இது என்னுடைய 100,வது பதிவு. எந்தளத்திற்க்கு வந்து என்படைப்புகளை தவறாமல்படித்தும் கருத்துக்கள் தந்தும் என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என்மனமார்ந்த நன்றிகள் பல பல.. தொடர்ந்து ஊக்கமென்னும் கருத்துமழை பொழியட்டும்.
சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்
தேவையானவை
சமுன்
சிக்கன்
குக்கும்பர் [வெள்ளரி]
சீஸ்
கெச்சப்
மிளகு
சாட் மசாலா
ஆயில்
உப்பு
சிக்கனை சிறிய சிறிய பீசாக்கி அதை சாட்மசாலா.மிளகுத்தூள் உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு பீங்கன் தட்டில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு அதன் மேல் இந்த கலவையை போட்டு லேசாக கலந்து அதை 15 நிமிடம் ஓவனில் வைத்தால் இதுபோன்று ரெடியாகிவிடும்.
அதை சமுனில் நடுபாகம் கீரி அதனுள் சீஸ் அல்லது மயோனஸ் தடவி அதன்மேல்
தேவைக்கேற்ப சிக்கன் வைத்து
அதன் மேல் நறுக்கிய குக்கும்பர் வைத்து பிரியப்பட்டால் அதன்மேல் கெச்சப் அல்லது சில்லிசாஸ் போட்டு மூடி
அதை ஒரு டிஷுவில் சுற்றி மேல்பாகத்தை திறந்து சாப்பிடவும்.
”இது தான் சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்”
சிக்கனுக்கு பதிலாக முட்டையும் வேகவைத்து கட்செய்து அதனுள் வைக்கலாம். வெஜிட்டபிள் அரைவேக்காடாக வேகவைத்தும் அதனுள் வைத்து சாப்பிடலாம்..சாப்பிடக்கொடுக்கலாம்..
இன்னும் இந்த சமுனில் நிறைய வெரைட்டிகள் செய்யலாம். குழந்தைகளின் ரசனைக்கேற்ப. ருசிக்கேற்ப..
டிஸ்கி//இதெல்லாம் பிடிக்காதவங்க இந்த சமுனை காபியிலோ. டீயிலோ நனைத்து சாப்பிடலாம். அதுவும் பிடிக்கலையே சும்மா அப்படிய்ய்யே சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அப்புறம் தொண்டையில் போய் அடைச்சிக்கிச்சின்னா நான் வந்து தண்ணீரோ வெந்நீரோ தர இயலாது சொல்லிப்புட்டேன்.
இது தமிழ்குடும்பத்திற்காகன 4.வது போட்டிக்குறிப்பு.
முடிந்தால் இங்கும் சென்று கருத்திடுங்கள்.
அப்புறம்
ஆனந்தி தந்த அன்பான நட்பு.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டா இதை வெளியிடுவதற்கு
கோவிச்சிக்காதீங்க ஆனந்தி..நீங்க 100,வது க்கு தந்த விருதை.
என் நூறாவது பதிவில் வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்..
நன்றி ஆனந்தி
என்றும் உங்கள் நட்பாய்
அன்புடன் மலிக்கா