் வெங்காயத்தை வதக்கவும்
வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளறவும் எண்ணையின் சத சதப்பிலேயே
மிளகுத்தூளை போட்டு ஒருகிண்டி கிண்டி சோற்றைப்போட்டு எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு
இறக்கி இளம்சூட்டோடு பிடித்து பிடித்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும்
தொண்டைவலி தலைச்சூடு திடீர் வயிற்றுவலி போகும் என என் அம்மாவின் அம்மா செய்து தரும் பலனும் கிடைத்திருக்கு.
இது சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------
நல்லெண்ணையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.
நல்லெண்ணையை தலை முதல் கால் வரை தேய்த்துக் குளிப்பதால் உடல் சூட்டைக் குறைக்கிறது.உடலில் படியும் அழுக்கையும், எண்ணெய் பசையையும் அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைக்கவும் இது உதவும்.
மேலும் பூப்படையும். [வயதுக்குவரும்] பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதற்குக் கொடுக்கலாம்.
அவ்வாறு கொடுப்பதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படும். மேலும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணை செய்கிறது என்பது அக்காலம் தொட்டுவரும் சிறப்[பு]மாம்.
இதன் தனிச்சிறப்பு. உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை, ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையும் செய்கிறது.
டிஸ்கி//நல்லதுன்னு சொன்னா நல்லாக்கேட்டுகோனும் புரிஞ்சிதோன்னோ..
அன்புடன் மலிக்கா..
Labels:
ருசியோ ருசி
Subscribe to:
Post Comments (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
13 comments:
/ல்லதுன்னு சொன்னா நல்லாக்கேட்டுகோனும் புரிஞ்சிதோன்னோ..//
புரிஞ்சது..
தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யவில்லையா ?? வோட்டுப் போடா முடியவில்லை
Nal ennaththudan ezuthappatta nalennaip pathivu...
miga nalla pathivu akka.
பேரே சொல்லுதே, “நல்ல எண்ணெய்”னு!! எங்க ஊர்ல இதுதான் இப்பவும் அதிகம் பயன்படுத்தப்படுவது.
super healthy recipe. My gandma will make I like this very much.
ஓஹோ.... இதுல இப்பிடி வேற இருக்கா..!! ஆனா ஒரு முட்டை நமக்கு வேலைக்காகாதே..!! கொறஞ்சது மூனாவது வேனுமே..!!
நல்ல எண்ணெய் நல்ல பதிவு ..!! :-))
நல்லெண்ணையை பெற்றி நல்லெண்ணத்துடன், நீங்கள் நல்கிய பதிவு - நல்லா இருக்குங்க. நல்வாழ்த்துக்கள்!
நல்ல சத்தான சாப்பாடு.எனக்கு மிகவும் பிடித்ததும் கூட.இதில் மிளகுக்கு பதிலாக வறுத்தரைத்த மிளகாய்த்தூள்(சில்லி பிளேக்ஸ்) சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
it is true. sesame seed has power to heel wounds. If you have peptic ulcer you can use Sesame Oil with Idly [without chutney / sambar] and eat that will cure your ulcer.
நல்லா இருக்கு மல்லி .மீள் பதிவா பதிவா படித்த மாதிரி ஞாபகம் .
சாருஸ்ரீராஜ் said...
நல்லா இருக்கு மல்லி .மீள் பதிவா பதிவா படித்த மாதிரி ஞாபகம்.//
சாருக்கா. இது தமிழ்குடும்பத்தில் நல்லெண்ணைசாதம் அப்படின்னு போட்டேன். அதோடு தற்போது மருத்துவமும் இணைத்து இதில் போட்டுள்ளேன் க்கா..
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
அண்ணாத்தே நீங்க தாளரமா 10 முட்டை சேத்துக்கலாம்..இதில் நோ அப்ஜக்ஷன்..
ஸ்திக்காக்கா காரம்பிடிப்பவர்கள் அப்படியும் சேர்கலாம் சுவையும் வித்தியாசமாகயிருக்கும்..
மலிக்க்கா நாங்களும் இத செ்்வோம். கர்பி்ி பென்க்ுகு சு்்ப்பிரசம் ஆக செ்்ுு ்ொ்ுப்போம்
ுகூடுதல் தகவல் நன்றி
Post a Comment