தேவையானவை
ரெடிமேட் பரோட்டா 5
முட்டை 1
மட்டன் கொத்துக்கறி 1கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
கரம் மசலா 1 ஸ்பூன்
உப்பு
ஆயில்
ரெடிமேட் பரோட்டாவை சற்று வளத்து அதன்மேல் 1ஸ்பூன் முட்டைக்கலவை எடுத்து சுற்றிலும் தடவிவிட்டு
அதற்குமேல் இந்த உள்ளடம் வைத்து இதுபோன்று
நான்குபுறமும் மடக்கி.
பரோட்டாக்கல் சூட்டானது 1/2 ஸ்பூன் ஆயில் விட்டு அதுவும் சூடானதும் இந்த மடித்த முர்தபாவை போட்டு
இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்
இதை கோழி மற்றும் கறிக்குழம்போடும் சாப்பிடலாம். சும்மா சாப்பிடவே செமடேஸ்டாக இருக்கும்.
இதில் சோசேஜ் கீமா செய்தும் இதனுள் வைக்கலாம் நம்முடை டேஸ்டுக்கு தகுந்தார்போல் அந்த நேரத்தில் எது இருக்கோ அதைவைத்து ஒரு ஈஸி முர்தபா செய்துகொள்ளலாம்.
நான்வெஜ் சாப்பிடாதவங்க இதில் காய்கறி மிக்ஸ் செய்து அதில்வைத்து சேர்த்து சாப்பிடலாம்..
உடனடி முர்தபா செய்ய சுலபமான வழி..
அன்புடன் மலிக்கா
18 comments:
உள்ளேன்
படங்களுடன் பார்க்க அழகா இருக்கு. பார்சல் கிடைக்குமா?
உண்மையில் வெகு சுலபமாக செய்யக்கூடிய முர்தபாதான்.பொன்முறுவலாக பார்க்காவே அழகாக உள்ளது மலிக்கா
ஈசி முர்தபா நல்லா இருக்கு தோழி. ரெடிமெட் பரோட்டா என்றால், ரெடிமேட் சாதா பரோட்டா சுற்றி வைத்திருப்பார்களே அதுவா மலிக்கா? அல்லது சுற்றாமல் சப்பாத்தி போல் இருக்குமா?
thanks for sharing.good idea.
அட ரெடி மேட் பரோட்டாவில் ஈசியா முடித்து விட்டீர்களே.
அஸ்மா said...
ஈசி முர்தபா நல்லா இருக்கு தோழி. ரெடிமெட் பரோட்டா என்றால், ரெடிமேட் சாதா பரோட்டா சுற்றி வைத்திருப்பார்களே அதுவா மலிக்கா? அல்லது சுற்றாமல் சப்பாத்தி போல் இருக்குமா?//
தோழி.இந்த பரோட்டா சுற்றாமலிருக்கும் சுட்டெடுக்கும்போதுமட்டும்தான் பரோட்டாபோல்வரும்.
அந்த பரோட்டாவை சற்று வளத்துவிட்டால் அதன்மேல் உள்ளடம்வைத்து இதுபோல் வைத்து செய்யலாம் அஸ்மா.
LK said...
உள்ளேன்
//
உள்ளேன் ஐயா என்பதுபோலவா சகோ.
சே.குமார் said...
படங்களுடன் பார்க்க அழகா இருக்கு. பார்சல் கிடைக்குமா?//
ஓ தாளாரமாக..
எத்தனை வேணும் குமார்..
ஸாதிகா said...
உண்மையில் வெகு சுலபமாக செய்யக்கூடிய முர்தபாதான்.பொன்முறுவலாக பார்க்காவே அழகாக உள்ளது மலிக்கா.//
ஆமாக்கா சுலபமும்கூட அத்கேசமயம் நல்லடேஸ்டும் இருக்கும்..நன்றிக்கா..
asiya omar said...
thanks for sharing.good idea.//
நன்றி ஆசியாக்கா.
Jaleela Kamal said...
அட ரெடி மேட் பரோட்டாவில் ஈசியா முடித்து விட்டீர்களே.//
ஆமாக்க ரொம்ப ஈஸி
ஆஹா...இப்படி படங்களை போட்டு ஆசையினை அதிகம் செய்கின்றிங்க...
கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வந்துவிட வேண்டியது தான்...சூப்பரகா இருக்கு...
இப்படி சுடாத பரோட்டா ரெடிமேடாகக் கிடைக்கிறதா மலிக்கா? என்ன பிராண்ட் சொல்லுங்களேன்.
அப்புறம், இதில் மடித்து வைத்து இருக்கும் இடங்கள் நல்லா வெந்துவிடுமா? ஒரு சந்தேகம்.
இந்த மாதிரி ஐட்டம்லாம் பாக்குரதோட சரி
ஹுஸைனம்மா said...
இப்படி சுடாத பரோட்டா ரெடிமேடாகக் கிடைக்கிறதா மலிக்கா? என்ன பிராண்ட் சொல்லுங்களேன்./
நிறைய இருக்கு ஹுசைனம்மா
ஹயாத் என்ற பிராண்ட்தான் நாங்க அடிக்கடி வாங்குவது இருபாக்கட்சேர்த்து ஆஃபர் போடுவாங்க. 1ஒன்றில் 10 பரோட்டாஇருக்கும் இரண்டும் சேர்த்து 13 திர்கம் அல்லது 15 திர்கம் இருக்கும்.
//அப்புறம், இதில் மடித்து வைத்து இருக்கும் இடங்கள் நல்லா வெந்துவிடுமா? ஒரு சந்தேகம்
//
அதெல்லாம் வெந்துடும் அந்த பரோட்டா சற்று மெல்லியதாகத்தானிருக்கும். சுட்ட பரோட்டாவை சூடாக சும்மாவே சாப்பிடலாம்.
1. 2. நிமிடத்தில் சுட்டு விடலாம் சாதா பரோட்டாவை..
GEETHA ACHAL said...
ஆஹா...இப்படி படங்களை போட்டு ஆசையினை அதிகம் செய்கின்றிங்க...
கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வந்துவிட வேண்டியது தான்...சூப்பரகா இருக்கு.//
கண்டிப்பா வந்துடுங்க வித விதமா சமைச்சுதாரேன். ஆனா டேஸ்டுயில்லைனெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது டீலிங் ஓகேவா கீத்து..
THOPPITHOPPI said...
இந்த மாதிரி ஐட்டம்லாம் பாக்குரதோட சரி//
ஏன் அதுகூட சண்டையா..
Post a Comment